தேர்ந்த பகுத்தறிவாளரான - அதாவது வானளாவிய டிஸர்ன்மெண்ட் பவர் உடைய ”ப்ளாக் ஷீப்” விஜய்இப்படி ஒரு பகீர் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார். இந்த ஆள் கிறிஸ்தவன் தானே ஏன் இவனே இப்படியொரு ஆதாரமில்லாத குற்றச்சாட்டைக் கூறவேண்டும் ? என்று சிலர் அதிர்ச்சியடையலாம். அதாவது கிறிஸ்தவ ஊழியர்கள் ஆள் செட் பண்ணி இப்படி நாடகமாடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஊழியங்களில் பல்வேறு தாறுமாறுகள் அரங்கேறுவதை நாமும் அறிந்திருப்பதுடன் அவற்றை அவ்வப்போது எழுதி கண்டிக்கிறோம். நாம் அந்த பணியைத் துவங்குகையில் இவர்களெல்லாரும் அங்கே பால் குடித்துக்கொண்டிருந்தவர்கள் தான். அப்படிப்பட்ட மீடியா மிருகங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களுடைய மீடியாக்களில் தற்புகழ்ச்சிக்காக ஆடிப்பாடி நடித்தவர்கள் தான். இப்போது தான் ஏதோ வீரம் கொப்பளித்து இப்படியெல்லாம் எழுதுகிறார்கள். எழுதட்டும், ஆனால் அதை கொஞ்சமாவது ஆதாரத்துடன் எழுதவேண்டுமல்லவா ? இந்த வீடியோவைப் பார்ப்போருக்கு நிச்சயமாகவே அந்த பெண்ணின் மீது பரிதாபமும் ஊழியர் மீது கோபமும் ஏற்படும். ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நிதானமாக ஆலோசனை கொடுத்து மீட்காமல் அவளை காட்சி பொருளாக்கியிருக்கிறார். ஆனாலும் அதனை நடிப்பு என்று நாம் சொல்வதற்கில்லை. பிரச்சினை ஒருபுறமிருக்க இதுபோன்ற பொறுப்பில்லாத போலி சீர்திருத்தவாதிகளால் சமுதாயத்தில் இன்னும் குழப்பமும் கிறிஸ்தவத்தின் மீது சலிப்புமே ஏற்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
இங்கே தப்புத்தாளம் போடும் பிக் பிரதர்...
பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் செயல்படும் இந்த அனாமதேயங்களை நண்பர்கள் புறக்கணிக்கவேண்டும். இதே பிரச்சினையை நாம் ஏற்கனவே அணுகியிருக்கிறோம்... அது நண்பர்களின் கவனத்துக்காக..