காலையில் ஒரு ஊழியக்காரரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னேன், அக்காலத்து #பெந்தெகொஸ்தே சபைகளும் ஊழியர்களும் எப்படியிருந்தார்கள் என்றால் அப்படி இருந்தார்கள், சொல்வதற்கென்ன கொள்கை தீவிரத்தில் #ஆர்எஸ்எஸ்’காரனைவிட அத்தனை வைராக்கியமாய் இருந்தார்கள்.
இன்றைக்கு முன்னணியிலுள்ள எல்லோரும் அவர்களிடம் கற்றுக்கொண்டு வந்தவர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள்தான். சொல்லப் போனால் எல்லா உபதேசக் கேடுகளுக்கும் அவர்களே முதலாளிகளாய் இருக்கிறார்கள். தேவபயமற்ற நிர்விசாரப் போக்குகளுக்கும் அவர்களே முன்னோடிகளாய் இருக்கிறார்கள். அவர்களில் அநேகர் மற்றொருவர் ஜெபிக்கையில் கண்களைக் கூட மூடுகிறதில்லை. கேட்டால், வேதத்தில் கண்களை மூடியே ஜெபிக்கணும்னு எங்கே இருக்கு என்பார்கள்.
இதனிடையே இன்று எங்கள் சானலில் பேசிய ஒரு போதகர் கடந்த ரெண்டு வாரங்களும் இன்றும் பேசியவற்றில் நெருடலான விஷயங்களை அவருக்கு சுட்டிக் காட்டுவதற்காக சற்றுமுன் அழைத்திருந்தேன். அவரோடு நடைபெற்ற உரையாடல் நீண்ட விவாதம்போல் மாறிவிட்டது. ஆனாலும் மோதல் ஏதுமின்றி இதமாக உரையாடலை முடித்துக் கொண்டேன்.
அவரோடு பேசியபோது சொன்னது இதுதான்.. #டிபிஎம் அல்லது #சிபிஎம் என்று அறியப்பட்ட பெந்தெகொஸ்தே சபையார் யாரிடமும் வாதம் செய்வதில்லை. தங்கள் எந்தவொரு கொள்கையையும் வெட்டவெளியில் வெளிப்படையாய் பேசுவதுமில்லை. அப்படியிருக்க நம்முடைய பிரசங்கங்களில் எதற்காக அவர்களைத் தாக்கவேண்டும் ?
அவர்கள் வெள்ளை உடுத்துவதையும் மருந்து எடுக்க மறுப்பதையும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்ற வகையில் விட்டுவிட்டால் என்ன ? வேதமும் அதைத் தானே சொல்லுகிறது, செய்கிறவன் செய்யாதவனை குறைசொல்லாதே, செய்யாதவன் செய்கிறவனை குறைசொல்லாதே.. நீ பூரணனாகும்படி கடந்துசெல் என்கிறது, வேதம்.
நான் மிகவும் மதிக்கும் ஒருவரையே நானும் பிரதிபலிக்க நினைப்பது உபதேசமல்லாமல் ஒருவித அபிமானமாகவும் இருக்கலாம். அதையே எல்லோரும் பின்பற்றியாகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அப்படிப்பட்டவர்களை நாம் ஏன் இலக்காக வைத்து அதெல்லாம் மதவாதம் அடிப்படைவாதம் என்று தாக்கவேண்டும் ? அப்படியானால் உலகவேஷம் தரிக்காதே என்ற வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கமுடியும் ?
அதேபோல் மருந்தெடுக்காத விஷயத்தில் மருந்தெடுத்த எல்லாரையும் மருந்து குணமாக்கிவிட்டதா என்றும் யோசிக்கவேண்டும். ஆனாலும் மருந்தை யாரும் மறுக்கவில்லை. சிலர் மருந்தை தங்களுக்கு எடுக்க மறுத்தாலும் அடுத்தவர்மீது அந்த கொள்கையைத் திணிக்கவில்லை. அப்படி அவர்கள் பேசியதான எந்தவொரு ஒலிப்பதிவோ புத்தகமோ பரவலாகக் கிடைக்கவும் இல்லை.
**எனவே நமக்குள் நாமே சண்டையிட்டுக் கொண்டு நமது தியான நேரங்களை வீணடிக்காமல் நம்முடைய எதிரி இன்னானென்று பார்த்து அவனை நோக்கியே நாம் களமாடவேண்டும் என்று நினைக்கிறேன். ☺
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)