1கொரி. 10:27 அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள்.
28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.
29 உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம்மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?
30 மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்?
31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.
32 நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல;
நம்முடைய இந்து சமுதாயத்தில் வருடமுழுவதும் ஓயாத பண்டிகை தானே;அதிலும் இந்த ஆடிமாதத்துக்குப் பிறகு வருவதெல்லாம் தொடர் பண்டிகை காலங்கள்;இந்த காலகட்டத்தில் மிக முக்கியமானதொரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்;எனது கருத்தை முழுவதுமாக மீண்டும் வாசித்துவிட்டு உங்கள் மனதுக்கு சரியாய் படுவதை எழுதுங்கள் அல்லது செய்யுங்கள்;
கர்த்தர் ஒருவரே நியாயாதிபதி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறிஸ்தவர்களுக்கு சாட்சி அவசியம், கிரியை இல்லா விசுவாசம் செத்ததாய் இருக்கிறது. ஆக நாம் பொதுவாக நன்கு அறிமுகமான நண்பர் வீட்டுக்கு தான் போய் சாப்பிடப்போகிறோம், நாம் விக்கிரகத்திற்கு படைத்தவற்றை உண்ணமாட்டோம் என்று நம்முடைய நண்பர்கள் அறியும் வண்ணம் நம் நட்பு இருந்தால் நாம் கவலைப்படத் தேவையில்லை, என் நண்பர்கள் எப்போதும் எனக்கு தனியாக எடுத்து வைத்துவிடுவார்கள். ஒரு வேளை என் கண் முன்பாக பூஜித்து கொடுத்தால் நான் தயக்கமின்றி வேண்டாம் என்று தவிர்த்ததுண்டு. கண் முன்னாடி விக்கிரகத்திற்கு படைத்ததை உண்ண என் மனம் மறுக்கிறது, நான் கர்த்தரை பிரியப்படுத்த விரும்புகிறேன் நண்பனை அல்ல!! அவ்விடத்தில். அந்த உணவு விஷம் அல்ல, மாறாக நான் உண்ணும் பட்சத்தில் நானும் விக்கிரகத்தை பூஜித்து உண்பேன் என்று நினைத்து விடாமல் இருக்கவும், நம் தெய்வம் பற்றி கூறவும் எனக்கு வாய்ப்பாக கருதுகிறேன் அவர்களின் உறவினர் முன். ஒருவேளை நம்மால் அறியமுடியவில்லை அல்லது அவர்கள் விக்கிரகத்திற்கு படைத்ததை கூறவில்லை என்றால் அதை கர்த்தர் அறிவர். என் கண் முன்பாக பூஜித்து கொடுத்தால் நண்பனை, நண்பன் பெற்றோரை பிரியப்படுத்த முயலுவது என் பார்வைக்கு தவறாக இருப்பதால் நான் தவிர்த்துவிடுகிறேன் . என்னுடைய கருத்து.
(நண்பரே,மிக அதிகமாக ஒற்றெழுத்து(ப்,க்) விடுபட்டிருந்ததாலும் குறில் நெடில் (ண்ண) பிழையிருந்ததாலும் திருத்தியிருக்கிறேன்; "விக்கிரகம்" என்ற வார்த்தையும் விகிரதத்தம் என்று இருந்தது;சரிபார்த்துக்கொள்ளவும்.)
இது குறித்த பல்வேறு அபிப்ராயங்கள் கிறித்தவ வட்டாரத்தில் நிலவி வருகிறது;கடந்த கிறித்தவப் பண்டிகைக் கொண்டாட்ட காலங்களில் நாங்கள் புதிதாக குடியேறிய பகுதியில் வசிக்கும் அண்டை அயலகத்தாருக்கு நல்லெண்ண நட்பு பாராட்டி பண்டிகைக் கால பக்ஷணங்களைக் கொடுத்தோம்; ஆனாலும் இந்த பொங்கல் காலத்திலும் சரி, கடந்த தீபாவளிப் பண்டிகையின் போதும் சரி, அவர்கள் எங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை; இது எங்களுக்கு சற்று வருத்தமாகவும் ஏதோ ஒதுக்கப்பட்டதும் போலவும் இருந்தாலும் அதிலும் ஒரு நியாயம் இருப்பதாக உணர்ந்தோம்.
ஆம்,பெரும்பாலான கிறித்தவர்கள் (மதம் மாறியவர்களே...) தங்கள் அயலகத்தாரின் பண்டிகைக் கால பக்ஷணங்களைப் பெறுவதைத் தவிர்த்து அவர்களைப் புறக்கணித்தோம்; அந்த அனுபவத்தின் காரணமாக அவர்களுக்கு நம்மீது எந்த வருத்தமும் இராதிருந்தும் சங்கடத்தைத் தவிர்க்க நமக்கு பக்ஷணம் தருவதையும் தவிர்த்திருக்கலாம்.
இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து என்னிடம் பேசிய ஒரு சகோதரி ரொம்ப நல்ல பிள்ளையாக என்னிடம் சொன்னது: "அண்ணே,பொங்கல் பண்டிகைக்கு எல்லா வீட்டிலிருந்தும் பலகாரங்களைக் கொடுத்தார்கள்; நாங்கள் ஒன்றையும் சாப்பிடவில்லை; அதை வாங்கி அப்படியே தூக்கிப் போட்டுவிட்டோம்" என்று சொன்னது சற்று வருத்தமாக இருந்தது; அது உணவுப் பொருள் தானே அது நம்மை என்ன செய்யும் அதை ஏன் வீணாக்கவேண்டும், இதனால் அண்டை அயலகத்தாருடன் நட்பு பாதிக்குமே என்று சொல்ல யோசித்துக் கொண்டிருந்தபோதே அந்த சகோதரி சொன்னது,"அவர்கள் படைக்காமலே கொடுப்பதாகச் சொன்னார்கள் ஆனாலும் எனக்கு பிடிக்கவில்லை" என்றார்கள்; இதைச் சொன்னபோது எனக்கு ஒரு வெளிச்சம் உதித்தது போன்ற புதிய சிந்தனை வெளிப்பட்டு அதையே அவர்களுக்கு ஆலோசனையாகச் சொன்னேன்; எங்கள் முன்னோர்கள் வழியில் எங்களுக்கு நன்கு தெரியும், சாமிக்குப் படைப்பதை வீட்டாரே சாப்பிடுவோம், சாமிக்குப் படைக்காமல் சாப்பிடாமல் நாம் சாப்பிடக்கூடாது என்பதால் வீட்டிலுள்ள குட்டீஸ் என்ன தான் கெஞ்சினாலும் பக்ஷணம் செய்துகொண்டிருக்கும் போது தரவே மாட்டார்கள், பெரியவர்கள்; இந்த அனுபவத்தின் பாதிப்பினால் என் மனதில் தோன்றிய கருத்து என்னவென்றால், கிறித்தவர்களாகிய நாம் சபைக்கு காணிக்கை தசமபாகங்களை செலுத்துகிறோம்; அதன் தத்துவமும் நம்பிக்கையும் என்ன, நம்மிடம் இருக்கும் பெரும்பகுதியானதிலிருந்து ஒரு சிறுபகுதியை எடுத்து ஆண்டவருக்குப் படைப்பதால் அதன் எஞ்சிய பெரும்பகுதியானது ஆசீர்வதிக்கப்படும் என்பது தானே..?
இதே கான்செப்டில் மாற்று மார்க்கத்தவர் தங்கள் தெய்வங்களை நினைவுகூற விழா எடுத்து பொங்கலிட்டு அதில் முதல் பங்கை சாமிக்குப் படையலிட்டு அதன் மீதத்தை தங்களுடைய நண்பர்களுக்குக் கொடுத்து தாங்களும் உண்கின்றனர் என்றால் அதன் தத்துவம் என்ன, சாமிக்குப் படைக்கப்பட்ட சிறுபங்கினால் அதன் மீதமான பெரும்பகுதியானது அந்த சாமியின் அருளைப் பெறுகிறது என்பது தானே..?
அப்படிப்பட்ட பங்கில் கிறித்துவின் பங்கான நாம் பங்கேற்கலாமா..? கூடாது என்பதே வேதத்தின் நேரடியான பிரமாணமாகும்.
"இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை.நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே.நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? " (1.கொரிந்தியர்.10:19 - 22)
இப்படிச்சொன்ன பவுலடிகள் கீழ்க்கண்டவாறும் எழுதும்போது சற்று குழப்பமாக இருக்கிறது;
"விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்." (1.கொரிந்தியர்.8:1)
இதனால் பவுலடிகள் என்ன சொல்லவருகிறார், சமரசமாகப் போகச் சொல்லுகிறாரா என்ற ஐயம் எழுகிறது; ஆனாலும் அவர் தீர்மானமாகச் சொல்வது யாதெனில்,
"எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?" (1.கொரிந்தியர்.8:10)
இதன் காரணமாக சொந்த அறிவின் காரணமாக படைக்கப்பட்டவைகளைப் புசிக்க அல்ல, புசிக்கக் கூடாது என்பதே கட்டளையாக இருக்கிறது என்று அறிகிறோம்; இதன் காரணமாக தேவ அன்பை நிறைவேற்றி அதில் பக்திவிருத்தியடைகிறோம் என்றே வேதம் சொல்லுகிறது; ஆம்,அண்டை அயலகத்தாருடனான அன்பைவிட தேவ அன்பு முக்கியல்லவா..?
ஒரு சலுகை போல இறுதியாக "கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை." (1.கொரிந்தியர்.10:25) என்றும் பவுலடிகள் குறிப்பிடுகிறார்; ஆனாலும் நம்முடைய சமுதாயத்தில் தற்காலத்தில் விக்ரஹ ஆராதனை பெருகியிருக்கும் காரணத்தினால் வியாபாரிகளும் கூட தங்கள் வியாபாரத் தலங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் முதல் பங்கை தங்கள் விக்ரஹங்களுக்கோ அல்லது சித்திரங்களின் மாடங்களிலோ படைத்துவிட்டே வியாபாரம் செய்கிறார்கள்; மேலும் அதனை விநியோக்கும் உறைகளிலும் சாக்குமூட்டைகளிலும் தங்கள் தங்கள் இஷ்டதெய்வங்களின் உருவத்தைப் பதித்திருக்கிறார்கள்.
என்ன செய்வோம், நம்முடைய மனசாட்சியில் சங்கடமில்லாமலும் ஆவியில் பக்திவைராக்கியத்தை மட்டும் வைத்துக்கொண்டும் அந்நிய சக்திகளைக் குறித்து அனைத்து தேவையற்ற அச்சங்களையும் புறம்பே தள்ளிவிட்டு முன்னேறுவோம்; பூரணராகும்படி கடந்துபோவோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)