Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளம் ஊழியர்களின் அவலநிலை | விசாரிப்பாரில்லையே ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
இளம் ஊழியர்களின் அவலநிலை | விசாரிப்பாரில்லையே ?
Permalink  
 


கர்த்தருக்காய் பிரித்தெடுக்கப்பட்ட #இளம்_ஊழியர்கள் இந்த மார்க்கத்தில் அற்பமாய் எண்ணப்படுகின்றனர். அவர்கள் படருவதற்கான கொழுக் கொம்பினைத் தேடும் இளங் கொடியைப் போல் இங்குமங்கும் தேடி அலைபாய்ந்து #வாலிபம் கரைவதற்குள் வாடியே போகிறார்கள். 

 

தப்பித் தவறி யாரும் அவர்களுக்கு #பெண் கொடுத்து இல்வாழ்வில் அமர்த்திவிட்டால் மேலும் மோசம், ஏனையோர்போல் அவர்களுக்கும் #குழந்தைகள் ஆகிவிட்டால் பரியாசப் பார்வைகளும் கேலிப் பேச்சுகளும் ஊழியத்தில் குறிப்பிட்ட வளர்ச்சி காணாவிட்டால் அழைப்பையே சந்தேகப்படுமளவுக்குச் சென்றுவிட அதற்குள் வயது 30-களைக் கடந்து 40-களை நெருங்கினால் இதற்குமேல் எந்த உலக வேலைக்கும் செல்லவும் முடியாது என்ற இக்கட்டான நிலை. 

 

அப்படியானால் #கர்த்தருடைய_வேலை என்ன அத்தனை அற்பமானதா ? இத்தகைய நிலை ஆரிய மதத்தில் இல்லையே, அதில் ஒரு #இளைஞன் #குடுமி வைத்து வேதம் படிக்கச் செல்லும் காலத்தில் இந்த #சமுதாயம் அவர்களை எத்தனையாய் கனப்படுத்துகிறது, அத்தகைய #கனம் பரிசுத்தருக்கு அருட்பணி செய்யும் இளையோர்க்கு ஏன் தரப்படுவதில்லை ? 

 

மேலும் அவர்கள் ஏதேனும் ஒரு உலக வேலைக்குச் சென்று பகுதி நேரமாக ஊழியத்தைச் செய்யலாமே, மற்றவர்கள் வாரமுழுவதும் கடுமையாய் உழைக்கிறார்கள், இவர்கள் மட்டும் ஏன் சும்மா இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

 

இதுபோன்ற இக்கட்டான நிலைமையைப் பார்த்து ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்த எத்தனையோ #இளைஞர்கள் ஆள விடுப்பா என்று ஓடிவிட்டார்கள். இதனால் அவர்களது வாழ்க்கையின் போக்கும் மூன்றுமுதல் ஐந்து வருடங்கள் வரை பின் தங்கிவிடுகிறது. அவர்களில் பலருக்கு வயது 30 ஆகியும் #திருமணம் ஆனபாடில்லை, ஒரு கட்டத்தில் திருமணம் செய்யவே தயங்குகிறார்கள். 

 

இவை எல்லாவற்றுக்கும் மூலக் காரணம், இதுதான்.. #சபை #ஸ்தாபனங்கள் தங்களிடம் தரப்படும் தருமப் பணங்களை முறைப்படி பகிர்ந்து கொடுப்பதில்லை. அதினால் பல இளம் ஊழியர்கள் சுயாதீன ஊழியத்திற்குச் சென்றுவிடுகின்றனர். 

 

கர்த்தர்தாமே அவர்கள் தமது பங்கென தமக்காகப் பிரித்தெடுத்த #லேவி கோத்திரத்தார் எந்த உலக வேலைக்கும் செல்லவில்லை, ஏனைய #கோத்திரத்தார் உழைத்து அதில் 10% லேவியருக்குக் கொடுத்தனர். இதனால் அவர்களுக்கு கோடாகோடியாய் கொட்டியிருக்குமே என்றால் அதுதான் இல்லை, சமநிலைப் பிரமாணத்தின்படியே அனைத்தும் நடந்தது. #கர்த்தர் ஒழுங்கின் தேவனாய் இருக்கிறார். 

 

ஆனால் இக்காலத்தில் #காணிக்கை #தசமபாகம் என்பதே கெட்டவார்த்தைபோல் பாவிக்கப்படுகிறதே, அதுதான் எல்லா குழப்பத்திற்கும் காரணம். பாருங்கள், #பிசாசு எத்தனை தந்திரமாய் தேவ ஏற்பாட்டை நாசம்பண்ணினான், தரவேண்டியவர்களது மனதையும் கெடுத்துப் போட்டான், பெறுபவர்கள் உள்ளத்தையும் குறுக்கிப் போட்டான். 

 

இதனால் #ஊழியம் என்றாலே அது வறுமையில் வாடுவது என்றாகிப் போனது. கர்த்தருடைய பிரமாணத்தின்படி கொடுக்காததும் அவ்வாறு கொடுக்கப்பட்டதை முறைப்படி பங்கிட்டு கொடுக்காததுமே எல்லா சாபத்துக்கும் காரணமாகும். அபூர்வமாக சிலர் கொடுத்தலின் ராஜரீகப் பிரமாணத்தை உணர்ந்தவர்களாய் உதாரத்துவத்துடன் வாழ்ந்து குறைவை வென்று நிறைவைக் காண்கிறார்கள். 

 

**இளம் ஊழியர்களை அற்பமாய் எண்ணாதிருப்போம், கர்த்தருடைய சபையை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவோம். தேவ ஊழியர்கள் தேசத்துக்கே ஆசீர்வாதமானவர்கள். 🎯



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard