/// நண்பர் Yauwana Janam அவர்களே இணையமே தனது முழு நேர பணி என்று நான் இருக்கவில்லை. அது ஒரு வேலை இரவும் பகலும் சிலருக்கு இருக்கலாம். எனது ஸ்டேடஸ் க்கு நான் பதில் சொல்வதற்க்காக எனது ஓய்வு நேரத்தையே பயன்படுத்துகிறேன். ///
அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. பண்டிகை காலத்தில் நம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இடையூறு செய்யும் காரியத்தை செய்துவிட்டு பிடிவாதம் பிடிப்பது யோக்கியமானதல்ல. நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினையை துணிச்சல் இருந்தல போஸ்டர் போட்டு ஒட்டுங்கள். அல்லது உங்கள் பகுதியில் இப்படி இருப்பதாக சொல்லலாம். அதை விட்டுவிட்டு பொத்தாம் பொதுவில் கருத்து கூறி எல்லாவற்றையும் கெடுப்பது சரியல்ல. இந்து முஸ்லீம் சகோதரர்கள் நம்மை உற்று கவ்னித்துக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பார் முன் இடறிவிழுவது போல் என்று இதை சொல்லுவார்கள். மற்றபடி நீங்கள் எப்போதுமே என் இதமான நண்பர் தான். நன்றி.
( விரைவில் உங்களை சந்திக்க விரும்பினேன், ஆனால் குமரி மாவட்டத்தின் நிலைமையை உங்கள் மூலம் அறிந்தபிறகு பயமாக இருக்கிறது.)
இது குமரிமாவட்டத்தின் நியலை மட்டும் இல்லை. அண்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உண்டு ///
எப்படியிருப்பினும் அது அவரவர் வசதி. தெருத் தெருவாக இப்படி பாடி பிச்சையெடுப்பது உண்மையானால் மொபைலில் ரெக்கார்டு பண்ணி போடுங்கள். அதுவே என் பாணி. மற்றபடி நான் இதை ஏற்கமுடியாது.
Jee Vanஅன்புக்ககுரிய jayakumar hosanna. தயவு செய்து உங்களுடைய கருத்தை நீக்கிவிடுங்கள் இப்படி எல்லாம் எதிர்காலத்தில் செய்யாதீர்கள் யாரையும் புண்படுத்தும் விதத்தில்
Jeyakumar Hosannaநான் குறை கூறும் நோக்கத்தில் இந்த பதிவை போடவில்லை. இவ்விதமான தரம்கெட்ட நிலையில் செயல்படும் கிறிஸ்தவத்தில் சில மாற்ரம் வராதா என்கிற எதிர்பார்ப்பேதான்.
Yauwana JanamJeyakumar Hosanna நான் குறை கூறும் நோக்கத்தில் இந்த பதிவை போடவில்லை. இவ்விதமான தரம்கெட்ட நிலையில் செயல்படும் கிறிஸ்தவத்தில் சில மாற்ரம் வராதா என்கிற எதிர்பார்ப்பேதான். ///
நான் குறைகூறுவதை தவறு என்று சொல்லவில்லையே ? நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் சபையின் அடிப்படை கட்டமைப்பை பாதிக்கக்கூடாது என்பதே. இபப்டியே ஆசீர்வாத தட்டு பற்றியும் சொல்லலாம். வ்ருடம் முழுவதும் திருச்சபைக்கு எதிராக கல்லெறிந்துவிட்டு அங்கே நமக்கு என்ன வேலை ? மனசாட்சி உறுத்தாதா ?
Jeyakumar Hosannaஆசீர்வாத தட்டா? அது என்ன? தவறு என்றால் தவறுதான். தவறான முன்மாதிரி நமது பிள்ளைகளுக்கு வேண்டாமே! நம்மால் இயன்றதை செய்வோம். அது என்ன ஆசீர்வாத தட்டு??
Yauwana JanamJeyakumar Hosanna ஆசீர்வாத தட்டா? அது என்ன? தவறு என்றால் தவறுதான். தவறான முன்மாதிரி நமது பிள்ளைகளுக்கு வேண்டாமே! நம்மால் இயன்றதை செய்வோம். அது என்ன ஆசீர்வாத தட்டு?? ///
திருச்சபையில் அறுப்பின் பண்டிகை என்ற பெயரில் நடக்கும் கூத்து ? இப்படிப்பட்ட காரியங்களை விவாதிக்கும் இடம் ஃபேஸ்புக் அல்ல. இது நமக்கு அழகல்ல. திருச்சபை என்பது ஒரு பெரிய விஷயம். அதற்கு எதிராக கையை உயர்த்துவது சந்ததிக்கே சாபமாகிவிடும். வேண்டாம்.
