முரண்பாட்டின் பிரதிபிம்பங்களாக வலம்வந்துகொண்டிருக்கிறார்கள், இந்த போலி சீர்திருத்தவாதிகள்... இதோ இன்றைக்கு ஊரை ஏமாற்ற போலியான சமாதான சந்திப்புகள்... மறுபுறம் தொடரும் முறுமுறுப்புகள்... விரோதங்கள்...பகைகள்...இவர்களெல்லாரும் எந்த ஆவியில் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே கேள்விக்குறியாகும்.
ஒருவர்மீது ஒருவர் சேற்றை அள்ளிவீசிக்கொள்ளுகிறார்கள். திடீரென இப்படி போஸ்கொடுக்கிறார்கள்... கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் சண்டையிடுகிறார்கள்...இவர்களிடமிருந்து நம்முடைய மார்க்கம் என்ன கற்றுக்கொள்ளமுடியும் ? இதோ தொடரும்...பழைய குப்பைகளின் தொகுப்பு... இதில் இலக்காக வைத்து பாதிக்கப்பட்ட நமக்கு இதுவரை ஒரு சமாதானமும் சொல்லப்படவில்லை என்பதோடு இன்னொருவரை குற்றஞ்சாட்ட இதையே பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். இது என்ன வகை கிறிஸ்தவமோ ???
Ponnudurai Josephநிச்சயமாக "நெஞ்சை நக்குவது" போன்ற கட்டுரையை அசுத்த ஆவிகள் பிடித்த நபர்களால் மட்டுமே எழுத முடியும். இப்படிப்பட்ட நபர்கள் ஜெபத்தில் பேசுவது அந்நிய பாஷையல்ல அது உளரல் ....
இந்த ரவுடி பாஸ்டர் இம்மி எப்படிப்பட்ட ஆவியை உடையவர் என்று நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்துவின் சரீரமாயிருக்கும் சபையில் அங்கமாயிருக்கும் ஒரு விசுவாசிக்கும், ஒரு ஸ்தல சபையின் விசுவாசிகளை கிறிஸ்துமுன்பாக பழுதற்ற மணவாட்டியாக படைக்கும் மாபெரும் பொறுப்பை வகிக்கும் மேய்ப்பனுக்கும் குணாதிசயத்தில் பெரும் வேறுபாடு இருக்கும். அது என்ன தெரியுமா? சாந்தகுணம், ஆவிக்குரிய முதிர்ச்சி, தகப்பன் இருதயம் போன்றவை. ஒரு public forum -இல் கீழ்தரமான ரவுடி போல நடந்துகொள்ளும் நபர் எப்படி தன் ஆடுகளைக் குறித்து கிறிஸ்துவுக்கு முன் நின்று கணக்கு ஒப்புவிக்க முடியும்? அந்த ஆடுகளுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? இவரிடத்தில் மாட்டிக்கொண்டுள்ள அப்பாவி ஆடுகள் குறித்து எங்கள் இருதயம் துக்கத்தால் நிறைகிறது.
முதியோருக்கு அவர்களது நரைதான் கிரீடம் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் கூட இந்த நபருடன் சேர்ந்து நையாண்டியும் பரிகாசமும் செய்வதும் அவர்கள் இம்மானுவேலால் அவமரியாதையாக விளிக்கப்பட்டு அதனால் அவரைக் கேள்விகேட்கும் சாம் சுதாகர் பேசுவதை விமர்சனம் செய்வதும் கொடுமை. முழுக்க முழுக்க குருட்டாடத்தால் நிறையப்பட்டு, தங்களுக்குள் உள்ள ஆவி ஏவுகிறபடி நடக்கிறார்களே என்று சில வயதில் மூத்த பெரியோரைக் குறித்துக்கூட வேதனைப்பட வேண்டியதாயிருக்கிறது.
