ஆம், இறையியல் கல்லூரிகளில் நடைமுறைப் பயிற்சியானது போதுமானதாக இருப்பதில்லை. வேதத்தைப் பகுத்து போதிக்க நடைமுறைப் பயிற்சிகளின் மூலமே நுணுக்கமான திறமை (Practical Skills) கிடைக்கும். அது சிறு குழு விவாதங்கள் மூலமும் சிறிய சபைகளின் மேய்ப்பர்கள் மூலமும் அதிகமாக பெற்று வழங்கப்படுகிறது.
இறையியலையும் உபதேசங்களையும் கற்பிக்கும் கலாசாலைகளில் என் வாழ்நாளை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை; அதைக்காட்டிலும் இறையன்பை அனுபவப் பூர்வமாக உணர்ந்து அதனையறியாத ஏழை எளியோர் கல்வியறிவில்லாதோர்க்கு அருகில் நிற்கவே விரும்புகிறேன். வேதத்திலும் தேர்ந்த கல்விமானாக விளங்கிய பவுலடிகளுக்கு இணையாக படிப்பறிவில்லாத பேதுருவும் யோவானும் இருக்கிறார்கள்.
” பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.“ (அப்போஸ்தலர்.4:13)
” அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். “(பிலிப்பியர்.3:11)
குப்பைக்கு குட்பை..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மனைவியிடம் ஜெயித்து வாழ்க்கையில் தோற்பதை விட மனைவியிடம் தோற்று (அல்லது வெற்றியை விட்டுக்கொடுத்து) வாழ்வில் ஜெயிப்பதே சிறந்ததும் மகிழ்விற்கான வழியும் ஆகும்.