நன்றி நண்பரே, தங்களுடனான பரிச்சயமே முதலில் மோதலில் தான் துவங்கியது ஆனால் காலப்போக்கில் தங்களுடயது சிறந்த நட்பாக நான் எண்ணுமளவுக்கு இருந்தது. எவ்வளவோ பேசியிருப்போம், வாதிட்டிருப்போம் ஆனால் அனைத்துமே பக்தி விருத்திக்குண்டானதே என்பதை எண்ணி ஆண்டவரை துதிக்கிறேன். தமிழ் கிறிஸ்தவ தளத்தின் extended arm ஆக உங்களுடைய தளம் இருக்கிறது குறித்து பாராட்டுக்கள்.
நாம் இந்த மேசியாவின் எதிரிகளோடு தீவிரமான மோதலில் பல மணி நேரங்களை செலவிட்டிருக்கிறோம் ஆனால் நேரடி பலன் என்னவோ ஒன்றும் இல்லை, வேதத்தின் ஒவ்வொரு வசனத்தையும் ரசல் தரும் வெளிச்சத்தில் பார்த்து குழம்பி மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர். இது நிச்சயம் முடிய போவதில்லை ஆனால் யாராவது ஒரு ஆத்துமா கூட வழி விலகி போகக்கூடாது என்பதால் முகமறியா இவைகளுடன் போரடி வருகின்றோம். நாம் விட்டு வைத்திருக்கும் எழுத்துக்கள் இந்த இணையம் என ஒன்ரு இருக்கும் வரை நிச்சயம் இவர்களுக்கு உறுத்தலாகவும் முள்ளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
போராடி போராடி களைத்துவிட்டதாலும் என்னையறியாமலே வெஞ்சினத்தில் வார்த்தைகளை பயன்படுத்திவிடுவதாலும், இனி இவர்களுடைய தளங்களை நான் பார்வையிடப்போவதில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதனால் எனது சாட்சியும் பங்கமடைவதால், இந்த முடிவை பல நாட்களாக யோசித்து இப்போது எடுத்திருக்கிறேன். இனிமேல் அங்கிருந்து நீங்களோ யாராவது நண்பரோ அவர்களது பதிவுகளை கொண்டுவந்தால் பிரச்சனைகளின் அடிப்படையில் பதில் அளிக்கலாம் என்றெண்ணியுள்ளேன்.
எவ்வளவோ காரியங்கள் உரையாடுவதற்கு இருக்கின்றன, இனிமேல் மற்ற பதிவுகளில் அதிக கவனம் செலுத்தலாம் என்றெண்ணியுள்ளேன், தங்களுடைய தள்த்திற்கு நான் வருவது தொடரும்.
நமக்கு அருமையான நண்பர் ஜோசப் அவர்கள் 100 பதிவைக் கடந்து நம்முடைய தளத்தில் குறிப்பிடத்தகுந்த பணியை ஆற்றியிருக்கிறார்;அவர் அமைதியாக ஆற்றியுள்ள பணிகளையும் அவருடைய உணர்வுகளையும் குறித்து மகிழுகிறேன்;மிகவும் அமைதியான எளிமையாகப் பழகும் அருமை சகோதரரை நண்பராக அடைந்தது குறித்து பெருமைப்படுகிறேன்;அவர் எளிதில் உணர்ச்சிவசப்படமாட்டார்,ஆனால் அவரே பொங்கியெழும் அளவுக்கு நிலைமை தீவிரமாக இருக்கிறது;நம்முடைய ஆண்டவரும் பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தம் பண்ணச் சொன்னார்;நியாயத்தீர்ப்பு சபைக்குள்ளிருந்தே துவங்குமாம்;எனவே நான் ஓங்கி அறிவிக்க நினைத்த காரியங்கள் தமிழ் கிறிஸ்தவ இணையத்தைச் சென்று சேர்ந்தது குறித்து அதிக மகிழ்ச்சி;இனி அடுத்த கட்டத்துக்கு முன்னேறி ஆக்கப்பூர்வமான விதத்தில் பணியாற்ற நானும் ஆயத்தமாகிறேன்;
நான் அவருடைய பங்களிப்பைக் குறித்து தவறாக எண்ணியிருந்தேன்;ஆனால் திரும்பிப்பார்த்தபோதே தெரிந்தது,அவர் வலுவான வாதத்துடன் கூடிய அருமையான எட்டு பதிவுகளைத் துவக்கியிருக்கிறார்;ஒரு பின்னூட்டத்தைப் போடுவது எளிது;ஆனால் வலுவான வாதத்துடன் கூடிய ஒரு திரியைத் துவக்குவது அது வெற்றியடைவதும் கடினம் அல்லவா? அந்த வகையில் ஜோசப் அவர்கள் துவக்கியுள்ள எட்டு தலைப்புகளும் மிக மிக சென்ஸிடிவான விஷயம் சம்பந்தமானதாகும்;மேலும் ஏதோ ஓரிரு வரிகள் மாத்திரமே கருத்து சொல்லிவிட்டு போய்விடாமல் ஆக்கப்பூர்வமாக பணியாற்றியிருக்கிறார்; பாராட்டுக்கள்,ஜோசப்..!
நண்பர் ஜோசப் அவர்கள் மாத்திரமல்ல,நம்முடைய தளத்தில் பங்காற்றிவரும் ஒவ்வொரு கண்மணிகளுமே எனக்கு விசேஷமே; ஏனெனில் நீங்கள் "யௌவன ஜனம்" (இந்த பெயர் காரணத்தைக் குறித்து யாரும் இதுவரை கேட்கவில்லையே..?)
இதோ அவரால் துவக்கப்பட்ட திரிகளை வாசகர்தம் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்....