தாங்கள் எழுப்பியுள்ள ஐயத்துக்கு எனக்குத் தெரிந்த விளக்கத்தை முன்வைக்கிறேன்;ஒன்று நான் கேட்டறிந்தது,மற்றது என்னுடைய சொந்த கருத்து;"ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறத்தல்" என்பதற்கும் திருமுழுக்கு கட்டளைக்கும் எந்த சம்பந்தமுமில்லை;
திருமுழுக்கு எடுத்தல் என்பது பாவ மன்னிப்புக்காகவும் நீதியுள்ள ஜெய ஜீவியத்துக்காகவும் கொடுக்கப்பட்டது;ஆனால் இகவாழ்வு மறுக்கப்பட்ட இறுதி நிலையிலிருந்த கள்ளனுக்கு அவன் மறுமையடைய இயேசுவானரின் மீதான விசுவாசமே போதுமானது என்பது எனது புரிதல்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
40. மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41. நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42. இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
இதை பற்றி இன்றைய உபதேசங்கள்
யோவான் 3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்
இயேசு இப்படி சொல்கிறாரே பின்பு எப்படி அவன் பரலோகத்துக்கு போக முடியும் என்று சொல்கின்றனர்
மற்றும் சில போதகர்கள் தேவன் அவனுக்கு சொன்னது என்ன வென்றால் இன்றைக்கு நீ என்னுடன் பரதேசியில் இருப்பாய்
அதாவது இன்றைக்கு மட்டும் இயேசு அவனை பரதேசியில் வைத்து கொண்டு நாளைக்கு பாதாளத்துக்கு அனுப்பி விடுவாராம் இந்த வசனத்தின் விளக்கம் குழப்பமாகவே உள்ளது அவன் பரலோகத்திற்கு போய் இருப்பானாஅல்லது அன்றைக்கு மட்டும் தேவன் அவனை பரதேசியில் வைத்து கொண்டு பிறகு பாதாளத்தில் அனுப்பி விடுவாரா
இந்த விளக்கம் தெரிந்த தல நண்பர்களும் மற்றும் பார்வையிடும் நண்பர்களும் தங்கள் கருத்தை பதித்தால்
தெரிந்து கொள்வதற்கு பிரோஜனமாய் இருக்கும் .....................