Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//ஒரு நபர் ஒருபோதும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களாக இருக்கவே முடியாது என்ற ஒரு சாதாரண விஷயம்கூட தெரியாமல் இந்தக் கிறிஸ்தவம் எப்படி ஒரு 'மாயை'க்குள் அகப்பட்டுத்தவிக்கிறது?//

யாரை சொல்லுகிறீர்கள்? Oneness Penticostals-ஐ  தானே?  அவர்கள் தான் இயேசுவும் , பிதாவும் ஒரு நபர்களே என்று சொல்லுபவர்கள்.

 //தேவன் ஒருவரே!  கிறிஸ்து ஒருவரே!!  இதைத்தானய்யா வேதம் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது...//

ஆமா அய்யா ஆனா நீங்கள்தான் கிறிஸ்து 'ஒரு' தேவன் என்று சொல்லுகிறீர்கள். ஒரே தேவனா? அல்லது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தேவர்களா?

 //ஒன்றாக ஒரே எண்ணத்தில் இருப்பதென்பதற்கும் ஒரே ஆளாக இருப்பதற்கும் வித்தியாசமில்லை? இரண்டாவது சாத்தியமேயில்லை. தனித்தன்மையென்பதே ஒரு ஆள் 'தனி'யாக இருந்தால்தானே பொருந்தும். //

சரிதான். ஆனா வேதம் கிறிஸ்துவும், பிதாவும்  ஒரே எண்ணத்தில் மாத்திரம் இருப்பதாக சொல்லுகிறதா அல்லது ஒரே தன்மையில், தேவத்துவத்தில்  இருப்பதாக சொல்லுகிறதா?

//மூன்று வெவ்வேறு நபர்களைக் காண்பித்து இவர்கள் மூவரும் ஒருவர்தான் இவர்களைத் திருமணம் செய்துகொள் என்று ஒரு பெண்ணிடம் சொல்வது எவ்வளவு விபரீதமோ அதுபோலத்தான் இந்தத் திரித்துவமும்...//

இதை..இதை..இதைதான் எதிர்பார்த்தேன்! அது விபச்சாரம் இல்லையா? இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா ( மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா? ஒழுங்கா சொல்லணும் மழுப்பக்கூடாது ஒகே வா?



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 57
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


John wrote:
 
//பூட்டிய கதவுகளில் வழியாக சரீரத்தை கொண்டு யாரும் நுழைய முடியாது!!//
 
சரீரத்தோடு கடலில் நடக்கமுடியுமா? அல்லது அதுவும் ஆவியா?  

 சரியான பதில்!!!!!!



__________________

கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்கள்



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

அவங்களுக்கு தெரிந்ததைத் தவிர நாம் வேற எதைச் சொன்னாலும் அது அவர்களுக்கு தமாஸுதான்...புலி வருது...புலி வருது...சொல்லி ஏமாத்தினவன் ஒருநாள் மெய்யாகவே புலி வந்தபோது காப்பாற்ற ஆளில்லாமல் கடிபட்டு செத்த கதையைப் போலவே இவர்களுக்கு நடக்கப்போகிறது;

ஒரு மனுஷனின் கொள்கையை இத்தனை தீவிரமாக நம்பி ஏற்றுக்கொள்ளும் இவர்கள், தேவனே வெளிப்படுத்தி சாட்சி கொடுத்த நன்மையை இப்படி அலட்சியப்படுத்துகிறார்களே...(எபிரெயர்.2:4)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//"புரியாது" போன்ற டகால்டி வேலையெல்லாம் (எனக்கு புரியாவிட்டால் பரவாயில்லை நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்) இல்லாமல் எப்போ பதில் சொல்லுவீங்க??????//

பிரதர் பதில் இருந்தாதானே தருவாங்க. ரசல் அவற்றுக்கெல்லாம் பதில் எழுதவில்லை. அப்படி எழுதியிருந்தால் நூலின் பெயரைக் குறிப்பிடவும். ஆத்துமகோமாளி அவன் கேட்ட கேள்விகளுக்கே பதில் தருவதில்லை. இந்த இலட்சணத்தில் உங்களுக்கு அவன் பதில் தருவான் என நினைப்பது மடமை


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink Closed

Bereans//பிறரை பிசாசு என்று எழுதும் கொல்வின் எப்படி பட்டவர் என்பது தெரிகிறதா!! தன்னை இயேசு என்று சொல்லும் இந்த நபர் யாரோ

 

இவருக்கு மொட்டைத் தலைக்கு முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதே வேலையாக போய்விட்டது. ஒரு அநாகரீகமானவனை கூட வைத்துக்கொண்டு இதுபோன்று பேசாதீர்கள் நண்பரே. முதலில் உங்கள் நண்பரை கண்டியுங்கள். இவரின் வார்த்தைப் பிரயோகங்களை பாருங்கள். அவரை மிஞ்ச உலகில் யாரும் இல்லை. 

