1) பிறக்கும் முன்னே தூதர்களால் பெயரிடப்பட்டவன் யார்? (பழைய ஏற்பாடு)
2) பிறக்கும் முன்னே தான் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்று தன் தகப்பனால் கேட்கப்பட்டவன் யார்?
3) தான் பிறந்து, பால் மறந்தும், தன் தாய் தகப்பனை விட்டு ஆசாரிய னிடத்தில் கொண்டு வந்து விடப்பட்டவன் யார்?
4) தன் பிறந்த நாளின் போது ஒருவனை தூக்கிலிட்டவன் யார்?
5) தன் பிறந்த நாளின் போது ஒருவனின் தலையைத் துண்டித்தவன் யார்?
6) தன் பிறந்த நாளை சபித்தவன் யார்?
7) தான் பிறந்தது முதல் ஆறு வருட கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
8) தான் பிறந்தது முதல் மூன்று மாத கால மட்டும் ஒளித்து வைக்கப்பட்டவன் யார்?
9) தான் பிறந்த போது முடவன் இல்லை. ஆனால் அவன் முடவனாயிருந்தான் யார் அவன்?
10) தான் பிறந்த எட்டாம் நாளில் பேசக் கூடாமல் ஊமையாய் இருந்த தன் தகப்பன் பேசினான் யார் அவன்?
11) யாரால் பிறந்தவன் எதை செய்யான் என்று அறிந்திருக்கிறோம்?
12) தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான் யார் அவன்?
13) யாரால் பிறப்பதெல்லாம் எதை ஜெயிக்கும்?
14ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் சப்பாணியாய் இருந்தவன் அவன் எந்த ஊரை சார்ந்தவன்?
15) அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று எப்படி இருப்பான்?
👆🏿மேற்கண்ட கேள்விகளை இந்த குருப்பில் உள்ள சகோதரி மேரி ரோஸலின் சென்னை அவர்கள் அனுப்பி உள்ளார்கள். அவர்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
இதற்கான பதிலை இன்று இரவு 9.00 மணிக்குள் எனது WhatsApp க்கு அனுப்பவும் (9043891544) உங்கள் பதிலை வேத வசனத்தோடு பதிவிடுவது நல்லது. கேள்வியில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்