இன்றைக்கு பிரபலமாயிருக்கும் #ஊழியங்கள் #சபைகள் ஊழிய #ஸ்தாபனங்கள் எதுவாயினும் அது ஒரு குடும்பத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்பத்தாரின் ஐக்கியமும் ஒத்துழைப்பும் உழைப்பும் அதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. அது எந்த ஊழியமானாலும் சரி, அதன் பின்னே ஒரேயொரு குடும்பத்தின் #ஆதரவு இருந்தே தீரும்.
அப்படியிருக்க ஊழியத்திற்காக எழும்பிவரும் உங்களில் ஒருவர் உங்கள் அருகிலிருக்க நீங்கள் எங்கோ இருக்கும் பிரபல ஊழியர்களின் பின்னே சென்றால் உங்கள் அருகிலுள்ள அந்த ஏழை ஊழியரைப் புறக்கணிக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம் ?
மறைந்த எனது தாயார் அடிக்கடி சொல்லுவார்கள், உங்கள் அருகில் ஒரு கோயில் இருக்க அதைக் கடந்து இன்னொரு கோயிலுக்குச் செல்லக் கூடாதாம். அது அவர்களுக்கு பெரியவர்கள் சொல்லிக்கொடுத்த பண்பென்று சொல்லுவார்கள். எனவே அருகிலுள்ள அந்த கோயிலில் சேவிக்காமல் அடுத்த கோயிலுக்குச் செல்லமாட்டார்களாம்.
ஆனால் இக்காலத்தில் அவரவர் வீட்டினருகிலேயே சிலருடைய வீட்டின் மாடியிலேயே கூட ஒரு சபை ஆராதனை நடக்கும்போது வேறொரு ஸ்தாபன சபைக்கு அல்லது #நாலுமாவடி #வானகரம் போன்ற வளாகங்களுக்குச் செல்லுகிறவர்கள் மெய்யாகவே தேசத்தின்மீதான அக்கறையினாலோ ஆத்தும பாரத்தினாலோ செல்லாமல் சுய #எழுப்புதல் நாடியே செல்லுகிறார்கள் என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட சுயநலமிகளுக்காக இயேசுவானவர் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவில்லை. கண்டித்துப் போதிக்கும் ஊழியரிடம்தான் பாசமும் பரிவும் இருக்கும். கண்டனத்தை விரும்பாமல் இஷ்டம்போல் இருக்கவே சில பிள்ளைகள் / பெற்ற பிள்ளைகளே கூட அதிக செலவுசெய்து மெகா சர்ச்சுகளுக்குச் செல்லுகிறார்கள். சபைக்குப் போனமாதிரியும் ஆச்சு, தன்னைத் தானே மேய்த்ததும் ஆச்சு.
🎯
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)