சுயபுத்தி இருக்கணும். அல்லது சொல்புத்தியாவது இருக்கணும். எதுவும் இல்லாத இவர்களை என்னதான் செய்வது?
பொதுவான விதி ஒரே தரம் மரிப்பது என்று இருந்தாலும் மரித்து உயிர்த்து பின் மரித்து என்று இருமுறை மரித்தவர்கள் இருக்கிறார்கள். இது விதி விலக்கு. மரிக்காமல் மேலே போனவர்களும் விதிவிலக்குதான்.புசிக்கும் நாளில் சாவாய் என்றுதான் ஆண்டவர் சொன்னார். ஆனால் சாகவில்லை. இதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்கிறார்களோ தெரியவில்லை. ஏன் ஆண்டவர் பொய் சொன்னார் என்று சொல்ல மாட்டேன் என்கிறார்களோ, தெரியவில்லை.
மரணம், ஆவி, ஆத்துமா பற்றி உள்ள மற்றெல்லா வசனங்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, பிரசங்கியில் உள்ள ஒரு சில வசனங்களளை மட்டுமே பிடித்துக் கொண்டு, உளறிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஏனோக்கு மரணத்தை காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டது!! ஏனோக்கு யாருடைய மரணத்தை காணாமல் போனான்!! தன் மரணத்தையா? தன் மரணத்தை காணும் யாராகிலும் இருந்தால் சொல்லுங்கள்!! எடுத்துக்கொள்ளப்பட்டது என்கிற வார்த்தை எதை சொல்லுகிறது? ஒரு வேளை ஏனோக்கு சாகாமலே பரலோகத்திற்கு சென்று விட்டார் என்று எழுதப்பட்டிருந்தால் நிச்சயமாக இயேசு கிறிஸ்து வேதத்தில் இப்படி சொல்லியிருக்க மாட்டார்!!
பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை என்று இயேசு கிறிஸ்து பொய் சில்லியிருக்கிறார் என்று சொல்லுகிறது அன்பு அவர்களின் ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சம்பவம்!!
Chillsam:-
ஏனோக்கு மரணத்தைக் காணாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று வேதம் தெளிவாகச் சொல்லியிருக்க (மேசியாவின்) எதிரிகளான வேதப்புரட்டர்கள் தங்களை வேதமாணாக்கர் என்று சொல்லிக்கொண்டு அதனைக் கற்றுக்கொள்ள மனமில்லாமல் கற்றுக்கொடுக்க துணிகரங் கொண்டார்கள்; தங்களுடைய விகாரமான கொள்கைகளை நிறுவுவதற்காக வேத வசனத்துக்கு சொந்த வியாக்கியானங்களைக் கொ(கெ)டுத்துக்கொண்டிருக்கின்றனர்; ஆனால் வேதமோ சொந்த விளக்கங்களையும் வியாக்கியானங்களையும் தருவதற்கு ஒருவருக்கும் அனுமதியளிக்கவில்லை.
"வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது." (2.பேதுரு.1:20)
இவர்களோ ஒருபுறம் முன்னணி கிறிஸ்தவ தலைவர்களைத் தாக்கிக்கொண்டே அவர்கள் செய்வதாக இவர்களால் சொல்லப்படுகிற தவறுகளை தாங்களே செய்துகொண்டிருக்கிறார்கள்; உதாரணமாக கீழ்க்காணும் வேத வாக்கிய்ம சொல்லுகிறது,
"ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்." (ஆதியாகமம்.5:24)
எடுத்துக்கொள்ளப்படுதலுக்கும் மரணம் அடைவதற்கும் உள்ள வித்தியாசத்தினை இந்த வசனம் அமைந்துள்ள முன்பும் பின்பும் உள்ள வசனங்களை வாசித்தாலே போதுமானது;ஆனாலும் பொறுக்கி"யெடுத்தே பழக்கமாகிவிட்ட இந்த கயவர்கள் தங்கள் சொந்த வியாக்கியானங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
"யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்." (ஆதியாகமம்.5:20)
"மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்."(ஆதியாகமம்.5:27)
மரிப்பதற்கும் எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் வித்தியாசத்தை வேதமே சொல்லியிருக்க மேலும் முன்னோர்களின் இந்த அட்டணையில் அனைவரையும் மரித்தார்கள் என்று குறிப்பிட்டு ஒருவரை மாத்திரம் வேதம் எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று சொல்லியிருக்க அதனை மூர்க்கத்தர்னமாக மறுத்துவிட்டு அதற்கு இன்னொரு விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே, அதனைப் பார்க்கையில் இவர்களுடைய மதியீனத்துக்காக பரிதாபப்படுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது போலும்; ஆனாலும் வேறு யாரும் இதுபோன்று வேதத்தை வியாக்கியானம் செய்யக்கூடாது என்று எச்சரிக்கவே இவற்றை எழுதிக்கொண்டிருக்கிறோம்;(மேசியாவின்) எதிரிகளின் சிறுபிள்ளைத்தனமான வியாக்கியானத்தை வாசிக்கையில் மனதில் தோன்றியதை இங்கே வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன்.
ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பதற்கு மரணமின்றி உயிரோடு வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்பது பொருளாக இருக்கமுடியாது என்பதற்கு ஆதாரமாக அவர்கள் கொடுத்துள்ள வாக்கியமானது,
இந்த வசனத்திலிருந்து எனக்குத் தோன்றியது என்னவென்றால் இந்த வசனத்தை வைத்து ஏனோக்கு மரணமின்றி எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்கமுடியாது என்பதே; எப்படியெனில் ஏனோக்கு மண்ணிலிருந்து தோன்றியவன்; அவன் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; ஆனால் இயேசுவானவர் விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார்.
"அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல." (யோவான்.8:23)
மாத்திரமல்ல, அவர் பூமியின் தாழ்விடங்களுக்கும் பயணித்தார்;மீண்டும் விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பதனை வலியுறுத்தும் ஒரு வசனத்தை வைத்து ஏனோக்கு விண்ணுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதை நிரூபிக்கமுடியாது.
"ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார்.
ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?
இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்." (எபேசியர்.4:8,9,10)
ஏனோக்கு பரலோகத்திலிருந்திறங்கினான் மீண்டும் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான் என்று நாம் சொல்லவில்லையே,இயேசுவானவர் மட்டுமே பரலோகத்திலிருந்து இறங்கினவரும் பரலோகத்திருக்கிறவருமானவராக இருக்கிறார் எனபதையே விசுவாசிக்கிறோம்; ஆனால் (மேசியாவின்) எதிரிகளோ இயேசுவானவர் பரலோகத்திலிருந்ததை நம்புகிறதில்லை; அவர் சிருஷ்டிக்கப்பட்டவர் என்கிறார்களே, எனவே இவர்களுக்கெதிராக உள்ள வசனத்தையே உள்நோக்கத்துடனும் சூழ்ச்சியுடனும் வேறொரு காரியத்துக்கு பயன்படுத்துவதில் தேர்ந்த தந்திரவாதிகள் என்பது விளங்குகிறது.
இதனால் (மேசியாவின்) எதிரிகள் தங்கள் அரைகுறையான அறைகுறை வேத ஞானத்தை வெளியரங்கமாக்கியிருக்கிறார்கள்;இவர்களுடைய தலைவர் (இரஸல்) தனக்கு கிரேக்க மொழியில் புலமையுண்டு என்று பட்டப்பகலில் கோர்ட்டில் அனைவர் முன்பாகவும் கூறி அவமானப்பட்டு கோர்ட்டாரால் கண்டிக்கப்பட்டவர்தானே;அந்த கள்ளனைப் பின்பற்றுவோரும் அப்படியே இருப்பார்கள்; இன்னும் கேட்டால் அதிகபட்சமாக என்ன சொல்லி தப்பிப்பார்கள் தெரியுமா,எல்லா கேள்விக்கும் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை,வெள்ளை சட்டை போட்டவனுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டோம் என்பார்கள் போலும்..!
Tag. VNK@ஒரே தரம் (தான்) மரணமா??!! எபிரேயர் 9:27
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)