குறிப்பிட்ட முகநூல் நண்பர் #கொரோனா காலத்தில் மிகவும் தயங்கி தயங்கி சில ஆயிரங்கள், ஒரு சிறிய தொகைதான், கைமாற்று என கேட்டுப் பெற்றார். அத்துடன் அவருடைய தொடர்பே இல்லை, இது என்னடா.. பணத்தினால் பல வருட நட்பே பறிபோனதே என்று மிகவும் வருந்தினேன். ஒரு கட்டத்தில் அவருடைய பெயரே கூட மறந்துபோனது.
இன்று சட்டென அவர் நினைவு வரவும் இந்த எண் அவருடையதுதான் என்ற உத்தேசமான கணிப்புடன் அழைத்தபோது மிகவும் நெகிழ்ந்துபோனார், ஜெபிக்கச் சொன்னார்.. ஜெபத்தில் கதறிகதறி அழுதார், அவருடைய நிலைமை இன்னும் மாறவில்லை, நான் உங்களுக்கு கடன்காரனாயிட்டேனே என்று வருந்தினார், நான் அதெல்லாம் பிரச்சினையில்ல, நீங்க எப்படியிருக்கீங்கன்னு நலன் விசாரிக்கத் தான் அழைத்தேன் என்று சொல்லி அவருக்கு தொழில் வாய்ப்புகள் தரக்கூடிய மற்றொரு நண்பரின் தொடர்பு எண்ணைக் கொடுத்து விடைபெற்றேன்.