பரிசுத்தமான பிரசங்கபீடத்தில் நின்று பரிசுத்த ஆவியால் நிறைந்து தேவவார்த்தையைப் பேசும் நபர் எப்படிப்பட்ட ஆவிக்குரிய தகுதி உள்ளவராய் இருக்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது?(1தீமோ3:1-7) இம்மானுவேல் ஆபிரகாமின் அநாகரீக நடவடிகையைப் கடந்த சில மாதங்களாகப் பார்த்தவர்கள் எத்தனைபேர் அவர் சபையில் அங்கத்தினராக இருக்க விரும்புவீர்கள்?
ஒரு போதகர் பொய் சொல்லலாமோ? நேற்று முழுவதும் காணாமல் போனதற்கு இண்டெர்நெட் இல்லாத கிராமத்தில் இருந்ததே காரணம் என்கிறார். ஆனால் நேற்று சில கமெண்டுகளுக்கு லைக் போடுவதற்க்கு மட்டும் நேற்று நண்பகல் (அக் 6) அருகில் உள்ள பட்டணத்துக்கு சென்றுவந்தாரா? பொய்க்குப் பிதாவின் மகனைப் போல் நடக்கும் இவர் தேவ வார்த்தையைப் பேசுவதெப்படி?
இந்த ரவுடிப் பாஸ்டரே எங்களை அழைத்தார், இவர் நடத்தும் நிறுவனம் (சபையல்ல) எத்தகையது என்று பார்க்க மிகவும் ஆவலாய் உள்ளோம். நாங்கள் பாதுகாப்பாக (!??) வந்து சேர ஜெபிப்பதாகக் கூறியிருந்தார். இவர் அதற்காகக் கவலைப்படவே வேண்டாம், தகுந்த சட்டப் பாதுகாப்புடனேயே வருவோம்.
இவர் தனக்கு வசதிப்பட்ட காரியங்களை மட்டும் எடுத்து அதற்கு கமெண்ட் எழுதுகிறார். மூன்று வருடக் கணக்கு விபரங்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தோம், இதுவரை எங்களுக்குக் கூரியர் வந்து சேரவில்லை, அதைப்பற்றி இவர் பேசவேயில்லை. எனவே பணவிஷயத்தை விட இன்னும் வேறு ஆழமான பல காரியங்கள் ஒளிந்திருப்பதாகத் தெரிகிறது.
இந்த விவாதங்களில் பங்குகொண்ட எத்தனைபேர் தன்னைப் பாஸ்டர் என்று அழைத்துக் கொள்ளும் இந்த நபரின் சபைக்கு சென்றிருப்பீர்களோ அல்லது இவரை பெர்சனலாக அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை. ஆனால் இந்த நபரை கடந்த காலத்தில் தனிப்பட்டவிதத்தில் அறிந்த நபர்களான திலக் ஆபிரகாம், கிளாரி குட்டன் ஆகியோர் கொடுத்திருக்கும் கமெண்டுகளை கூர்ந்து பார்க்கும் போது இந்த நபரைக் குறித்து “வேறு கோணங்களிலும்” சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த இருவரும் இந்த நபரின் மிரட்டலுக்கும், தங்கள் சொந்த சொந்த கவுரவத்துக்கும் பயந்து தங்கள் சுய அடையாளத்தை வெளியிடாமல் இருக்கிறார்கள். என் ஆத்தும நேசரின் பெயரைச் சொல்லிக்கொண்டு அசிங்கங்களில் ஈடுபடும் ஒரு நபரை வெளிப்படையாக வைத்துத் தோலுரிக்காமல் விடமாட்டோம். இவர் ”யார்” என்று தெரிகிறதா? திருமுழுக்கைக் குறித்து இவருக்கு பேச என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட நபரைக் குறித்து மிக எச்சரிக்கையாய் இருங்கள்! இவருக்காக மத்தளம் கொட்டியவர்கள் இந்த நபரின் முகத்திரை கிழிக்கப்படும்போது நிச்சயம் அவமானத்தில் ஓடி ஒளிந்து கொள்ளுவார்கள்.
