இன்றிரவு அமெரிக்காவிலிருந்து தொலைபேசியின் மூலம் அழைத்த ஒரு சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் சொன்னது...
பிரபல விசுவாசப் போதகரான கென்னத் இ ஹேகின் எழுதிய புத்தகத்திலிருந்து....
அதன் பெயர்: FOLLOWING GOD'S PLAN FOR YOUR LIFE by Kenneth E. Hagin
அதில் பின்வருமாறு எழுதியிருக்கிறாராம், "மரித்த நமக்கு அருமையானவர்களுடைய ஆத்துமாவானது இந்த உலகக் காரியங்களைப் பார்க்க முடியாது; ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற குடும்பத்தினரின் தெய்வீக முயற்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள்..." -இந்த கருத்தை எந்த வேத வசனத்தின்படி எழுதினாரோ அறியேன்; ஆனாலும் வேதத்தின்படி சரியான கருத்து அல்ல என்று உணர்ந்து உடனே அந்த சகோதரியைத் திருத்தினேன்;
இந்த கருத்து உண்மையானால் இந்தியர்களாகிய நாம் பித்ருக்களுக்கு செய்வதாகச் சொல்லும் சடங்குகளெல்லாம் சரி என்பது போலாகுமே;மேலும் அமலோற்பவ மேரி(?!)யான மாதாவை நோக்கி, "மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்பதும் சரி என்பது போலாகுமே..? வெளிநாட்டுக்காரங்க வெறும் பன் பட்டரும் சாப்பிட்டுட்டு எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க இல்ல..? (மேசியாவின்) எதிரிகள், அதுக்குதான்யா வெங்காயம், ஆத்துமா வெங்காயம், இல்லேங்குறோம் வெங்காயம், என்பார்களே..! கடல் கடந்தும் சில்சாமுக்கு எதிரிகள்..?
யௌவன ஜனம் தளத்தின் நண்பர்கள் தங்கள் கருத்தைப் பதியவும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)