இயேசு ஆவியிலே உயிர்த்து பரதீசுக்கு போனார் பிறகு பூமியின் தாழ்விடங்களில் (Hade) இறங்கினார் என்பதற்கு வசனங்கள் இருக்கின்றன
ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (I பேதுரு 3:18)
என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர்அழிவைக்காணவொட்டீர்; (அப்போஸ்தலர் 2:27)
இவர்களுக்கு ஒன்று ஒத்து வரவில்லை என்றால் வேதத்தை மாற்றி எழுதி விடுவார்கள் பிறகு மற்ற எல்லாரையும் (அவர்களுடைய) வேதத்தின் படி நடக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள்.
இவர்கள் சரி என்று வைத்து கொண்டாலும். பிதாவை அறியாமலும், எந்த கிரியையும் செய்யாமலும் இவர்களுடைய பரிசேய வேதத்துக்கு புறம்பாக இவர்கள் போக முடியாது ஒரு இடத்துக்கு அந்த திருடன் போய் விட்டான் என்பதை மறுக்கமுடியாது
ஒரு Quiz , கிழே உள்ள வசனம் பரிசேய வேதத்தில் எங்கே உள்ளது?
அனாதியிலே தேவன் இருந்தார் அவர் அனாதிக்கும் (?), ஆதிக்கும் நடுவில்(?) வார்த்தையை உண்டாக்கினார் அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது அதற்க்கு அப்புறம் உள்ள சகலமும் (?) அந்த ஒரு தேவனால் உண்டானது. ஆதிக்குப்பிறகு உண்டான எல்லாம் ஒரு அவராலே உண்டாயிற்று.
என்ன ஒரு மூடத்தனம்!! அதுசரி "Eternal Father" அப்படின்னா அநாதி இல்லையா?
-- Edited by John on Monday 28th of February 2011 06:16:56 AM
லூக் 23:43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இந்த வசனம் மூல பாஷையிலிருந்து எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இதோ இப்படி தான் மொழிப்பெயர்த்திருக்கிறார்கள், And said to-him THE JESUS AMEN I AM sayING to YOU toDAY WITH ME YOU-SHALL-BE IN THE PARK பரதீசுக்கு மிகவும் சரியாக பூங்கா என்று மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது!! பரதீசு என்பது ஒரு பாரசீக வார்த்தை!! இதற்கு அர்த்தம் பரலோகம் அல்லது தேவன் வாசம் செய்யும் இடமோ என்று இல்லை, மாறாக பரதீசு என்பது உலகத்தின் தொடக்கம் முதல் மனித வாசம் செய்யும் பூங்கா (ஏதேன் தோட்டம்) என்று தான் உருவனது!! இதை தான் (பரதீசு) மனிதர்கள் வாசம் செய்ய போகும் இனி வரும் உலகத்திலும் தேவன் வைக்க போகிறார்!1 முதலாவது மேலே உள்ள வசனத்தை பார்ப்போம், இயேசு கிறிஸ்து அந்த கள்ளனிடம் சொல்லுகிறார், நீ என்னுடன் பூங்காவில் இருப்பாய் என்று!! இதை புரிந்துக்கொள்ள எந்த கஷ்டமும் இல்லை!! பிரச்சனை என்னவென்றால், அந்த பரதீசுக்குள் கள்ளன் கிறிஸ்து இதை சொன்ன அன்றே (கிறிஸ்து சொன்ன நாளிலே) சென்றானா அல்லது என்று என்பது தான் கேள்வி?? இரண்டையுமே பார்க்கலாம்!! கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தை புரிந்துவைத்திருக்கிக்றபடி பார்த்தோமென்றால்,
3. கிறிஸ்து பரலோகத்தில் இல்லாமல் பரதீசிலி தான் இருக்க வேண்டும்!!
