இதுதான் இந்தியா.. இதன் அழகே இதுதான். பெண்ணடிமைத்தனம் ஓங்கியிருந்த இந்திய சமூகத்தில் பெண்டிருக்கு எழுத்தறிவும் கல்வியறிவும் தந்து அவர்களுடைய நிலையை உயர்த்தியதில் கிறிஸ்தவம் வலுவான பங்காற்றியிருக்கிறது. அதற்கெதிரான காழ்ப்புணர்வை நாம் இன்னமும் சந்தித்து வருகிறோம். ஆயினும் அயராது நம் பணிதொடருவோம். இன்றைக்கு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றும் பிரமிக்கத்தக்க காட்சி இது. இத்தகைய சமவாய்ப்பும் சம உரிமையும் மாற்றார் கருத்துக்கு மதிப்பும் அளிக்கப்படுமானால் இந்தியா வல்லரசாக உருவெடுப்பதை எவரும் தடுக்க இயலாது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தினுள் முதன்முதலாக நுழைந்த சிலிர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.