Yauwana Janamஆம், நாம் எந்த களத்திலிருந்து யாருக்கு எதிராக அம்பு எய்கிறோம் என்பது மிக முக்கியமானது. உதாரணத்துக்கு ஒரு பெரிய வீட்டுக்குள் அல்லது ஆலயத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்துகொண்டு நமக்கு அருமையானவர்களை கேடயமாக வைத்து அக்கிரமம் செய்தால் என்ன செய்வோம் ? உடனே ஃபயர் பண்ணுவோமா ? அதான். இது ரொம்ப சிக்கலான பிரச்சினை. என்னைப் போல நீஙக்ளும் சிந்தித்தால் மட்டுமே என் பிரச்சினை உங்களுக்கு புரியும். இப்போது கூட விஜய் போன்ற ஆட்களுக்கு இசைவாகவே நீங்களும் எழுதியிருக்கிறீர்கள். அப்படியானால் அவரை நீங்கள் எதிர்த்திருக்கவேண்டாமே ?
Jeyakumar Hosannaமன்னிக்கவும். நான் யாருக்கு இசைவாகவும் எழுதவில்லை அதே நேரத்தில் யாருக்கும் எதிராகவும் எழுத முற்படவில்லை. நான் புரிந்து கொள்ளும் காரியத்தை அலசி ஆராய்ந்த பின் பதிவிடுகிறேன். உங்களுக்கு நான் ஆதரவாய் வந்ததற்கு காரணம் இன்னொருவரை எதிர்க்க என்பது மிக மிக தவறு. தனி மனித தாக்குதல் வேண்டாம் என்பதாகும்.
Yauwana Janamநீங்கள் எழுதியது விஜய் ஆட்களுக்கு இசைவானதே. அவர்கள் கொள்கையே இது. இதன் காரண்மாகவே அவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டமே வேண்டாம் என்கிறார்கள். அதேபோல Parthasarathi Boaz எழுதிவருகிறார். ஓகே இனி உங்கள் கருத்தில் உறுதியாக நில்லுங்கள். உங்கள் கருத்துக்குரிய பதிலை நான் போடுகிறேன். தீர்மானத்தை பார்வையாளர்கள் கையில் விடுவோம். நீங்கள் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லியிருக்கிறேன். அதை முய்ற்சித்தால் நல்லது. உங்கள் மொபைலில் உங்கள் ஊர் அநியாயத்தை படம்பிடித்து போடுங்கள். நீங்கள் செல்லும் சபையில் இதனை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். உங்கள் முயற்சிகள் பலிக்க வாழ்த்துக்கள்.
Jeyakumar Hosannaநான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.(யோபு 6:24 )
எனது நட்பு வட்டத்திலும் நட்பு வட்டத்திற்கு வெளியேயும் இருந்து சொ(க)ற்களை வாரி இறைத்த அனைத்து நண்பர்களுக்கும் போதக பிதாக்களுக்கும் வாழ்த்துக்கள். "இதோ புறப்பட்டது பிச்சை கூட்டம்...." என்ற போஸ்டை உடனே நீக்கும்படியாக பலர் கருத்து தெரிவித்துள்ளீர்கள். ஏன் எதற்க்காக நீக்க வேண்டும் என்பதை பதித்திருந்தால் பிரயோஜனமாயிருக்கும்.
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்தை நான் விமர்சிக்கவில்லை. வேண்டாம் எனவும் கூறவில்லை. குடில் அமைப்பதை அருவருக்கவில்லை, அலட்சியப்படுத்தவும் இல்லை.
கேரல் போவதையும் நான் குறை கூற வில்லை. நாங்கள் குளுவாக எங்களது மாவட்டத்தின் அருகாமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் போய் பாடல் பாடி அங்குள்ள வேற்று மதத்தவர்க்கு இனிப்பு வழங்கி கிறிஸ்து பிறப்பை சந்தொஷமாக அறிவிப்பவர்கள் நாங்கள் என்பதையும் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன்.
அப்படியானால் ஏன் இந்த பதிவு? இந்த பதிவின் நோக்கம்தான் என்ன?
