என் செல்லமகள் மருத்துவத்துறையில் first class யில் தேர்வாகி உள்ளார். அரசாங்கக் கடனுதவித்தொகை அனைத்தும் Scholarship ஆக மாறிவிடுகிறது. என் வாழ்வில் நான் இவ்வளவு மகிழ்வாக இருந்ததே இல்லை.. அவளின் கடுமையான உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது..
கடந்த ஒரு வாரமாக அவளின் தேர்வு காலகட்டம்.. நாங்களும் எந்தக் கேளிக்கைகளுக்கும் இடமளிக்காமல் கிட்டத்தட்ட விரத நிலையிலேயே ஒதுங்கியிருந்தோம்..
மருத்துவத்துறையில் முதல் நிலையில் தேர்வாவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. சாதாரண உழைப்பு அல்ல அது.. மிகப்பெரிய தியாகம் செய்து சாதித்துள்ளார்.