ஒருவர் ஏராளமான திறமைகள் உடையவராக இருந்தும் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு பிரயோஜனமில்லாதவர்களாக இருக்க முடியும். ஒரு திறமையும் இல்லாமல் தேவனுக்கு மிகவும் பிரயோஜனமுள்ளவராகவும் ஒருவர் இருக்க முடியும். தேவனுக்கு எந்தளவுக்கு நாம் விட்டுக் கொடுத்து கீழ்ப்படிகிறோம் என்பதில் தான் நாம் ஆவருக்கு எந்தளவுக்கு பயனுள்ளவராக இருக்க முடியும் என்பதைத் தீர்மானிக்கிறது.
ஒருவன் தன்னிடம் ஏதோ சில திறமைகள் இருப்பதாக நினைப்பதும் சரி, தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று சொல்லுவதும் சரி, இரண்டுமே ஆண்டவருக்கு பிரியமில்லாதது. முந்தியது அதிகப்படியான நினைப்பு எனில் பிந்தையது தாழ்வு மனப்பான்மையின் விளைவாகும். ஆனால் திறமைகளைக் கண்டுபிடிப்பதும் சரி, பயன்படுத்துவதும் சரி, சிருஷ்டிகருக்கே உரியது ஆகும். அப்படியானால் தான் பயன்படுத்தப்படவேண்டும் என்று நினைப்பவன், என்ன செய்யவேண்டும் ? தன் சிருஷ்டிகரையே நோக்கியிருக்க வேண்டும்.அவர் சொல்லும் எதையும் செய்ய ஆயத்தமுள்ளவனாக இருக்கவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)