ஒரு கோழியை வெச்சிகிட்டு எவ்ளோ நேரம் உரிச்சிகிட்டு இருப்பீங்க.. உரிச்சமா மசால் போட்டமா வறுத்து சாப்பிட்டோமான்னு இருக்கணும்ல.. ஒருத்தனுக்கு பிசாசு கட்டு இருக்குன்னா அதை விரட்டறதுக்கு எதுக்கு ஏழு வாரம் ஒன்பது வாரம் உங்க சபைக்கு வரணும் ? இயேசு தொட்டார், தொட்டவுடனே குணமானது, அதுதானே தேவ வல்லமை ? ஏழை எளிய மக்களை பேய் பிசாசு பில்லிசூனியம் செய்வினை ஏவல் என்று அலைக்கழிக்கிறவர்கள் தேவ ஊழியர்கள் அல்ல.
**என்னுடைய சந்திப்புகளில் ரெண்டாவது விசிட் என்பதே நன்றி செலுத்தும் கூட்டமாக மட்டுமே இருக்கிறது. ☺
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சாவி கொடுத்து ஓடும் கடிகாரமும் உண்டு; பேட்டரி சக்தியில் ஊசலாடும் கடிகாரமும் உண்டு. சாவி கொடுத்து ஓடும் கடிகாரம் மாத்திரமே முட்களின் சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருக்கும்.சாவி கொடுத்தவர் இல்லாது போனால் முட்கள் நின்றுவிடும். சக்கரம் என்பது வாழ்க்கையெனில் முட்கள் இருந்தே தீரும். சக்கரம் நின்றால் முட்களும் நின்றுவிடும். சாவியைக் கொடுப்பவர் ஆவியை எடுத்துக்கொண்டால் இனி எப்போதும் இளைப்பாறுதல் தான்.
ஒரு வட்டம் பூர்த்தியாகும்போது அது மீண்டு(ம்) வரும்; அப்போது பல குழந்தைகள் உங்களோடு இருப்பார்கள். எல்லோரும் உங்கள் காதுகள் கேட்க சொல்லுவர்கள், வயசானாலே குழந்தை மாதிரி... என்று.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறிஸ்தவம் என்பது தத்துவங்களால் அமைக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல, அது விண்ணக தந்தையுடனான உறவின் மார்க்கம்.எனவே அதனை கன்பூஷியஸ், புத்தர், மகாவீரர் போன்றவர்கள் அமைத்து கொடுத்த நல்வழி மார்க்கங்களுடன் ஒப்பிட்டு சிதைத்து விடக்கூடாது.
அனைத்து விவாதங்களுக்கும் குழப்பங்களுக்கும் இந்த அடிப்படை புரிதல் இல்லாததே காரணம். கிறிஸ்தவத்தை ”தலை” இல்லாத மார்க்கமாகவும் ”ஸ்தானம்” இல்லாத தத்துவமாகவும் நினைப்போரே சுயாட்சியை வலியுறுத்தும் கலகத்தை செய்கின்றனர். ஆனால் அது ஒருவருவருக்கொருவர் பகிர்தலும் ஒப்படைப்பதும் ஆகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம் கிரியைகளின் பெலன் கிறிஸ்து, எனில் அதன் பலனும் அவருக்கே;அதனை நமக்கு தருபவரும் அவரே; கிரியை செய்வோரின் கிரியை, தேவனுடைய நியமம் எனில் கிரியை செய்வோரும் அவருக்கே..!
”நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார். “ (எபேசியர்.2:10)
(எனது மகள் தனது தேர்வு மற்றும் எதிர்காலம் குறித்து மிகவும் கவலைப்பட்டு தவித்த நிலையில் அவளுக்கு ஆறுதலாக சொன்னது..!)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
// தனிமைப்படுவீர்கள் // -என்று தானே எழுதியிருக்கிறேன், தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று எழுதவில்லையே; இதில் என்ன மிரட்டல் இருக்கமுடியும்? இன்னும் தனித்தன்மைக்காக தன் தன்மையையே இழப்பது ஆபத்தானதல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)