மீடியா மிருகங்கள் கொடுத்த துணிச்சல் காரணமாக போட்டுவைத்த தவறான பாதையீல் தடுமாறி வளரும் ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மீடியா மிருகங்களின் பாணியில் தாங்களும் ஏதாவது வித்தியாசமாக பேசும் நமைச்சல் அவர்களுக்கு உண்டாகிவிடுகிறது. இதன் விளைவாகவே இதுபோன்ற அரைவேக்காட்டுத்தனமான வியாக்கியானங்கள் புறப்படுகிறது.
ஆனாலும் இது ஏதோ சிறுபிள்ளைத்தனமான கூற்று என்று புறக்கணித்துவிடமுடியாது. நம் கையில் இருப்பது ஒரு வேதம். அதை இப்படி ஆளுக்கொருவிதமாக வியாக்கியானம் செய்துகொண்டே போனால் அது ஆண்டவருக்கே அபகீர்த்தியை உண்டுபண்ணிவிடும் என்பதால் இவற்றை உடனுக்குடன் கண்டிக்கிறோம். அதேநேரத்தில் இதுபோன்ற அக்கிரமத்தை அரங்கேற்றும் அனைவரையும் நம்மால் கண்டிக்கவோ திருத்தவோ இயலாது. ஆனால் நம் கவனத்துக்கு வரும் காரியங்களை இயன்றமட்டும் அழுத்தமாக கண்டிக்கிறோம். இதோ அந்த சர்ச்சைக்குரிய பதிவில் எழுதியிருக்கும் நம் கருத்து...
திரு.ஜெயக்குமார் ஹோசன்னா அவர்களே மிஞ்சின நீதிமானாயிராதேயும்.இப்படியெல்லாம் வர்ம்புமீறிய வியாக்கியானங்களைக் கொடுக்கும்போது மக்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்டாலும் பரலோகத்திலிருக்கும் தேவனுடைய கோபம் உங்கள் மீது இறங்குவது நிச்சயம். வேதத்திலுள்ள ஒரு பரிசுத்தவானையாகிலும் சொந்த அறிவினால் விமர்சிப்பது மிகவும் ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.