தேவன் அனைத்தையும் அறிந்து எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை என சொல்லுவதும் கி.பி 30000000000 பரலோக தரிசனம், நியாயத்தீர்ப்பு பற்றி எழுதுவதும் உங்கள் கள்ள உபதேசக் கூட்டமே முதலில் அவர்களுக்கு பு்த்தி சொல்லுங்கள் தேவனுக்கு மேலாக தங்களை உயர்த்திக் காட்டும் உங்கள் கூட்டம் எத்தகைய கூட்டம். 

 




-- Edited by colvin on Tuesday 7th of June 2011 11:27:36 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


Bereans//பிறரை பிசாசு என்று எழுதும் கொல்வின் எப்படி பட்டவர் என்பது தெரிகிறதா!! தன்னை இயேசு என்று சொல்லும் இந்த நபர் யாரோ!

 இப்படிப்பட்டவர்கள் தான் விரக்த்தியில் மற்ற மார்க்கத்தாரை பிசாசு என்றும் பிசாசு பிடித்தவர் என்று கட்டி ஜெபிக்கும் கூட்டத்தார்!

இந்த போலியான கிறிஸ்தவர்களிடம் விசேஷமாக பிற மனிதர்களை பிசாசு என்கிற அளவிற்கு கேவலமாக எழுதுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறேன்!! தன்னை இயேசு என்று சொல்லிக்கொள்ளும் நபர்களும் அதே அளவிற்கு ஆபத்தானவர்களே!!//

இதில் எந்த இடத்தில் இதை எழுதியவர் தன்னை இயேசு என்கிறார். இதற்கு ஒரு தனி தொடுப்பு வேறு.... இயேசுவை நம்புவதால் அவரை தொழுதுகொள்வதால் உங்களை போன்றவர்கள் நிந்திக்கிறீர்கள்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//மிருகம் மிருகம் கிடையாது, அப்படியே கள்ளதீர்க்கதரிசி கள்ளதீர்க்கதரிசி கிடையாது!! உங்களுக்கு சொன்னாலும் புரியாது!! அந்த நிலையை கடந்து சென்று விட்டீர்கள்!!//

நான் எனக்கு புரிவதற்காக உங்களிடம் கேட்கவில்லை நீங்கள் என்ன புரிந்து வைத்துள்ளீர்கள் என்றுதான் கேட்கிறேன். மழுப்பாமல் சொல்லுங்களேன்!

//ஏசாயா 66:23 -24 வசனங்களை சகோ சோல் சொல்யூஷன் விளக்கியிருக்கிறார்!! ஆனாலும் உங்களுக்கு புரியாது!!//
மறுபடியும் அதே புரியாது காமடிதானா? இப்படி பொறுப்பிலாமல் மழுப்புகிறோமே கொஞ்சமாவது வருத்தம் இருக்குமா. சோல் சொல்யூஷன் "விளக்கம் இதோ"

//அவர்கள் செத்துப்போன மனிதர்களின் 'பிரேதங்களை'த்தானே காண்பார்கள், பினெப்படி "அவர்களுடைய‌"அக்கினி அவியாமலிருக்கும்(அணையாமலிருக்கும்), "அவர்களுடைய‌" பூச்சி(புழுவல்ல) சாகாமலிருக்கும்?
இதெற்கெல்லாம் நேரடியர்த்தம் கொண்டால் இப்படியெல்லாம் விளக்கலாம். ஒருவேளை அவர்கள் குடலில் உள்ள நாக்குப் பூச்சியாயிருக்குமோ, ஏனென்றால் 'பூச்சி' ஒருமையில்தான் உள்ளது. ஆக ஒரே ஒரு பூச்சி, அதுவும் சாகாத பூச்சி(நித்தியஜீவனோ?) இருக்கும். அக்கினியும் ஒருபோதும் அணையாது. கேஸ் மிச்சம். வருடம் முழுவதும் இலவசமாக சமைத்துக்கொள்ளலாம்....//

ரசலின் அடியார்கள் இப்படித்தான் வேத(?) ஆராச்சி(!!) செய்வீர்களோ? நீங்கள் வேத ஆராச்சி செய்யும் அழகை பார்க்க நிச்சயம் காமடியாய் இருக்கும். கேள்வியை மீண்டும் படியுங்கள், புழு, புச்சி, அக்கினி பற்றி கேட்கவில்லை

மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார் என்பது கேள்வி?