சென்னையில் கவுரவமாக ஐ.டி எஞ்சினியர்களாக இருக்கும் நபர்கள் முகப்புத்தகத்தில் கட்டுரை எழுதுவதோடு நிறுத்திக் கொள்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார், கட்டுரை எழுதுவதும், பிரசங்கம் பண்ணுவதும் மாத்திரம்தான் ஊழியம் என்று யார் சொன்னது? பன்றியைக் கண்டு சிலர் விலகிப் போவது பன்றி மீது பயத்தினாலல்ல அருவருப்பினால்தான். இதை ஒரு உதாரணத்துக்குத்தான் சொல்லுகிறோமே தவிர யாரையும் பன்றி என்று அவமரியாதையாகக் குறிப்பிடவில்லை.
இதை எந்த அதிகாரத்தில் செய்கிறீர்கள், இந்த சபையை சோதனையிட நீங்கள் யார் என்று கேட்பவர்களுக்கு: இவர் அளவுக்கு எந்தப்பாஸ்டரும் சவால்விடவில்லை. எந்த சபையிலும் போய் வலுக்கட்டாயமாகச் சோதனையிடும் வேலையும் எங்களுக்கில்லை. அதை நாங்கள் விரும்பவுமில்லை. நாங்கள் உண்மையில் மந்தைக்காக கர்ப்பவேதனைப்படும் மேய்ப்பர்களை அளவில்லாமல் நேசிக்கிறோம், உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறோம். ஆனால் இங்கு இவரே அழையா விருந்தாளியாக வந்தார், தனது ஆவிக்குரிய நிர்வாணத்தை வெளிப்படுத்தினார். சபைகளைச் சோதனையிட வருமாறு எங்களை அழைத்தார் அப்போது இனித்தது, அமிலச் சோதனைக்கு உட்படப்போவது தன் சபை என்று தெரிந்தவுடன் கசக்கிறதோ?
குறுகிய கால அவகாசத்துக்குள் நாங்கள் வரமாட்டோம் என்பது அவர் கணக்கு, நாங்கள் வரும் நாள் நேரம் அவருக்கு அறிவிக்கப்படும். இந்த ”நூதனச் சபையைப்” பார்வையிட விரும்பும் யாரும் அச்சமின்றி எங்களுடன் வரலாம். எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
காணிக்கையைத் திருடும் போதகர்களைக் குறித்து, மாய்மாலம் பண்ணும் போதகர்களைக் குறித்து, விபச்சாரத்தில் ஈடுபடும் போதகர்களைக் குறித்தெல்லாம் கிறிஸ்தவ உலகில் கேள்விப்பட்டிருக்கிறோம். இது ”ரவுடிப் பாஸ்டர்” என்ற நிலைக்கு இப்போது வளர்ந்து வந்திருக்கிறது. இவரையும் இவரது நிறுவனத்தையும் விரைவில் சந்திக்க ஆவலாயிருக்கிறோம்.
நண்பர்களே, கிறிஸ்தவ விரோதிகளை எதிற்பதற்காக தன்னோடு இணைவதற்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் அவர்கள் அழைப்பு விடுத்திருப்பதாக நண்பர்கள் சொல்லி அறிந்துகொண்டேன். அவர்களுக்கு என்னுடைய பதில்.
Immanuel Abraham
புதிதாக முக புத்தகத்திற்கு வந்திருக்கும் புதுமுகங்களுக்கு பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாம் பற்றி அவருடைய உண்மையான ரூபம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தன்னை ஆவிக்குறிய பெந்தேகோஸ்தே பாஸ்டராக காட்டிக்கொள்வார். தன் சபையில் காணிக்கை வாங்கமாட்டேன் என்று சொல்வார். தான் கத்தோலிக்கர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரானவர் என்று பகிரங்கமாக தன்னை காட்டிக்கொள்வார். கலட் குரூப்புகளை களை எடுக்கவேண்டும் என்றும் பகிரங்கமாக முழங்குபவர்.
