Posted Date : 01-11-2014 11:22:52 AM Last updated : 01-11-2014 01:12:42 PM
வீட்டுக்கு ஒரு மரம்
வளர்ப்பதைப்போல வீட்டுக்கு ஒரு கார் வேண்டும் என்று மக்கள் விரும்புவது நம்ம ஊரில். ஆனால், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஸ்புரூஸ் கிரீக் (Spruce Creek) வாசிகள், டிஃபன் சாப்பிடச் செல்வதற்கே வீட்டுக்கு ஒரு விமானம் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சனிக்கிழைமையும் தங்களுடைய விமானங்களை எடுத்துக்கொண்டு, பக்கத்தில் இருக்கும் விமான நிலையத்துக்குச் சென்று, காலை டிஃபன் சாப்பிடுகிறார்கள்.
இதை, 'சாட்டர்டே மார்னிங் காகுல்' (Saturday Morning Gaggle) என்கிறார்கள். விமானத்தில் சென்று டிஃபன் சாப்பிட விரும்புவோர், காலையிலேயே ரன்வேக்கு போய்விட வேண்டும். விமானத்துக்கு மூன்று பேராக 20 விமானங்களில் செல்கிறார்கள். சாப்பிட்டுக்கொண்டே, புதிது புதிதாக வந்திருக்கும் விமானங்களைப் பற்றி பேசுவதும் பிறகு, வீடு திரும்புவதுமாக இருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப் போரின்போது, 'ஏர்பார்க்' (airpark) என்ற பெயிரில், அமெரிக்கா அதிக இடங்களில் தனியார் விமான நிலையங்களை அமைத்தது. அதில், ஸ்புரூஸ் கிரீக் விமான நிலையமே பெரியது. 1946ல் அமெரிக்க விமானப் படை, ஏர்பார்க் விமான நிலையங்களை எல்லாம் மூடத் தொடங்கியது. ஆனால், ஸ்புரூஸ் கிரீக் கிராம வாசிகள் மட்டும், 'நாங்கள் இந்த ரன்வேயைப் பயன்படுத்திக் கொள்கிறோம்' என்று சொல்லி, மூடவிடாமல் தடுத்துவிட்டனர்.
ஏனென்றால் இங்கு குடியேறிய பெரும்பாலானோர், போரில் பணியாற்றிய பைலட்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்குமே விமானங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதனால்தான், 5,000 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில், வீட்டுக்கு ஒரு விமானம் உள்ளது.
இதே ஊரில் வசிக்கும் அமெரிக்காவின் பிரபல நடிகர் 'ஜான் டிரவால்டாவுக்கு போயிங் 707, கல்ஃப் ஸ்ட்ரீம் ஜெட் போன்ற பெரிய விமானங்கள் இருக்கின்றன. வீட்டின் முன் கார்களுக்கு ஷெட் இருப்பதுபோலவே, ஒவ்வொரு வீட்டிலும் விமானங்களுக்கென ஷெட் அமைத்திருக்கிறார்கள்.
வீட்டின் முன் இருக்கும் சாலைகள் எல்லாமே ரன்வேயை நோக்கியே இருக்கும். பெருமைக்காக இல்லாமல், சிலர் தங்களின் விமானங்களை வாடகைக்கு விடுகிறார்கள். சிலர், தேர்ச்சிபெற்ற பைலைட்டுகளின் மூலம் விமானம் ஓட்டக் கற்றுத்தருகிறார்கள். இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வர இதுவும் ஒரு காரணம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)