#facebook என்பதன் பிரதான நோக்கம், நட்பை உருவாக்குதல், அதனை வளர்த்தல் மற்றும் நட்பின் எல்லைகளை விரிவாக்குதல் ஆகும். #socialmedia / சமூக வலைதளம் என்பதே விரிவான கருத்து பரிமாற்றத்திற்காகவும் விரைவான தகவல் தொடர்புக்காகவும் அமைக்கப்பட்டதாகும்.
இதை ஞானமாய் பயன்படுத்தும் பலரும் அதன்மூலம் நல்ல பலன்களை அடைந்திருப்பதுடன் நல்ல நிலையும் அடைந்திருக்கிறார்கள். ஆனால் இதை கோழி சண்டைகளுக்கும் குழி பறித்தலுக்கும் பயன்படுத்துவோர் குறுமதி படைத்தோர் என்றால் அது மிகையல்ல.
இங்கே 2010- வாக்கில் நுழைந்த நான் துவங்கி வைத்த பல காரியங்கள் வெவ்வேறு திசைகளில் சென்றுவிட்டது. இப்போது திரும்பிப் பார்த்தால் எனது வாழ்வின் பொன்னான வருடங்களையே இங்கு தொலைத்துவிட்ட ஏமாற்றமே எனக்கு மிஞ்சுகிறது.
அந்த அளவுக்கு பகையும் துரோகமும் கசப்பும் மிகுந்தவர்களாக சில கிறிஸ்தவர்கள் இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்.
இரண்டு நண்பர்கள், இருவரும் தனித்தனியே விசேஷித்தவர்கள், அவர்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு உரசல் மோதல் கண்டு இருவருக்கும் நடுநிலையாய் நின்று இருவரையும் அமைதிப்படுத்த முயன்றேன்.
ஆனால் என்னை #பனியன்_வியாபாரி #அகத்தியன் முதலாக தரங்கெட்ட முறையில் அவதூறு செய்கையில் பெரியவர் Vyasar Lawrence முதலாக கள்ள மௌனம் காத்தது எனக்கு இயல்பானதாகத் தோன்றவில்லை.
இதனால் அப்படிப்பட்டவர்களைவிட்டு நான் விலகவும் நேர்ந்தது. இப்படி நட்புக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு தளத்தில் பிரிவினைகளே அதிகமாகப் பேசப்படுவது ஆரோக்கியமான போக்கு அல்லவே.
😔
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)