இதுகாறும் நம்முடைய சானலின் மூலம் மார்க்க எழுச்சியும் விழிப்புணர்வும் அறிவின் செறிவும் நாடி பல்வேறு அமர்வைகளை அமைத்து தன்னலமோ உள்நோக்கமோ கிஞ்சித்தும் இல்லாத அறிஞர் பெருமக்களை வரவழைத்து உரையாடியிருக்கிறோம்.
இந்த சிறப்பான அமர்வானது அவை அனைத்தின் தொகுப்பாகவும் அவ்வப்போது எழுந்த ஐயங்களைப் போக்கும் முயற்சியாகவும் இருக்கிறது.
தலைப்பு:
🎯#Live: #Open_Talk-7 |
#இந்திய_மதங்களுக்கும்
#கிறிஸ்தவத்திற்கும்
#என்ன_சம்பந்தம் ?
#கிறிஸ்தவ_அறிஞர்கள்
#ஏமாற்றுகிறார்களா ?
#indian #Christian #religious #connections
#தமிழ்கிறிஸ்தவவிழிப்புணர்வு_ஊடகம்
#Tamil_Christian_Cult_Watch
**நேயர் எழுப்பும் கேள்வி எதுவானாலும் உடனுக்குடன் பதிலளிக்கப்படும். இந்த நல்வாய்ப்பினை நண்பர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளவும், நன்றி. 🙏
#இந்தியா உலக நாடுகளிலேயே ஆகச் சிறந்த கலை கல்வி கலாச்சாரம் வாழ்க்கை முறை மொழிகள் தொழிலகள் குடும்ப அமைப்பு அரசியல் ஒழுக்கம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற தேசமாகும். இதன் சிறப்பு என்பது வேற்றுமையில் ஒற்றுமையே என்பதாகும். இதனை அறியாத குறுகிய மனப்பான்மை படைத்த மத அடிப்படைவாதிகளின் பிடியில் தேசம் சிக்கும்போதெல்லாம் அது கலவரக் காடாக மாறி அதன் குடிகளை அலைக்கழிக்கிறது. அத்தகைய இக்கட்டான காலக் கட்டத்தில் தான் கிறிஸ்தவ சிறுபான்மையினர் சென்று கொண்டிருக்கிறார்கள். சட்டம் அனைவருக்கும் பொதுவானதாயிருக்க அது உள்நோக்கத்துடன் செலுத்தப்படுகையில் சமுதாயத்தில் சமநிலை என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது. நசுக்கப்படும் மக்களின் கூக்குரலையும் குமுறலையும் கேட்கும் தேவாதி தேவன் இருப்பதை ஆட்சியாளர்கள் அறிகிறதில்லையோ என்னவோ, இதுபோன்ற சமூக வலைதள ஊடகங்களின் வழியே நம் உணர்வுகளை சொல்லி வைக்கிறோம்.
அண்மைய காலத்தில் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு விரோதமாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் எண்ணற்ற தீமைகள் தாக்குதல்கள் அவமானங்களில் ஒன்றாக சில நாட்களுக்கு முன்பாக சென்னை நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் அமைந்திருந்து 27 வருடங்களாக இயங்கி வந்த தேவாலயம் ஒன்று அரசாங்க அதிகாரிகளால் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டிருக்கிறது. அனைத்தும் சட்ட நடைமுறைகளின்படியே நடைபெற்றதாக சொல்லப்பட்டாலும் அதற்கு பின்னே பின்னப்பட்ட சதிவலைகளை நாம் கவனத்தில் கொள்ளுவது அவசியமாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடந்த சுமார் 10 வருடங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதுகுறித்த நம் உணர்வுகளை பதிவுசெய்யவும் இனிவரும் காலங்களில் நாம் நடந்துகொள்ள வேண்டிய வழிமுறைகளைக் குறித்த ஆலோசனைகளைப் பகிரவும் இன்றைய அமர்வில் பேராயர் விஎஸ்.ஐசக் ஐயா அவர்கள் நம் அரங்கத்தில் இணைகிறார்கள்.
**நண்பர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் இணையவும் இதனை மற்றவர்களுக்கு பகிரவும் அன்போடு வேண்டுகிறோம், நன்றி.