#பவுலடிகள்#கிழவிக் கதைகளுக்கு செவிசாய்க்காதே என்று சொன்னது அக்காலம், இன்றைக்கு சோற்றுக்கு பிரச்சினையில்லாத சில கிழவர்கள் சத்தியத்தை சிதைத்து ஒரு கூட்டத்தை வஞ்சிக்கும் காலம். அவர்கள் நம்மோடு எந்தவொரு பொருளிலும் நேருக்குநேர் விவாதிக்க வருகிறதில்லை. மாறாக தற்குறி பைத்தியங்களாய் தான் மட்டுமே பேச எல்லாரும் கேட்கணுமென்ற ஆணவம்பிடித்த குறைமதி அறிவுஜீவிகள்.
#பனியன்+வியாபாரி #அகத்தியன் முதலாக #ஐந்தவித்தான் எனும் வேதப் புரட்டு கதையை புனைந்த குறும்(புப்)பட இயக்குநர் வரை எல்லோருக்கும் ஒரே கொள்கைதான், அது மார்க்கத்தில் ஏதேனும் சர்ச்சையைக் கிளப்பி அதில் ஆதாயம் தேடுவது. இப்படிப்பட்டவர்களை வளரும் ஊழியர்கள் அடையாளங் கண்டு புறக்கணிக்கவேண்டும். அவர்களோடு சகவாசம் வைப்பதும் அவர்களை உங்கள் பகுதிகளுக்கு அழைத்து பயன்படுத்துவதும் உங்களுக்கு உள்ளூரில் மதப் பதட்டத்தை ஏற்படுத்துவதோடு உங்கள் சபைக்கும் அது சாபமாய் முடியும்.
அவர்கள் கிறிஸ்துவின் மாசற்ற நற்செய்தியைத் திரித்து தங்கள் பிழைப்புக்காக அந்நிய மார்க்கத்தாரின் கற்பிதங்களையெல்லாம் கலந்து படைக்கும் கலப்பான மது விருந்தில் நம் விசுவாசிகள் பங்கேற்க அவசியமில்லை. நம்முடைய கிராமப் புறங்களில் ஏழை எளிய மக்கள் விட்டுவந்த விக்கிரகாராதனை வழக்கங்களையெல்லாம் மீண்டும் புகுத்திவிடப் பார்க்கும் தந்திரமான உபதேசங்கள் புதிய விசுவாசிகளை நிச்சயம் இடறலடையச் செய்யும் என்பதால் நடத்திப்பில் இருக்கக் கூடியவர்கள் கூடுதல் கவனமாய் இருப்பது அவசியமாகும்.
I தீமோத்தேயு 6:3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,
4. அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,
5. கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு.
இவ்வுலகை வாழ்வை நீத்து பரம கானானை நோக்கிய பயணத்திற்காக நாம் புறப்படுகையில் நாம் குடியிருந்த பூமிக்குரிய கூடாரத்தை மண்ணில் சேர்க்கிறார்கள். அதுவே வேதத்தின்படி சரியானதாகும். அதற்கு மாறாக #தகனம் செய்தால் என்ன என்னும் மாற்று சிந்தனையானது அந்நிய மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவ விசுவாசத்தினுள் வலியப் புகுத்தப்படுகிறது. அதனை நம் ஆட்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இப்படிப்பட்ட சர்ச்சைகளால் மார்க்கத்தில் குழப்பம் விளைவித்து ஒரு சிலரை பிசாசு வஞ்சித்துக் கொண்டுசெல்ல ஏதுவாகிறது.
இதனிடையே இன்று காலையில் எங்கள் ஆராதனையின்போது வேறொரு சூழலில் ஒரு காரியத்தைச் சொன்னேன். அதாவது மரித்த நம் அன்புக்குரியவர்களின் மீதான பாசத்தினால் அவர்களை அடக்கம் செய்கையில் குழியெடுத்து அதனுள் செங்கற்களை வைத்து அடுக்கி சிமெண்ட் கலவையினால் அதனைப் பூசி நல்ல கனமான அலங்கரிக்கப்பட்ட மரப் பெட்டியில் அலுங்காமல் அந்த சரீரத்தை வைத்து உள்ளே இறக்கிவிட்டு ஆளுக்கொரு பிடி மண்ணைப் போட்டு மூடிவிட்டு திரும்புகிறோம்.