//ஏன் நானும் தான் இத்துனை வசனங்களை காட்டி கேள்வி கேட்டிருக்கிறேன்!! உங்களிடத்திலிருந்து பதில் வராது என்றும் தெரியும்!!//

எத்துனை வசனங்கள்? எப்போது நான் உங்களைபோல மழுப்பினேன் நண்பரே? மாம்சமான யாவரும் தேவனுடைய ரட்சிப்பை காண்பார்கள் என்றால் "எல்லா மனிதரும் முடிவிலே இரட்சிக்கபடுவார்கள் என்று நீங்கள் தவறாக (ரசலின் உபதேசப்படி) முடிவு செய்கிறீர்கள் ஆனால் வேதம் மாம்சமான யாவரும் என்ற பதத்தை "பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு மட்டுமே என்று இருந்த தேவனுடைய வாக்குதத்தங்கள் மற்றும் இரட்சிப்பு புறஜாதியினருக்கும் (எல்லாருக்கும்) உரியது என்ற பொருளில் "மாம்சமான யாவரும்" என்ற பதம் உபயோகபடுத்தப்பட்டு உள்ளது. இதை ஏசாயா 66:23 -24 வசனங்கள் உறுதிபடுத்துகிறது! சிமியோனும் அதே உறுதிபடுத்துகிறான்.

//அதான் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று முடிவாகிவிட்டதே, நீங்கள் சுவிசேஷம் சொல்லி உங்கள் தேவனின் சித்தத்தை மாற்ற பிரயாசிப்பது வீண் என்று உங்களுக்கு தெரியாதா!!//

எல்லாரும் நரகம் போக மாட்டார்கள். சுவிசேஷம் என்பது இரட்சிக்கப்டுகிறவர்களுக்கு மாத்திரம் அல்ல கெட்டுபோகிறவர்களுக்கும் சொல்லப்பட வேண்டியதே. இயேசு யோவான் 6 ஆம் அதிகாரத்தில் 5000 பேருக்கும் மேலான பேருக்கு (ஏற்று கொள்ளமாட்டார்கள் என்று தெரிந்தும்) சுவிசேஷம் சொன்னார். பவுல் சுவிசேஷம் என்பது கெட்டு போகிறவர்களுக்கு மரண வாசனை என்று சொல்லுகிறார்

கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? (II கொரிந்தியர் 2:16 )

//ஆமா நீங்கள் தேவர்கள் தான்!! போதுமா!! நல்லா விளக்கம் தருகிறீர்களய்யா!! நீங்கள் தேவனாகி விட்டதற்கு என் வாழ்த்துக்கள்!! நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காக பவுல் எப்படி காத்துக்கொண்டிருந்தாரோ, அப்படியே காத்திருக்கிறோம்!!//

தங்களுக்கு என்ன நேர்ந்தது??? தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர் தேவன் ஒருவர்தான், தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர் எவரும் தேவன்தான் என்று சொன்னேன். எனக்கு தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளது என்று சொன்னேனா? நான் என்ன புரட்டன் ரசலா?

//உங்களுக்கு தோன்றுகிற இடத்தில் பிதாவும் கிறிஸ்துவும் ஒருவராக இருக்கிறார்கள், சில சமயம் இருவரும் வேறு நபர்களாகிவிடுகிறார்கள், பிதாவே கிறிஸ்துவாக வந்துவிடுகிறார், ஆனாலும் பூமிக்கு வந்த கிறிஸ்து (பிதா) அவரிடமே ஜெபித்தும் கொள்கிறாராம்!!//

நீங்கள் இதுவரை என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாவிட்டாலும் நான் சொல்லுகிறேன். பிதாவும் , கிறிஸ்துவும் எப்போதும் வெவ்வேறு நபர்களே!. ஆனால் அவர் ஒரு முழுமையான தேவன் என்பதும், தேவத்துவம் (Godliness ) அவரிடத்தில் முழுமையாய் இருந்தது என்றும் வேதம் சொல்லுகிறது. ஆகையால் அவர் பிதாவோடே ஒரே தன்மை உள்ளவர்.

"தேவத்துவம் பரிபூரனமாய் இருந்தது" ,

"ஆவி அளவில்லாமல் இருந்தது",

"அவர் தேவனாய் இருந்தார்",

"உண்டானதொன்றும் அவராலே அல்லாமல் உண்டாக்கப்படவில்லை" (ஆகையால் அவர் உருவாக்கப்பட்டவர் இல்லை எனபது மனநிலைமை சரியாய் உள்ள எல்லாருக்கும் புரியும்)

அவர் மகா தேவன் (தீத்து 2:13 )

சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5 )

இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர் (வெளி 1 :8 )

தன்மையில் ஒன்றாகவும், நபரிலே (அல்லது ஆள்த்ததுவத்திலே) அவருக்கு அடுத்ததாகவும் இருக்கிறார். மானிட ரூபம் எடுத்ததால் அவரோடு ஒரே தன்மையில் இருந்த பிதாவை தேவனாக தொழுதுகொள்ளவும் செய்கிறார். பிதா செய்ய காண்கிறது எதுவோ அதைசெய்கிறார். பிதாவும் செய்கிற 'எல்லாவற்றையும்' குமாரன் மூலமாய் செய்கிறார். அவர் மனுஷ குமாரன், தேவ குமாரன், தீர்க்கதரிஷி, ஜீவ ஒளி , ரட்சகர் , தேவனுடைய நீதி (யேகோவா சிட்கேன்னு), சபையின் மணவாளன், தேவ ஆட்டுக்குட்டி, பிரதான ஆசாரியன், ராஜாதி ராஜா , கர்த்தாதி கர்த்தா. அவர் பிரதான ஆசாரியனாய் இருப்பதால் தேவ குமாரன் இல்லாமல் ஆகமாட்டார்.

இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்திலே வீற்று இருக்கிறார் என்பதை ரசலின் சீஷர்கள் அறியாமையினால் எதோ அது ஒரு தாழ்மையான இடம் என்று நினைக்கிறீர்கள். ஏசாயா சொல்லுகிறார் "கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது" (இயேசு கிறிஸ்துதான் அந்த புயம்" . நீதியின் வலது கரம் இயேசு கிறிஸ்து! பார்வோன் கண்ட "கை வல்லமை" இயேசு கிறிஸ்து! . யோவான் சொல்லுகிறார் "பிதாவின் மடியில் இருக்கிற குமாரன்". வலது பாரிசம் என்பது கிறிஸ்துவின் வல்லமையை குறிக்கும் சொல். இதில் எது வேத விரோதம் என்று எழுதினால் நான் பதிலளிக்க தயாராய் இருக்கிறேன்.

சரி என்னுடைய கேள்விகளுக்கு காமடி தவிர்த்து , "புரியாது" போன்ற டகால்டி வேலையெல்லாம் (எனக்கு புரியாவிட்டால் பரவாயில்லை நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்கள்) இல்லாமல் எப்போ பதில் சொல்லுவீங்க??????



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

இப்படி பதில் சொல்லுவதை வைத்துதான் உங்களை "அசத்தல் ராஜா" , "கோவை காமடியன்ஸ்" என்று சொல்லுகிறோம்! எழுதும்போதே இப்படி மழுப்புகிறோமே உங்களுக்கு குத்தாதா?

//தீர்க்கதரிசனம் என்றால் குறி சொல்லுவது என்று எடுத்துக்கொள்ளும் கூட்டத்தாருக்கு இதை தவிர வேறு என்னத்த கேட்க முடியும்!! தீர்க்கதரிசனம் என்றால் தேவனின் வார்த்தைகளே!! //

தேவனுடைய வார்த்தை ஒழிந்து போகவில்லையே! அப்படியென்றால் தீர்க்கதரிசனம் இன்னும் ஒழிந்து போகவில்லையா?

//சிலவற்றை புரிந்துக்கொள்ள தேவனின் ஆவியும் ஞானமும் வேண்டும்!!//


ம்ம்...அதுதான் உங்களுடைய எலியாவின் ஆவியா? உங்கள் பதில்களில் அப்படி ஒரு ஞானம் இருப்பதாக தெரியவில்லையே!

//1 கொரி 13:12 இயேசு கிறிஸ்துவின் வருகையை சொல்லுகிறது என்பது உங்களின் புரிந்துக்கொள்ளுதல்!! அப்படி என்றால் இப்பொழுது கண்னாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம் என்றால் என்ன, அவர் அவ்வபோது வந்து போகிக்கொண்டு இருப்பதையா!! அவர் போனால், அடுத்து இரண்டாவது முறை மட்டுமே வருவார், அப்படி என்றால் கன்னாடியிலே நிழலாட்டம் என்றால் என்ன இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகள் காண்பிக்கும் ஃபிலிமா!!//


இதற்க்கு பேருதான் காமடி! வசனம் தெளிவாய் சொல்லுகிறது கண்ணாடியில் பார்ப்பது என்றால் என்ன என்று

நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம். (II கொரிந்தியர் 3:18 )

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்து போகும் என்று சொல்லுகிறது. நிறைவானது வேதம் என்றால் இன்று செய்யப்படும் வியாகியானங்கள் குறைவுள்ளவை அல்ல என்று பொருள்கொள்ளலாமா?

நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். (II கொரிந்தியர் 3:10 )

முகமுகமாய் எப்போது பார்ப்போம் என்று தெரியாதா??

//நரகம் என்றால் தீ எரிந்துக்கொண்டு இருக்கும் இடம் என்று நீங்கள் நினைத்து இந்த வசனத்தை வாசித்தீர்களென்றால் அதற்கு நான் பொறுப்பில்லை!!//

என்ன ஒரு பொறுப்பற்ற பதில்!! மறுபடியும் கேட்கிறேன்

கிழே காண்கிற வசனங்களுக்கு உங்களுடைய புரிந்து கொள்ளுதல் என்ன?அது என்ன சரிரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்கள்?


ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (மத்தேயு 10:28 )

//நிலை நிற்கும் என்றால் நிலைத்துக்கொண்டே இருக்கும் என்று அல்ல!! தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை அவரின் அன்பை புரிந்துக்கோண்ட எனக்கு போதுமானதாக இருக்கிறது!! உங்களை போன்றோர் அவரின் அன்பு கிலோ என்னவென்று கேட்டாலும் ஆச்சரியம் அல்ல‌!!//


மீண்டும் மீண்டும் மழுப்பல்! காமடி!! தேவன் அன்பாகவே இருக்கிறார் அதனால் அவருடைய குமாரனை விசுவாசிக்கவிட்டாலும் பரதீசோ (பரலோகமோ) நிச்சயம் என்று வசனம் இருக்கிறதா?

"ஜீவனை காண்பதில்லை தேவனுடைய கோபம் நிலை நிற்கும்" என்று வசனம் சொல்லும்போது "நிலைத்துக்கொண்டே இருக்கும் என்று அல்ல" என்ன சொல்ல உங்களுக்கு தைரியம் கொடுத்தது யார் ரசலா? அல்லது அவனுடைய தேவனாகிய சாத்தானா?

 

 

//இதுக்கு என்ன சொல்லுகிறீர்கள்!? வெளிப்படுத்தின விசேஷம் என்கிற முழு தீர்க்கதரிசன புத்தகத்தை புரிந்துக்கொள்ள உங்கள் போதகர்களுக்கு முடியாது!! அவர்கள் சொல்லாவிட்டால் உங்களுக்குபுரியாது!! புரிய மனதுள்ளவர்களாக இருந்தால் புரிந்துக்கொள்ளலாம்!!

மிருகம் பிடிக்கப்பட்டது என்பதை எப்படி நேரடியான மிருகம் இல்லை என்று அர்த்தம் கொள்கிறீர்களோ அப்படியே தான் கள்லத்தீர்க்கதரிசியும்!! மிருகம் மாத்திரம் இவர்களுக்கு மிருகம் இல்லையாம், ஆனால் கள்ள தீர்க்கதரிசி மாத்திரம் அப்படியே கள்ளத்தீர்க்கதரிசியாம்!! //

இந்த உங்களுக்கு புரியாது போன்ற டகால்டி வேலையெல்லாம் வேண்டாம்!! மிருகமும், கள்ளதீர்க்கதரிசியும் யார்?

//எனக்கு தெரிந்த பிடித்த, படித்த, நம்புகிற, விசுவசிக்கிற வசனங்கள்://

உங்களுக்கு பிடிக்காத, நம்பாத, விசுவாசிக்காத வசனங்களை என்ன பண்ணலாம்? கிழித்து விடலாமா? ஏசாயா 66:23 -24 அப்படி பட்ட ஒருவசனம் ஆகையால் என்னிடம் கேட்க்காதே என்று சொல்லுகிறீர்களா?


//உங்களின் சிந்தையோ, உங்களை போன்றோர் தவிர எல்லாரும் "நரகம்" போக வேண்டும் என்பது, ஆகவே இது போன்ற வசனங்கள் உங்கள் கண்களுக்கு தெரியாது!!
தேவன் தருகிற வெளிச்சத்திலும், அவரின் ஆவியினாலும் அவரின் ஞானத்தினாலும் மாத்திரமே தேவனின் அன்பை புரிந்துக்கொள்ள முடியும்!! நான் புரிந்திருக்கிறேன், நீங்கள்!!??//

மறுபடியும் கேட்கிறேன் நேரடியாய் பதில் சொல்லுங்கள் மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார்?

அப்பொழுது மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள். (ஏசாயா 66:23 -24)

நீங்கள் "miss " பண்ணிவிட்ட இன்னொரு கேள்வி


ஆயிரவருட அரசாட்சியின் முடிவில் எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்றால் கிழே சொல்லப்பட்ட கூட்டம் யார்?

அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. (வெளி 20:7-9)

வெட்டியா எதாவது திட்டாமல், காமடியை தவிர்த்து உருப்படியாய் ஏதாவது பதில் சொல்லலாமே?

//ஆக கிறிஸ்து பிதாவென்றால் சபையாகிய சரீரமும் பிதாவாகிய தேவனா?
கிறிஸ்து ஏன் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கவேண்டும் ஒன்றாக ஒன்றிவிடுவதுதானே?//

கிறிஸ்துதான் பிதா என்று யார் சொன்னது??

//கொலோசெயர் 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

கொலோசெயர் 2:10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

பரிபூரணணமுள்ளவர்கள் எல்லாரும் தேவனா?//

ஒழுங்கா வாசியுங்கள் "தேவத்துவம்" பரிபூரனமுள்ளவர்கள் எல்லாரும் தேவனே! நம்முடைய (கிறிஸ்தவனுடைய) ஜீவன் அவருக்குள் மறைந்து இருகிறதினால் அவருக்குள் விசுவாசியின் ஜீவன் பரிபூரனப்படும்.

...நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10 )
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது (கொலோசெயர் 3:3 )

//I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

இரண்டு வெவ்வேறு ஆள்தத்துவங்களை காண்பிக்கும் இந்த வசனம் உண்மையிலேயே புரியவில்லையா? அல்லது புரியாததுபோல் பாசாங்கு செய்கிறார்களா?//

ஆமா இரண்டு வெவ்வேறு ஆள்தத்துவங்களை இந்த வசனம் காண்பிக்கிறது. கிறிஸ்துவும் , பிதாவும் ஒரே ஆள்த்ததுவங்கள் அல்ல.

அது சரி...மொத்தம் ஒரே தேவன்தானா? ம்ம்...இயேசுவும் ஒரு தேவன், மோசேயும் ஒருதேவன் என்று நீங்கள் சொன்னதாக ஞாபகம்! ஒரே கர்த்தரா? அப்போ பிதா கர்த்தர் இல்லையா??




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink Closed

ஆமாண்ணே இவுகளோட மிஷன் ஸ்டேட்மெண்ட்டை நான் முழுசா படிச்சதில்லை. தீர்க்கதரிசனமெல்லாம் கிடையாதாமா? அடங்கொப்புரானே கிழிஞ்சது போங்க. இவுக லிஸ்ட்டுல எது எது இருக்கு இல்லன்னு புரிஞ்ச்சுக்கிறதுன்னே நமக்கு கழண்டுடும் போல.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

சரியா போச்சு...ஏண்ணே அவிங்க தான் சொல்றாய்ங்க'ல்ல, தீர்க்கதரிசனமெல்லாம் முடிஞ்சிபோச்சு, இப்போது தீர்க்கதரிசனமென்பதே உபதேசம் தான்னு, அவிங்க தான் வசதியா அமுக்கி வாசிக்கறாய்ங்கன்னா நீங்களும் அந்த பாயிண்டை கண்டுகிடாம விட்டுடறீகளே... அண்ணன் அகஸ்டின் (ஆமாய்யா, அண்ணன் தான், நாங்க வயசுல பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கும் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவங்க‌...) தீர்க்கதரிசனமே உரைக்கல்லே, உபதேசம் தான் பண்ணாருன்னு சொல்லிட்டுப் போங்க‌.... அவரு என்ன சண்டைக்கா வரப்போறாரு...என்னண்ணே உங்களுக்கு ஒரு நியாயம் அண்ணன் அகஸ்டினுக்கு ஒரு நியாயமா..?

இரஸல் கூட தான் இதைவிட மோசமான கணிப்பையெல்லாம் செய்து கோதுமை வித்தாரு... சிலரு அவருடைய உபதேசத்திலே பிரதான "6" கொள்கையைப் பிடிச்சுகிட்டு தொங்கலையா..?

மெய்யாலுமே ஈரான் 2009- ல் இஸ்ரவேல் மீது போர் தொடுத்திருந்தாலும் கூட நீங்கள் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை; பிறகு எதற்கு வீண்பேச்சு...?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


Bereans:

//நீங்கள் கள்ள தீர்க்கதரிசனம் அல்லது குறி சொல்லிய "சகோ. அகஸ்டின் ஜெபக்குமார்" மீது எதை வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள், எனக்கு என்ன!! நிறைவேறாத ஒரு தீர்க்கதரிசனத்தை சொல்லியும் அவரை சகோதரர் என்று சொல்லுவது நீங்களும் அதே வரிசையில் இருப்பவர் தான் என்று காட்டுகிறது!! இவர்களை போன்று ரஸ்ஸல் எந்த விதத்திலும், தேவன் எனக்கு இதை சொன்னார், அதை சொன்னார் என்று சொன்னதில்லை!! ரஸ்ஸலை குறித்து பேச உங்களுக்கு தகுதியில்லை!! அவ்வளவே!!//

தாமதித்தாலும் நடக்கும் தீர்க்கதரிசனங்களும் உண்டு, ஏன் யோனா கூட அன்னைக்கு நினிவே கவிழ்க்கப்பட்டு போகும் என்றார் ஆனால் கவிழ்க்கப்படாததால் டென்ஷனாகி மண்டை காய்ந்து போனார் என்று வேதத்திலேயே பார்க்கிறோம். கடைசியில் ஆத்துமாக்களை குறித்த கரிசனையை தேவன் அவருக்கு விளக்கியதால் தான் ஏன் நினிவே கவிழ்க்கப்படவில்லை என புரிந்தது. உங்களுக்கு ஏன் அகஸ்டின் ஜெபக்குமார் மேல் அவ்வளவு கோபம், ஓ அவர் மிஷனரி ஊழியம் செய்யுறாருல்ல அதான் உங்களுக்கு பத்திக்கிட்டு எரியுது போல. அவரை சகோதரர்ன்னு நாங்க சொன்னா உமக்கென்னய்யா. அவர் கிறிஸ்துவுக்குள் சகோதரர் தான். You too have no rights to speak about Bro Augustine.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


http://chillsam.activeboard.com/t43193415/mlm/

இந்த திரியை இன்னும் படிக்கவே இல்லையோ...?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