மற்றவர்களுக்கு கமென்ட் எழுதுபவர்களை போனில் தொடர்புகொண்டு மிரட்டுவதும் தனியாக இன்பாக்சில் மெசேஜ் அனுப்பி மிரட்டுவதும் அவருக்கு வாடிக்கையாக இருந்நதது. தன் கருத்துக்கு எதிராக கமென்ட் எழுதுவோரின் குடும்ப போட்டோக்களை எடுத்து ஆபாசமாகவும் அசிங்கமாகவும் எழுதுவது இவரின் இயல்பு. பல போலி ஐடிகளில் (Fake IDs) வந்து கெட்ட வார்த்தைகளை அசிங்கமாக எழுதுபவர் என்பதும் அவரின் நண்பர்கள் வட்டாரத்தில் இருக்கும் பலருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாமிடம் அவரைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக நண்பர் விஜய் அவர்கள் அவர் சபையின் காணிக்கை விபரங்கள் எப்படி என்று அவரிடமே கேட்பொழுது தன் சபைக்கு வந்து அவைகளை பார்க்கும்படி சவால்விட்டார். சரி பாஸ்டர் ஒரு தேதியை சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம் என்று சொன்னவுடன் 'கள்ளிகுளம் வந்துவிட்டு உயிரோடு திரும்பிவிடுவாயா' என்றும் பகிரங்கமாக மிரட்டினார். ஆதுவுமல்லாமல் நண்பர் விஜய்குமாரைப்பற்றி அவதூராகவும் ஆபாசமாகவும் 'நெஞ்சை நக்குவது' என்கின்ற தலைப்பில் மிகவும் கேவலமான ஒரு கட்டுரையை எழுதி தன் முகபுத்தகத்திலேயே வெளியிட்டார். அதற்கு முகபுத்தகத்திலுள்ள பாஸ்டர்களும் விசுவாசிகளும் தங்களுடைய கண்டனங்களை அப்போது தெரிவித்தனர் என்பதை அனைவரும் அறிவர். பின்னர் ஆபாசமான வரிகளை நீக்கி தனக்கு எதிராக கண்டனம் தெரிவித்த அனைவரின் கமென்டுகளையும் நீக்கிவிட்டார். இதோ அந்த பதிவின் ஒரு பகுதி :
இப்படிப்பட்ட ஆவிகளையுடைய ஒருவர் சபையின் பாஸ்டராக இருப்பாரானால் அவருடைய சபையின் விசுவாசிகளின் நிலைமை என்னாகும் என்பது பலருடைய கேள்விக்குறி. இந்த மாதிரியான கனிகளையுடைய பாஸ்டர் நிச்சயமாக அசுத்த ஆவிகள் நிறைந்தவராகதான் இருப்பார். ஆனால் இவைகளெல்லாம் தவறு என்று நினைத்து அவர் திருந்தியிருக்கிறாரா??? அல்லது தன்னுடைய கடந்தகால செய்களை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைத்து தற்போதும் தன்னை ஆவிக்குறிய பாஸ்டராக காட்டிக்கொண்டு நடிக்கிறாரா ???? என்பதை அவருடைய கனிகளால்தான் அறிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அவைகள் ஒருநாள் வெளிப்படும். ஒரு பக்கம் ரவுடித்தனம் என்றும் இன்னொரு பக்கம் பாஸ்டர் என்றும் வேஷம்போடும் இப்படிப்பட ஒருவரை என்னால் பாஸ்டராக ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏனென்றால் அசுத்த ஆவிகளையுடையவரின் கனிகள்தான் இவைகள் என்பது என்னுடைய கருத்து. ஆனால் சக மனிதராக மதிக்கின்றேன்.