அதன்பின் உள்ளே மண்ணுக்குள்ளே என்னென்ன நடக்கும் என்பதை சற்றே கற்பனை செய்தால் நாம் ஒருபோதும் குழிக்குள் செங்கல் வைத்து சுவர் எழுப்பமாட்டோம். #ஐந்தவித்தான் எனும் கிறிஸ்தவன் செத்தால் #தகனம் செய்யும் கதையை எழுதிய இயக்குநர் பகிரங்கமாக சொன்னது, தானும் தன் மனைவியும் இப்படி மண்ணுக்குள் புழுபுழுத்து மக்கி மறையவிரும்பாமல் தகனம் செய்யவே பிள்ளைகளிடம் கேட்டிருக்கிறோம். அதனால் நான் புகையாய் எழும்பி காற்றின் செட்டைகளில் ஏறி வானத்துக்கு விரைவாகச் சென்றிடுவோம் என்கிறார்.
சரி, அது அவருடைய இறுதி விருப்பம், அதுபற்றி கருத்து சொல்ல நமக்கு உரிமையில்லை, ஆனால் மண்ணுக்குள் வைக்கும் உடலானது உடனே மண்ணோடு மண்ணாகக் கலக்க ஏதுவாக அதனை லகுவான பெட்டியில் வைத்து வெறும் மண்ணிலேயே புதைப்பதுதான் ஆரோக்கியமானதென்று நினைக்கிறேன். மனசுக்கும் அதுதான் சௌகரியமாய் இருக்கிறது. அந்த உடலை சந்தனப் பேழையில் வைத்தாலும் க்ரானைட் ஸ்டோன் வைத்து கல்லறை கட்டி உள்ளே இறக்கினாலும் அந்த உடலை #ஜெயலலிதா’வுக்கு செய்ததுபோல் எம்பாம் செய்தாலும் கூட அது அத்தனை சௌகரியமாய் இராது.
**நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்ற வார்த்தைக்கு மிஞ்சிய மனுஷ ஆலோசனை ஏதுமில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
#கிறிஸ்து எனும் புது ரசத்தை #நற்செய்தி’யெனும் புத்தம்புது கோப்பையில் பரிமாறப் பருகுவோமாக. புளித்த பழைய ரசங்களையும் அதன் கோப்பையும் கொட்டி கழிப்போமாக. மாற்று மதத்தவரை அணுகுகிறேன் என்ற போர்வையில் அவர்களுடைய வேதங்களுடன் / கட்டுக் கதைகளுடனே கிறிஸ்துவை சம்பந்தப்படுத்தி மாசுபடுத்தாதீர்கள்.
இன்றைக்கு #ஐந்தவித்தான் எனும் புரட்டு(ம்) படைப்பினால் #கிறிஸ்தவம் அடைந்த #நன்மை என்ன ? #இந்து சமுதாயமே ஓடோடி வந்துவிட்டதா அல்லது நம்ம ஆட்கள் தெளிவடைந்து அவர்களையெல்லாம் சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார்களா ? இதுபோன்ற வீதிவழி கட்டுச் சோற்றுக்குள் நிச்சயம் செத்த எலிகள் இருக்கும். அதையெல்லாம் எடுத்து உண்போருக்கு வயிற்றுப் போக்கு நிச்சயம்.
அதிகபட்சமாக பரியாசமும் கேலி கிண்டல்களும் தேவையற்ற மத மோதல்களும் மட்டுமே இதுவரை இப்படிப்பட்ட முயற்சிகளினால் நாம் கண்டபலனாகும். இதுபோன்ற கனியற்ற அந்தகார கிரியைகளில் நாட்டங் கொண்டு அவர்கள் பின்னே அலையும் கீழ்ப்படிய மனமில்லாத போக்கிலிகளைவிட்டு நாம் விலகுவது காலத்தின் கட்டாயமாகும். #கிறிஸ்து எனக்கு #ஜீவன், #சாவு எனக்கு #ஆதாயம், அதற்காக நான் செத்தால் #தகனம் செய்வேன் என்பது ஆரிய வந்தேறிகளின் மதமாகும்.
**சர்ச்சைக்குரியவற்றைப் பிணைத்து பிசைந்து கதை பரப்பிவிட்டு அதுபற்றி யாரும் பேசக் கூடாதென்று #வாய்ப்பூட்டு போடுவது கேடுகெட்ட கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும். 🎯
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)