இந்த நேரத்தில அண்ணாச்சிக்கு இங்க என்ன வேலை'ன்னேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


//மண்ணுக்கு திரும்புவாய் என்றால் ஒன்றும் இல்லாமல் போவது என்று அர்த்தம், அது தான் மரணம், அதாவது ஒன்றும் இல்லாமல் போவது!! ஆனால் நீங்கள் சொல்லுவதோ, மரணம் இருக்கிறது, ஆனா இல்லை என்பது!! ஏனென்றால் ஒன்று முழுமையாக ஒன்றுமில்லாமல் போகவில்லை என்றால் அது மரணம் இல்லை!! ஆகவே தான் நாங்கள் சொல்லுகிறோம், நீங்கள் சாத்தானின் போதனையை தருகிறீர்கள் என்று,//

ஒன்றுமில்லாமல் போவது என்றால் எப்படி மண்ணோடு மண்ணாகிப்போய்விட்டால் மேட்டர் ஒவர் அப்படித்தானே, ஆனா வெளி 20:12 இல் மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் தேவனுக்கு முன்பாக நிறக கண்டாரே யோவான் இவுங்க எல்லாம் யாருங்க மேட்டர் ஓவராகிப்போனவங்களா? அதுக்கப்புறம் 13ம் வசனத்தில் சமுத்திரமும் மரணமும் பாதாளமும் தன்னில் உள்ள மரித்தோரை ஒப்புவித்ததே அவுங்க எல்லாம் தங்கள் கிரியையின் படி நியாயத்தீர்ப்படைந்தார்கள் என்று வருகிறதே. அப்புறம் அக்கினிக்கடல் அது இதுன்னு உங்களுக்கு புளியைக்கரைக்கிற ஏகப்பட்ட சங்கதிகளை எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார் திவ்ய வாசகனாகிய யோவான். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


 

// இல்ல அல்பா, ஒமெகாவுக்கு முன்னாலயும் பின்னாலயும் ஏதாவது இருக்கான்னு கிரேக்க அறிஞர்கள் விளக்கினால் நலம். //


அதானே...

(சாலமன் பாப்பையா குரலைக் கற்பனை செய்துகொள்ளவும்...)

 




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


பிரச்சனையே இயேசு தொழத்தக்க தெய்வம் அல்ல என இவர்கள் கூறுவதால் தான் ஆரம்பிக்கிறது. சகல அதிகாரங்களையும் கொடுத்தவர் அவரை வேலைக்காரனாக ஏவலாளாக மாத்திரம் வைத்திருந்தார் என்று பொருள்பட இருக்கிறது இவர்களது வாதங்கள். 

I கொரிந்தியர் 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

ஒரே கர்த்தர் என்றால் உடனே மூல பாஷைக்கு ஓடிவிடுவார்கள். அந்த கர்த்தர் வேற இவர் வேற என்பார்கள். இதில் மத்தவங்க வாழைப்பழ காமெடி பண்ணுகிறார்களாம். 

வெளிப்படுத்தின விஷேஷம் 22:12 இல் இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றவர், நானே அல்பாவும் ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் என்றார். நானே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறேன் என்கிறார் ஆண்டவராகியே இயேசு. இதற்கும் ஆதி வேறு அனாதி வேறு என்று ஆரம்பிப்பார்கள் அப்போ அந்தம் வேறு --------வேறு என்பார்களான்னு தெரியல (ஆமாங்க அந்தத்துக்கு அப்புறம் கட்டக்கடைசியா என்ன இருக்குன்னு யாராவது தமிழறிஞர்கள் விளக்கினால் நலம்).

இல்ல அல்பா, ஒமெகாவுக்கு முன்னாலயும் பின்னாலயும் ஏதாவது இருக்கான்னு கிரேக்க அறிஞர்கள் விளக்கினால் நலம்.

வெளி 22:1 இல் தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம்ன்னு இருக்கு அதுபோக தேவனின் ஒரே வார்த்தையான வேதாகமம் இயேசுவின் 2ம் வருகையொடு முடிகிறது. 20,21ம் வசனங்களில் ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும் என முடிக்கிறார் திவ்ய வாசகனாகிய யோவான். இது எப்படிங்க மூல பாஷைப்படி வேற கர்த்தரா? 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: இயேசுவை தொழமறுக்கும் புரட்டர்களுக்கு பதில் தெரியாத கேள்விகள்
Permalink Closed


தெளிவு பெறுவோம் பகுதியில் தெளிவில்லாத பதிவு அதற்கு ஒத்து ஊதும் அத்தளத்தின் நிர்வாகி. நீர் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்களை கேவலப்படுத்தினாலும் உண்மை மாறாது.