Immanuel Abraham
இப்படிப்பட பாஸ்டருடைய தலைமையில் குழு ஒன்று ஆரம்பித்து இவருடன் இணைந்து கிறிஸ்தவ விரோதிகளை எதிற்பதற்கு நான் ஆயத்தமாக இல்லை. "எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது அரசியலில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால் தேவனுடைய ஊழியத்தில் பிசாசுகளின் துணையோடு செயல்பதுகின்ற அனைவருமே என் தேவனின் எதிரிகள்தான். சைக்கோ என்று இவர் அழைக்கும் சில்சாம் என்ற யவனஜனம் சர்ச்சில் சாமுவேல் பாஸ்டருடைய ஆவிகளும் இவருக்குள் இருக்கும் ஆவிகளும் ஒரே ரகம்தான் (மிகக்கொடிய வஞ்சக ஆவிகள்). ஒரு பிசாசின் தலைமையில் மற்ற பிசாசுகளை எதிற்பதற்கான சூழ்ச்சிக்கு நான் பலியாக விரும்பவில்லை. இவர்களைப்போன்று பலமுகங்களை காட்டி என்னால் ஒருபோதும் நடிக்க முடியாது.
தாமிரபரணியில் நீந்தி விழையாடலாம். ஆனால் கூவம் நதியில் நீந்தி விழையாட நான் தயாராக இல்லை. ஏனென்றால் அது கூவத்தில் தற்கொலை செய்வதற்கு சமானம்.
நண்பர்கள் பீட்டர் சாமுவேல், ஜாண்சன் கென்னடி போன்றோர் அவரைப்பற்றி நன்கு அறிந்திருந்தும் சாக்கடை துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு அதற்குள் நீந்தி விழையாட தயாராக இருந்தால் அது அவர்கள் எடுக்கும் ரிஸ்க். ஆனால், நான் இணைய விரும்பவில்லை. என்னுடைய பாணியிலேயே என்னுடைய பணி தொடரும்.
- ஜி. பொன்னுத்துரை ஜோசப்
(குறிப்பு : நிச்சயமாக "நெஞ்சை நக்குவது" போன்ற கட்டுரைகளை அசுத்த ஆவிகள் பிடித்த நபர்களால் மட்டுமே எழுத முடியும். இந்த ரவுடி பாஸ்டர் எப்படிப்பட்ட ஆவியை உடையவர் என்று நீங்களே நிதானித்துக்கொள்ளுங்கள்.)
விவாதத்திற்காக சவால்விடும் பாஸ்டர் இம்மி அவர்களே ... சாக்கடையில் கல் எறிந்தால் அது நம்மேல்தான் படும் ஆகையால் சாக்க்டையை நல்ல தண்னீராக ஆக்கவும் முடியாது அதுபோல சாக்கடையை தூர்வாரப் போனால் நாமும் அசுத்தமாகுவோம்! என்று நண்பர் எச்சரித்தார். உண்மைதான்.
பணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு அதிக வருமானங்களுக்காக குண்டலினியை பிரக்டீஸ் பண்ணுகின்ற சாக்கடையைப்போன்ற சபைகைளைப்பற்றி செப்டிக் டேங்க் போன்ற பாஸ்டர்களுடன் இரண்டு காரியமல்ல ஈராயிரம் காரியங்கள் விவாதித்தாலும் அதனால் துர்நாற்றம்தான் வீசும் என்பது எம்மைப்போன்றோருக்கு தெரியும். அதைதான் நான் ஏற்கெனவே கூவத்தில் விழையாட தயாரில்லை என்றே ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன்.
ஏற்கெனவே தங்கள் சபையின் காணிக்கை விபரங்கள் பற்றி கேட்டதற்காகதான் 'நெஞ்சை நக்குவது' போன்ற கட்டுரையை எழுதிய மனநோயாளியான தங்களிடம்போய் சாக்கடையை விவாதிப்பது யாருக்கு என்ன பயன்???