வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பார்கள். அதற்கு உதவும் ந்ல்லதொரு கட்டுரை இது... வாசித்து மகிழ அன்போடு அழைக்கிறோம்..!!! (நீண்டநாட்களுக்குப் பிறகு நம்மை வாய்விட்டு சிரிக்க வைதத கட்டுரை. )
(பாஸ்டர் இம்மானுவேல் ஆபிரகாமுக்கும் அவரது விசுவாசி கென்னடிக்கும் சிறைச்சாலையில் வைத்து நடைபெற்ற கற்பனை உரையாடல்)
விசுவாசி: கவலைபடாதீங்க பாஸ்டர் நாம் எப்படியாவது சீக்கிரத்தில் வெளியே போயிடலாம்.
பாஸ்டர்: டேய் நீ தப்பு பண்ணிட்டு என்னையும் மாட்டி விட்டுவிட்டாயே?
விசுவாசி: நான் செய்தது தப்பு என்று இன்றைக்கு சொல்கிற நீங்கள், நான் கத்தை கத்தையாய் பணம் உங்களிடம் தரும்போது இவ்வளவு உனக்கு ஏது என்று ஒரு நாள் கூட கேட்கவில்லையே?
பாஸ்டர்: அப்படியானால் நீ திருடியது உண்மைதானா?
விசுவாசி: ஆமாம்.
பாஸ்டர்: அப்போ நீ சர்ச்சுக்கு வந்ததெல்லாம் பொய்யா? ஞானஸ்னானம் எடுத்தது பொய்யா? திரு விருந்து எடுத்தது பொய்யா?
விசுவாசி: எல்லாம் உண்மைதான். திருடினதும் உண்மைதான். திருட்டில பங்கு காணிக்கை என்கிற பேரில் உங்களிடம் கொடுத்ததும் உண்மைதான்.
பாஸ்டர்: இதை எல்லாம் செய்ய உனக்கு எப்படிடா உனக்கு மனசு வந்தது?
விசுவாசி: பாஸ்டர் அதுக்கு நீங்கதான் காரணம்.
பாஸ்டர்: என்னடா சொல்கிறாய்?
விசுவாசி: ஒரு நாள் வழிப்பறி கொள்ளை அடித்து போலீசுக்கு பயந்து ஓடும்போது ஆராதனை நேரத்தில் உங்க சர்ச்சுக்குள் நுழைந்தேன். அப்போது நீங்கள் இன்று புதிதாய் சர்ச்சுக்கு வந்தவர்கள் எழுந்து நிற்க்க சொன்னீர்கள் நானும் எழுந்து நின்றேன். போலீஸ் என்னை கண்டு பிடிக்கலை. காப்பாற்றின உங்களுக்கு நன்றி சொல்ல ஆராதனை முடிந்ததும் நின்றேன். நன்றி உணர்வோடு கொள்ளை அடித்ததில் கொஞ்ச பணம் உங்க கையில் திணித்தேன். அடுத்த வாரமும் ஆலயத்திற்கு வரச்சொன்னீர்கள்.
அடுத்த வாரம் சர்ச்சுக்கு வந்ததும் தம்பி உனக்கு அடுத்த வாரம் ஞானஸ்னானம் என்று சொன்னீர்கள். சரி என்று சொன்னேன். ஞானஸ்னானம் தந்தீர்கள். அடுத்த வாரம் சர்ச்சுக்கு வரும்போது உன்னுடைய கலர் டிரஸ்சை மாற்றிவிட்டு வெள்ளை ஆடை அணிந்து வரச்சொன்னீர்கள் நானும் அவ்விதம் வந்தேன்,
தம்பி அடுத்த வாரம் வரும்போது தாடியை எடுக்காதே, என்னைப்போல் தாடியும் மீசையும் வச்சுக்கோ அல்லது அந்த சாம் பிரதர் போல் தாடியையும் மீசையையும் மழித்து வா என்றீர்கள். நான் உங்களை போல் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.
இப்படிபட்ட பல மாற்றங்களை எனக்குள் வர நல்ல முயற்ச்சி எடுத்தீர்கள். நான் தீய செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறேன் என்பது உங்களுக்கு அரசல் புரசலாக தெரிந்தபோதும் நீங்கள் என்னை கண்டிக்கவில்லை.
எனது பணத்தின் மேல்தான் உமது மனம் சுற்றி சுற்றி வந்தது. எனது குணத்தின் மேல் இல்லை. ஒருவேளை நான் திருந்தினால் நீங்க வாங்கின நான்கு சக்கர வாகனத்திற்கான கடன் அடைக்க கஸ்டம் ஏற்படும்னு நினைசீங்களான்னு எனக்கு தெரியல..எனது வெளி மாற்றத்துக்கு அயராது பாடு பட்டீர்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை மாற்றத்துக்கு நீங்க எதுவும் செய்யல பாஸ்டர்.
(ஆம் அன்பர்களே இன்றைக்கு அனேக ஆலயங்களில் முக்கியமற்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். முக்கியமானதை போதிக்க தயங்குகிறார்கள் இந்த நிலை மாற நாம் ஜெபிப்போம். ஜெயகிறிஸ்து ஜெயம் தருவார்.)