India rejects US report on religious freedom, says it does not take cognizance. இந்தியாவில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க அறிக்கையை இந்தியா நிராகரித்துவிட்டது.
கடந்த 2014 பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், இந்தியாவில் மதரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்தியா தரப்பில் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014 தேர்தலுக்குப் பின்னர் இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான அவதூறு விமர்சனங்கள், வன்முறைத் தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ ஹிந்து பரிஷத் தலைமையிலான கட்டாய மதமாற்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இவை ஆளும பாஜக அரசியல்வாதிகள் ஆதரவுடன் நடக்கிறன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான சகிப்புத்தன்மை குறைந்து வருவது தொடர்பாக அதிபர் ஒபாமா இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாள விகாஸ் ஸ்வரூப் கருத்து தெரிவிக்கையில், அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான ஆணையம், இந்திய மதச் சுதந்திரம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை நம் கவனத்துக்கு வந்துள்ளது. கடந்த 30ஆம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை ஆராய்ந்தபோது, இந்தியா மீதான குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாது, இந்திய சமூகம், அரசியல் சாசனம் பற்றி தெளிவான புரிதல் இல்லாமல் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தெளிவில்லாத அந்த அவசரகதியிலான அரைகுறை அறிக்கையை மத்திய அரசு கண்டு கொள்வதாக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள அனைத்து மதத்தினரும் இந்த அறிக்கையை மறுத்துள்ளனர். குறிப்பாக ஓடிஷாவிலுள்ள கிருத்துவ அமைப்புகள் இந்த அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக் கூறியுள்ளனர்.
நிற வெறித்தாக்குதல்களை தொடர்ந்தது நடத்தும் அமெரிக்க காவல்துறையினரை தடுக்க அமெரிக்காவின் மத சுத்தந்திர ஆணையம் முதலில் முயலட்டும் பின்னர் மற்ற நாடுகள் பற்றி அறிக்கை வெளியிடட்டும் என இந்தியர்கள் இந்த அறிக்கை குறித்து கடும் கோபத்திலுள்ளனர்.