பிரசங்கி:9:5,6=5) உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.6) அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. மேலே குறிப்பிட்டுள்ள வேத வசனங்களில், மிகவும் நெருங்கியவராக இருப்பினும், அவர்கள் தங்கள் சினேகத்தை மறந்துபோவார்கள் ஆகவே,நம்மையே மறந்த பிறகு, நம்மை குறித்து வேண்டுதல் செய்ய இயலாது
நல்லதொரு கருத்து பதிவுக்கு நன்றி நண்பரே.தாங்கள் இதுகுறித்து அறிந்திருக்கக்கூடிய மேலகதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும். அவை அனுபவத்தின் அடிப்படையில் அல்லாமல் வேதவசனத்தின் அடிப்படையில் இருந்தால் நல்லது. வேத வசனமும் சரியான விதத்தில் வியாக்கியானம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறிஸ்துவுக்குள் பிரியமான சில்சாம் அவர்களே, பிரசங்கி:9:5,6=5) உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.6) அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. மேலே குறிப்பிட்டுள்ள வேத வசனங்களில், மிகவும் நெருங்கியவராக இருப்பினும், அவர்கள் தங்கள் சினேகத்தை மறந்துபோவார்கள் ஆகவே,நம்மையே மறந்த பிறகு, நம்மை குறித்து வேண்டுதல் செய்ய இயலாது
இன்று ஒரு ஆறுதல் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிந்தபோது எழுந்த கேள்வி...செய்தியாளர் சொல்லுகிறார், ”நம்மை விட்டு பிரிந்து இப்போது பரலோகத்தில் இளைப்பாறிக்கொண்டிருக்கும் ஐயா அவர்கள் இப்போது நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருப்பார், எப்படி,’ஆண்டவரே, நான் பூமியில் இருந்து இதோ இங்கு வந்துவிட்டேன், நான் அங்கிருந்த வரைக்கும் சாட்சியை காத்துக்கொண்டேன், இப்போதும் எனது பிள்ளைகளை உமது அன்பில் காத்துக்கொள்ளும்’, என்பதாக...” இது வேதத்தின்படி சரியா என்பதே என்னுடைய கேள்வி..!