ஜெனிவாவுக்கு அருகில் #லெமான் ஏரி என்ற அழகிய ஊர். அவ்வூரில் 1729ம் ஆண்டு பிறந்தார் #ஜாண்_பிளெச்சர். சிறுவயது முதலே மிகவும் பயபக்தியுடன் வளர்க்கப்பட்டார் அவர்.
வயது 7. அங்கும் இங்கும் ஓடி விளையாடிய சிறுவன் #பிளெச்சர் ஓர் தவறு செய்து விட்டான். அவ்வளவுதான். பாட்டி அவனை அழைத்தார். பயங்கரமாகத் திட்டினார். "பிசாசு எல்லா துஷ்டக் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு போவான் என்று உனக்குத் தெரியுமா?" அவர் பாட்டி இக்கேள்வியைக் கேட்ட மாத்திரத்தில் 'ஓ' வென்று கதறி அழுதார். தன் தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டான்.
அன்று முதல் பிளெச்சர், தவறான காரியங்களைக் கண்டால், தலைதெறிக்க ஓடிவிடுவார். அறியாமல் சில தவறுகளைச் செய்துவிட்டால் மணிக்கணக்கில் அவைகளுக்காக ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்பார். பாவத்தைக் குறித்த பயம் எப்பொழுதுமே அவர் உள்ளத்தில் இருந்தது. ஆண்டவர் அவரோடு இருப்பதை உணரத் தவறவேயில்லை. அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டார்.
1757ம் ஆண்டு, ஆங்கில சபையின் குருவாகப் பட்டம் பெற்றார். அதுமுதல் #ஜாண்_வெஸ்லியின் உதவியாளரானார். பாவத்தைக் குறித்த இவரின் பிரசங்கம் பலரை திடுக்கிடச் செய்தாலும் அதனை அறிக்கையிட்டு ஆயிரக்கணக்கானோர் இரட்சிப்பைப் பெற்றனர். இவருடைய பிரசங்கம் அப்போஸ்தலருடைய பிரசங்கங்கள் போல அதிகாரமுள்ளதாயிருந்தது.
"என்னுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையாயிருக்கிறது. நான் சீக்கிரம் புதுப்பிக்கப் படாவிட்டால் நரகமே என் நித்திய பங்கு," என்று எழுதிய வார்த்தைகள் நம்மை பரிசுத்தமடையச் செய்து நித்திய ராஜ்யத்திற்கென்று நம்மை ஆயத்தப் படுத்துகின்றது.