Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சாலைவிபத்தில் தேவ ஊழியர் குடும்பத்துடன் பலி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: சாலைவிபத்தில் தேவ ஊழியர் குடும்பத்துடன் பலி..!
Permalink  
 


http://www.maalaimalar.com/2013/12/29054019/7-killed-in-car-accident-near.html



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
சாலைவிபத்தில் தேவ ஊழியர் குடும்பத்துடன் பலி..!
Permalink  
 


Sad news : Eva. David Ethiraj (founder of Arise and shine ministries.) and his wife, son, son-in - law his grand daughter all are died in a car accident while coming from nellai to Chennai near ulundhurpet . Please up hold in your prayers .

மேற்காணும் செய்தி முன்பதாக ஃபேஸ்புக் தளத்திலிருந்து கிடைக்க தொடர்ந்து அதன் விவரங்களை அறிந்து மிகவும் நொறுங்கிப்போனோம். சகோ.டேவிட் எத்திராஜ் - Eva. David Ethiraj (founder of Arise and shine ministries.) எனும் தேவ ஊழியரின் குடும்பமே பலியாகியிருக்கும் செய்தி மிகவும் வேதனையைத் தருவதாக இருக்கிறது. விபத்து நிகழ்ந்த காரணம் இன்னும் கொடுமையானது. அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

 

சொகுசு காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து! தூத்துக்குடியை சேர்ந்த 7பேர் உயிரிழந்த பரிதாபம்!!
  [ஞாயிறு - 29 டிசம்பர்-2013 - 09:41:25 காலை ]
 
ACC.png
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, மணல் லாரி மீது கார் மோதியதில் காரில் பயணித்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். சென்னை அயனாவரம், ஆவடி, கீழ்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த 13 பேர், கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட சொந்த ஊருக்கு அண்மையில் சென்றிருந்தனர். பண்டிகையை கொண்டாடிவிட்டு அங்கிருந்து கார் மூலம் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டனர். இவர்கள் பயணித்த கார் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி என்ற கிராமம் அருகே; வந்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காவல்துறை சோதனைக்காக அந்த வழியாக வந்த மணல் லாரியை நிறுத்தும்படி சைகை காண்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து வேகமாக வந்து கொண்டிருந்த மணல் லாரி திடீரென பிரேக் போட்டு, ஓரமாக ஒதுங்கினர். அப்போது பின்னால் வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் மணல் லாரியின் பின்பகுதி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் டேவிட் எத்திராஜ், அருள்வேதம், கேத்தரின், சார்லஸ் , ஜஸிகா , ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்திரா, மெர்ஸி, கிங்ஸ்சி, பெனிடா, ஜான்சுந்தர், ஜெபி உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களில் ஜான்சுந்தர், கிங்ஸி ஆகிய இருவரும் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.இக்கோர விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
நன்றி :-


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard