நம்முடைய யௌவன ஜனம் தளத்தை துவக்கிய ஆரம்ப காலத்திலேயே நாம் நம்முடைய நோக்கங்களில் எத்தனை தெளிவாக இருந்திருக்கிறோம், என்பதைக் குறித்து ஆச்சரியமாக உள்ளது;அப்போதெல்லாம் நம்முடைய எழுத்துக்களும் எவ்வளவு பண்போடு இருக்கிறது..? நம்மைக் குத்திக் கிழித்து குதறியது யார் என்பதை காலம் சொல்லும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"நித்திய ஜீவன்"என்ற பெயரிலும் "சத்தியத்தைத் தேடுவோர்"என்ற பெயரிலும் கிறித்தவ தளங்கள் செயல்படுவது அறிந்ததே; இவற்றை துருபதேசத் தளம் என்று எந்த அடிப்படையில் "யௌவன ஜனம்" சொல்லுகிறது? நமக்குள்ளேயே இத்தனைப் பிரிவினைகள் தேவையா? உண்மையானவர்களை அடையாளம் காண்பது எப்படி?
நம்முடைய ஆண்டவர் மிக எளிமையாகச் சொன்னார், 'அவர்களுடைய கனிகளாலே அவர்களை அறிவீர்கள் ' என்று; பவுலடிகளும் கூட 'உத்தமர்கள் இன்னாரென்று அறியும்படிக்கு மார்க்கபேதம் தேவை 'யென்று கூறுகிறார்;எனவே இடறலடைய வேண்டாம்,முன்பு தானாக அடங்கிவிடும் என்று அமைதியாக இருந்தோம்,நம்முடைய ஆண்டவரும் அப்படியே சொன்னார்; தற்போதோ அறுவடைக்காலம் (அவர்களுக்கும்) நெருங்கிவிட்டதால் எச்சரிக்கையாக இருந்தாகவேண்டும்,எச்சரிக்கவும் வேண்டும்; 'உனக்குள்ளதை ஒருவனும் பறித்துக் கொள்ளாதபடி எச்சரிக்கையாய் இரு ' என்றும் வேதம் சொல்லுகிறதே;'மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதோர்- கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திராதோருக்கு வாழ்த்துதல் சொல்லாமலிருக்க வேண்டுமென ' அன்பின் அப்போஸ்தலன் யோவான் சொல்லுவது,ஏன்? கிறிஸ்துவின் உபதேசம் என்பது என்ன? மாம்சத்தில் வந்த கிறிஸ்துவை அறிக்கை பண்ணுவதென்பதென்ன? இவற்றுக்கான பதிலில் அவர்களுடனான வித்தியாசம் என்ன என்பது தெரிந்துவிடும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)