இன்னும் பல அபத்தமான கருத்துக்கள் தான் தோன்றும்;ஆனால் வசனத்தை வேதத்தின்படி புரிந்துக்கொண்டால் சத்தியம் விளங்கும்!! 1. மரித்த அன்று மாத்திரம் இல்லை, மரித்து மூன்று நாட்கள் கிறிஸ்து கல்லறையில் தான் இருந்தார் என்பது வேதத்தில் உண்மை!!
மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.
மத்தேயு 17:23 அவர்கள் அவரைக்கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
மத்தேயு 20:19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
லூக்கா 9:22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.
லூக்கா 18:33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
I கொரிந்தியர் 15:4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,
வசனங்களெல்லாம் இப்படி அவர் மூன்று நாள் மரித்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறது, ஆனால் கிறிஸ்தவர்களோ விசுவசிப்பது அவர் மரித்த அன்றே பரதீசுக்கு கள்ளனை கூட்டி சென்றார் என்று!! 2. கிறிஸ்து மூன்று நாட்கள் வரை மரித்த நிலையில் இருந்தார், அவரை தேவனே எழுப்பினார், கிறிஸ்து சுயமாக மரித்தோரிலிருந்து எழும்பவில்லை,
அப்போஸ்தலர் 2:27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்;
இந்த வசனத்தின் விளக்கம் அடுத்து வரும் வசனமே!!
அப்போஸ்தலர் 2:31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான்.
கிறிஸ்து தேவனால் தான் எழுப்பப்பட்டார்!! இதற்கும் பல வசனங்கள் இருக்கிறது!! இன்று கிறிஸ்துவாக வந்தவர் பிதா தான் என்று சொல்லுபவர்களும் இந்த வசனங்களை தியானிக்கலாம்!!
அப்போஸ்தலர் 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
அப்போஸ்தலர் 2:32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.
அப்போஸ்தலர் 3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
அப்போஸ்தலர் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
அப்போஸ்தலர் 13:33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
அப்போஸ்தலர் 13:34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
அப்போஸ்தலர் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.
இன்னும் நிறைய வசனம் இருக்கிறது!! அடுத்து கள்ளன் அன்றே பரதீசுக்கு போகும் வாய்ப்பு இருக்கிறதா? இல்லை என்கிறது வேதம்!!
அப்போஸ்தலர் 2:29. சகோதரரே, கோத்திரத் தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.
தாவீது மரணம் அடைந்து எத்துனையோ வருடங்கள் ஆகியும் இன்னும் எழுந்து போகாதவராக கல்லறையில் அழிந்திருந்தார், அப்படியிருக்க கள்ளன் மட்டும் இந்த விதியை மீறி "பரதீசி"ற்கு செல்ல முடிந்திருக்குமா!! அப்படி என்றால் கிறிஸ்து உண்மையில் அந்த கள்ளனிடத்தில் அப்படி என்ன சொல்லியிருந்திருக்க வேண்டும், அதை ஏன் கிறிஸ்தவர்கள் இப்படி புரிந்திருந்திருக்கிறார்கள்!!?? அந்த வசனத்தின் சரியான மொழிப்பெயர்ப்பு இப்படி இருந்திருந்தால் சரியாக இருந்திருக்குமே:
லூக் 23:43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இயேசு அவனை நோக்கி, "என்னுடன் நீ பரதீசிலிருப்பாய் என்று இன்றே உனக்கு மெய்யாகவே சொல்லுகிறேன்" என்றார்!! இப்படி இருந்திருந்தால் வேதத்தின் மற்ற வசனங்களுக்கு இது பொருத்தமாக இருந்திருக்கும்!! அதையும் என்னவென்று தொடரும் பதிவுகளில் பார்ப்போம்
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
முதலில் வாசித்து விட்டு உண்மையிலே யாரோ இப்படி ஒரு உளறல் பதில் சொல்லியிருக்கிறார்கள் என்று நம்பி விட்டேன். சகோதரர் சில்சாம் ரொம்ப அதிகமாக இவர்களோடு பழகி அவர்களை மாதிரி சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல
பிதாவை அறியாமல் , ஒரு நற்கிரியையும் செய்யாமல் வலது பக்கத்து கள்ளன் எப்படி பரதீசுக்கு போனான்?
அதுல பாருங்க, ஜாண் நீங்க மூலபாஷையின் அர்த்தத்தையும் மூலப்பிரதியிலுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்;இதில் திரித்துவவாதிகள் (???) பெரிய மோசடியைச் செய்து மொழிபெயர்ப்பில் பெரிய தவறு செய்துவிட்டார்கள்; நீங்கள் அதை எப்படி வாசிக்க வேண்டுமென்றால், என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்றே வாசிக்கவேண்டும்;அதில் "இன்று" என்பது பிற்காலத்தில் திணிக்கப்பட்டது; மூலபாஷையில் அது இல்லை;அதன்காரணமாகவே இவ்வளவு குழப்பம் வந்தது;பரதீசு என்பது எங்கோ இல்லை;இந்த பாழும் பூமியையே மேசியா வந்து பரதீசாக மாற்றப்போகிறார்;அந்த வரப்போகும் பரதீசில் இருப்பாய் என்பதாகவே இயேசு கள்ளனிடம் சொல்லுகிறார் என்பதை நீங்கள் அறியவேண்டும்;இதற்கு மேல் விளக்கம் கேட்டால் உங்களையும் திரித்துவவாதிகள் பட்டியலில் சேர்த்து போட்டு தாக்குவோம்.
இந்த சில்சாம் இருக்கானே அவன் தான் இதையெல்லாம் நாங்க சொன்னா நம்பாம நாங்க எங்க யெகோவா ஊழியத்தைச் செய்யவிடாமல் தடையாக இருக்கிறான்,அவன் ஒரு வேலையும் செய்யாமல் சோம்பேறியாக(???) வீடுவீடாகப் போய் இயேசுவே தெய்வம் என்று பொய் சொல்லி காசு வாங்கி குடும்பமாக உட்கார்ந்து வெட்கமில்லாமல் சாப்பிடுகிறவன்;அவன் நிச்சயமாகவே நியாயத்தீர்ப்பில் வந்து நிற்பான்,பாருங்க;
நீங்க நல்லா மென்மையா எழுதுறீங்க,உங்களிடம் சத்தியத்தை அறியும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது;அவன் பேச்சு கா வுட்றுங்க,அவன் கூட சேர வேண்டாம் அவன் ஆய் பையன், ஒருமுறை எங்க வேதஆராய்ச்சி கூட்டத்துக்கு வாங்களேன், ஆனாலும் நீங்க அங்கவந்து கண்ட கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, நாங்க என்ன பாடம் எடுக்கிறோமோ அதை அமைதியாக உட்கார்ந்து கவனிக்கணும்; பாடங்களெல்லாம் முடிந்ததும் நீங்க தாராளமா எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்;(மனதில்...அதுக்குள்ள உங்களைப் போட்டுத் தள்ளிடுவோம்'ல..!) எங்களுக்கே ஆரம்பத்திலே ஒன்றும் புரியவில்லை;தவறான எண்ணத்துடனே உள்ளே சென்றோம்;ஆனால் "எல்லாம்" புரிய ரெண்டு வருடம் ஆனது தெரியுமா..? நீங்கள் எங்களை தவறான எண்ணத்துடனே பார்த்தால் நாங்கள் சரியாகவே சொன்னாலும் தவறாகவே தெரியும்;ஆனால் சரியான எண்ணத்துடன் பாசத்துடன் பார்த்தால் நாங்கள் தப்பா சொன்னால் கூட பெரியதாக தெரியாது;வேணும்'னா முயற்சி பண்ணிப்பாருங்களேன்..!
-என்பதாக அந்த (மேசியாவின்) எதிரிகள் கூறுவார்கள்;இது என்னுடைய அனுபவத்திலிருந்து எழுதியதாகும்.(உங்கள் அன்புக்குரிய நண்பன் சில்சாம்)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)