இவ்வுலகின் ஆதிவேதம் யூதர்கள் வழியே நாம் பெற்று நம் கைகளில் தவழும் #பைபிள் எனப்படும் #பரிசுத்த_வேதாகமம் மட்டுமே என்பதனை ஆய்வாளர் அறிஞர்கள் சிந்தனையாளர்கள் யாவரும் நன்கு அறிவர்.
எழுதப்பட்ட வேதங்களில் காலத்தால் தொன்மையானது பைபிள் மட்டுமே என்பதனை நாமும் அறிவோம். நாம் வாழும் மண்ணின் தன்மைகளும் குறியீடுகளும் பைபிளில் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு எனலாம்.
இதனிடையே இந்திய சமூகத்தின் இருபெரும் பிரிவுகளான சைவம் மற்றும் வைணவம் கற்பிக்கும் தத்துவங்களும் பின்பற்றும் வழிபாடுகளும் பைபிளை தழுவியே செல்லுவதை காண்கையில் நாம் அதுகுறித்து ஆய்வு செய்வது நம் கடமையாகும்.
எதிலிருந்து எது தோன்றியது, எது முந்தையது என்பதை ஆராயும் ஆவல் இயல்பானது. அத்தகைய முயற்சியின் துவக்கமே இந்த அமர்வாகும்.
இந்த கருத்தரங்கில் இணைவோர் கண்ணியம் காப்பது மிகமிக அவசியமாகும். நம் கட்டுப்பாடுகளை மீறி உணர்ச்சிவயப்படுதல் என்பது நம் தேடலை முடக்கிவிடும் ஆபத்து உண்டு என்பதால் வேத ஒப்புமை ஆய்வாளர்கள் பகிரும் விஷயங்களை நிதானமாக கவனிக்கவும் நிதானிக்கவும் பட்சமாய் வேண்டுகிறோம், நன்றி.
இன்றைய அமர்வில்
#சைவ_சித்தாந்தம் பேசும்
#ஆன்ம_மீட்பின்_வழி (#விவிலிய_ஒளியில்)
#ஏழாவது_சுற்று
வழங்குவோர்:
போதகர் ஜான் இராஜைய்யா அவர்கள் (கிருபாசனம் சபை, மதுரை)