Weymouth: "The attitude you should have is the one that Christ Jesus had. He always had the very nature of God. Yet he did not think that by force he should try to become equal with God"

New American Bible: "Your attitude must be that of Christ: Though he was in the form of God, he did not deem equality with God something to be grasped at."

 

Goodspeed: "Have the same attitude that Christ Jesus had. Though he possessed the nature of God, he did not grasp at equality with God"

 

மேற்கண்ட மொழிபெயர்ப்புகளில் ஒன்றை கவனிக்கலாம், கிறிஸ்து தேவனுக்கு உரிய தன்மைகளை பெற்றிருந்தார் என்பது விளங்கும். Though he "possessed" the nature of God  என்ற வார்த்தைகளில் தான் எவ்வளவு தெளிவு. தேவனுக்கு சமமானவராக எப்போது எண்ணவில்லை? கிறிஸ்து இப்பூமிக்கு மானிடனாக வரும்போது எண்ணவில்லை என்று தான் பொருள்படுகிறது. அடுத்து வரும் வசனத்தின் தொடர்ச்சி இதை தெளிவாக்கும். தேவன் கிறிஸ்துவை எப்படி ஜெனிப்பித்தார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். அது தேவத்துவத்தின் உன்னதம். ஒன்றை யோசித்து பாருங்கள், பிதாவின் வலது பாரிசத்தில் அவருக்கு அருகில் இருக்க வேறு யாருக்காவது முடியுமா? 

மேற்கண்ட ஆங்கில மொழிபெயப்புகளில் பார்த்தால் கிறிஸ்துவுக்கு தான் பிதாவுக்கு ஒப்பான தன்மைகள் இருந்தது. இப்பூமிக்கு வருவதற்காகத்தான் தனது தெய்வீகத்தன்மையை ஒறுத்தார்.  இதை விடுத்து தான் உருவாக்கிய நோக்கத்தை அறியாமல் தேவனுக்கு சமமாக தன்னை எண்ணிய லூசிஃபரோடு கிறிஸ்துவை ஒப்பிடுகிறீர்கள். 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink Closed


ஆயிரவருட அரசாட்சியில் கிறிஸ்து ஆளுகை செய்யும்போது எதற்கு தீர்க்கதரிசனம்?

 wink அவர்களுக்கென்று நிறைவான  ஒரு (another) வேதம் கிடைத்துவிட்டதால் தான் விசுவாசத்தை (இயேசுவை விசுவாசிப்பதை) விட்டுவிட்டார்களோ?

biggrinநமக்கு நேரடியாக (ஆண்டவரை) தரிசிக்கும்போது விசுவாசம் தேவைப்படாமல் அன்பு மட்டுமே நித்தியமாய் நிலைத்திருக்கும்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink Closed

John wrote:
ஆயிரவருட அரசாட்சியில் கிறிஸ்து ஆளுகை செய்யும்போது எதற்கு தீர்க்கதரிசனம்?

 உங்களை (யும்) ஆள்வெச்சு கடத்தப்போறோம் பாருங்க‌...ரொம்ப பேசறீங்க‌..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink Closed

//நிறைவானது வரும்போது, அதாவது வேத வசனம் எல்லார் கைய்யிலும் வந்த பிறகு குறைவானது (தீர்க்கதரிசனம் தான்!!) ஒழிந்துபோம் என்கிறாரே!! இதை எல்லாம் வாசிப்பதே கிடையாதா!!//

நிறைவானது என்பது வேத வசனத்தை குறிக்கிறது என்று எங்கே எழுதியிருக்கிறது? நிறைவானது என்பது "கிறிஸ்துவின் வருகையை குறிக்கிறது" என்பதற்கு ஆதாரமாக அடுத்தடுத்த வசனங்கள் வருகின்றன...

இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன். (1 Cor 13:12)

 

பயப்படாதீர்கள் நீங்கள் ரசலின் மீது வைத்து இருக்கும் பக்தியை யாரும் சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் மேல் வைத்து விட முடியாது.

சரி ஒரு பேச்சுக்கு தீர்க்கதரிசனவரம் ஒழிந்து போய்விட்டது என்று வைத்து கொள்ளுவோமே! மாம்சமான யாவர் மேலும் ஆவியை உற்றுவேன் அப்போது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள் என்ற தீர்க்கதரிசனம் எப்போது நிறைவேறும்? அதுதான் தீர்க்கதரிசனம் ஒழிந்து போயிற்றே! ஆயிரவருட அரசாட்சியில் கிறிஸ்து ஆளுகை செய்யும்போது எதற்கு தீர்க்கதரிசனம்?



__________________
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard