Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போஸ்டர் வியாபாரிகள் மீது ப்ளாக் ஷீப் பயங்கர தாக்குதல்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
போஸ்டர் வியாபாரிகள் மீது ப்ளாக் ஷீப் பயங்கர தாக்குதல்..!
Permalink  
 


கடந்த பல வருடங்களாக கிறிஸ்துவின் பாடு மரணம் உயிர்த்தெழுதல் காலங்களில் அது தொடர்பான நற்செய்தி வாக்கியங்கள் அமைந்த வாசகங்கள் அச்சிடப்பட்டு தமிழகமெங்கும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டு வருகிறது. இதனை யார் அச்சிடுகிறார் எனும் விவரமோ தனிநபர் புகழோ இடம்பெறுகிறதில்லை என்பதால் இது பலராலும் பாராட்டப்படுகிறது. இதனை ஒரு மணி நேரம் பார்த்தாலும் சரி, ஒரு வருடம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சரி வசனமானது அதற்குரிய வேலையை செய்யும் என்று நம்புகிறோம். இதற்காக செலவிடப்படும் தொகையைவிட கிறிஸ்துவின் நற்செய்தியின் மதிப்பு அதிகமே. இதையும் வறியவர்களுக்கு செய்யப்படும் தான தருமத்தையும் ஒப்பிட்டு ”ப்ளாக் ஷீப்” விஜய் தாக்குதல் தொடுத்திருப்பது இவர் யாரென்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆம்,இப்படியே ஆண்டவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸும் பொருமினான் என்று வேதம் கூறுகிறது.


யோவான் 12:6 அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.

நாகர்கோவில் நகர் முழுவதும் ஈஸ்டரையொட்டி வண்ணமயமான "வசனப் போஸ்டர்களை" காணமுடிகிறது. இதுபோன்ற போஸ்டர்கள் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பி இவற்றை செய்கிறார்கள் என்று புரியவில்லை.

இதைப் படிக்கும் மக்கள் அந்த வசனங்கள் மூலம் தொடப்பட்டு இரட்சிக்கப்படுவார்கள் என்று நம்புகிறார்களா? தற்கொலைக்கு முயன்று கடலுக்கு போன ஒரு மனிதனை காற்றில் பறந்து வந்து கைகளில் சிக்கிய கைப்பிரதி காப்பாற்றிய வரலாறுகள் உண்டு. தேவன் அதிசயங்களை நிகழ்த்துகிறவர் என்பது உண்மைதான். ஆனால் இது எப்போதோ ஒரு முறை, எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அதிசயம்.

பத்தாயிரம் ஆயிரம் செலவிட்டு செய்யும் ஒரு விளம்பரத்துக்கு வெறும் நூறு ரூபாய்க்குத்தான் வியாபாரம் நடக்கும் (Return on investment) என்று தெரிந்தால் அதை எந்த வியாபாரியாவது செய்வானா? வியாபாரத்தில் ஞானமாக யோசிக்கும் இவர்கள் ஏன் ஊழியத்தில் யோசிக்கிறதில்லை. "நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு" என்று நீதிமொழிகள் 24:6 சொல்லுகிறது.

இந்த போஸ்டர் அடிக்க 5000 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தப் போஸ்டர்கள்மீது இன்னும் இரண்டு நாளில் வேறு போஸ்டர்கள் ஒட்டப்படும். அதன்பின் அந்த வசனப் போஸ்டர் எண்ணமற்றுப் போய்விடும்.

ஆனால் அதே 5000 ரூபாயை மிகுந்த தேவையில் உள்ள ஒரு குடும்பத்தை சந்தித்து அவர்களோடு பழகி, அவர்களது அவசரத் தேவைக்கென்று செலவிட்டு அவர்களுடனான நட்பையும், ஐக்கியத்தையும் வளர்த்துக்கொண்டால் அது எத்தனை பயனுள்ளதாக இருக்கும்! வேதம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது இதைத்தானே! ஏசாயா 58 நமது உச்சந்தலையில் உறைக்கும்படி சொல்வதும் இதைத்தானே!

இப்படிப்பட்ட உதவிகள் மூலம் அந்தக் குடும்பம் இயேசுவை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது, அப்படி இல்லாவிட்டாலும் அவர்களது தேவையாவது சந்திக்கப்பட்டிருக்கும், இயேசு நல்லவர், கிறிஸ்தவர்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர்கள் என்ற எண்ணமாவது அவர்களிடத்தில் மிஞ்சியிருக்கும். ஆனால் இவர்களோ ஊழியம் என்ற பெயரில் காசைக் கொண்டுபோய் முட்டாள்தனமாக கடலில் கரைக்கிறார்கள்.

நம்மைச் சுற்றி மிகுந்த தேவையுள்ளவர்கள் இருக்கிறார்கள், அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்குகிறவர்கள் இருக்கிறார்கள். மிகுந்த பிரச்சனையுள்ளவர்கள் இருக்கிறார்கள். பட்டினியோடு இரவில் தூங்கப்போகிறவர்கள் இருக்கிறார்கள், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கும், மருத்துவச் செலவுக்கும் காசில்லாமல் வாடுபவர்கள் இருக்கிறார்கள். எவ்வளவு அழகாக, வண்ணமயமாக, கிரியேட்டிவாக அடித்தாலும், நாம் அடிக்கும் போஸ்டர்கள் அப்படிப்பட்டவர்களிடம் பேசாது, நம்மிடமுள்ள பணத்தை அவர்களுக்காக அக்கறையோடு செலவிட்டு நாம் அவர்களிடம் காட்டும் அன்புதான் பேசும்.



-- Edited by Yauwana Janam on Thursday 24th of April 2014 01:11:44 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard