அது என்ன எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஏதோ #தேசிய_கிறிஸ்தவ_தினம் என்றொரு புரளி கிளம்பியிருக்கிறதே, அதன் நோக்கமென்ன, அதை யார் முன்னெடுக்கிறார்கள் ? இப்படி பற்பல திசைகளிலிருந்தும் கேள்விகள் எழுகிறது. இப்படியொரு முயற்சியை ஆதி கிறிஸ்தவம் மேற்கொண்டிருந்தால் குறைந்தபட்சம் சுதந்திர இந்தியாவின் காலத்திற்குப் பிறகாகிலும் செய்திருந்தால் அந்த தலைமுறையினர் மனதில் இந்த செய்தி பதிந்திருக்கும். அவ்வாறு தானே எல்லா செய்திகளும் சமுதாயத்தில் உயிரோட்டமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆம், சரியான தேதி தெரியாவிட்டாலும் உத்தேசமான ஒரு தேதியை நிர்ணயித்து அந்த தேதியில் குறிப்பிட்ட சேதியை நினைவுகூர்ந்தால் என்ன ? இப்படியே தான் இயேசுவின் பிறப்பும் கிறிஸ்மஸ் என கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் அரசியல் சமூக சூழல் மாறிவரும் காலக் கட்டத்தில் இது காலத்தின் கட்டாயமே என்ற வகையில் இவ்வருடம் முதல் தூய தோமையர் கொல்லப்பட்ட நாளாக இந்த நாளை (03.07.2021) கொண்டாட இணைவோமாக.
இதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் வகையறுக்கப்பட்டுள்ளது; அவையாவன, 1. முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்துவின் நற்செய்தி இம் மண்ணுக்கு அவருடைய நேரடி சீடரான தோமையர் மூலம் கொண்டு வரப்பட்டதை இக்காலத்தவருக்கு சொல்லவேண்டும். 2. இந்த செய்தியை எங்கும் கொண்டு செல்லும் ஊடகங்களாக ஒவ்வொரு கிறிஸ்தவரும் இணையவேண்டும், இன்றே இன்றுமுதல் செயல்படவேண்டும்.
**இனியும் என்ன தாமதம்.. புறப்படுங்கள் !!!
(🔖As an Architect St Thomas built this church on border of Trivandrm and Nagercoil.Great to have his work here!)