டிசம்பர் 1 ம் தியதி முதல் 23 ம் தியதிவரை கேரல் ரவுண்ட் என்கிற பெயரில் தெரு தெருவாய், வீடு வீடாய், கடை கடையாய் பெரும்பான்மையான சபை அல்லது குழுக்கள் பண வசூலிப்பு நடத்துவார்கள் என்பது எதிர்ப்பு குரல் கொடுத்த நண்பர்களுக்கு தெரியுமா? இங்கே எதிர்ப்பு குரல் கொடுத்த போதகர்களே நாங்கள் அப்படி செய்யவில்லை என்று சொல்லமுடியுமா?
போதகர் ஒருவர் தான் சபையில் பிரசங்கம் செய்யும் போது வேசிக்கள்ளனே மனந்திரும்பு என்றாராம். ஏனோ ஒரு சிலரால் அதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாமல் போதகரோடு சண்டை போட்டு நீர் இவ்விதம் பேசக்கூடாது எனக்கூறினார்களாம்... இங்கு நடக்கும் சம்பவமும் அப்படி அல்லவா இருக்கிறது. என்ன அந்த போதகர் ஒட்டு மொத்த ஜந்த்தைப்பார்த்து சொன்னாலும் அவர் சொன்ன வார்த்தை குறிப்பிட்ட தவறு செய்தவருக்கே பொருந்தும்.
மீண்டும் ஆணித்தரமாய் கூறுகிறேன் கிறிஸ்துவின் பெயரால் "இதோ புறப்பட்டது பிச்சை கூட்டம்.." இந்த கருத்தில் கடுகளவும் நான் பின் வலிக்க விரும்பவில்லை.
/// நண்பர் Yauwana Janam அவர்களே இணையமே தனது முழு நேர பணி என்று நான் இருக்கவில்லை. அது ஒரு வேலை இரவும் பகலும் சிலருக்கு இருக்கலாம். எனது ஸ்டேடஸ் க்கு நான் பதில் சொல்வதற்க்காக எனது ஓய்வு நேரத்தையே பயன்படுத்துகிறேன். ///
அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. பண்டிகை காலத்தில் நம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கு இடையூறு செய்யும் காரியத்தை செய்துவிட்டு பிடிவாதம் பிடிப்பது யோக்கியமானதல்ல. நீங்கள் உங்கள் பகுதியில் இருக்கும் பிரச்சினையை துணிச்சல் இருந்தல போஸ்டர் போட்டு ஒட்டுங்கள். அல்லது உங்கள் பகுதியில் இப்படி இருப்பதாக சொல்லலாம். அதை விட்டுவிட்டு பொத்தாம் பொதுவில் கருத்து கூறி எல்லாவற்றையும் கெடுப்பது சரியல்ல. இந்து முஸ்லீம் சகோதரர்கள் நம்மை உற்று கவ்னித்துக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பார் முன் இடறிவிழுவது போல் என்று இதை சொல்லுவார்கள். மற்றபடி நீங்கள் எப்போதுமே என் இதமான நண்பர் தான். நன்றி.
( விரைவில் உங்களை சந்திக்க விரும்பினேன், ஆனால் குமரி மாவட்டத்தின் நிலைமையை உங்கள் மூலம் அறிந்தபிறகு பயமாக இருக்கிறது.)
Yauwana JanamJeyakumar Hosanna நாளை 1 ம் தியதி எங்கள் வீட்டிற்கு வருவீர்களா? சாலை ஓரத்தில் எங்கள் வீடு இருப்பதால் என் போணோரின் நிலை உங்களுக்கு தெரியும். ///
என்ன பிரச்சினை ? காரல் செல்லுவோரின் தொல்லையா ? எப்படியிருந்தாலும் அதை பொதுவில் வைக்கக்கூடாது. இது நம் சமுதாயம். நம் சகோதரர்கள். நம் விழா. உங்கள் திருமணத்தில் உங்கள் உற்ற நண்பர் நன்றாக குடித்துவிட்டு உங்களை அவமானப்படுத்தியிருக்கலாம். ஆனாலும் அவர் உங்கள் நண்பர்தானே ? குறைகளையல்ல, நிறைகளையே உயர்த்தி கிறிஸ்துவை உயர்த்துவோம். இதுவே என் தீர்மானம். குறைகளையோ குறிப்பாக சுட்டிக்காட்டுவோம். யோசிங்க. புரியும்.
/// சகோ Jeyakumar Hosanna சொன்ன கருத்துக்கள் அவர் சார்ந்துள்ள KK Dist நிலவி வரும் உண்மை சம்பவங்களே. christmas வந்துவிட்டாலே அங்குள்ள பெயர் கிறிஸ்த்துவர்கள் செய்யும் லூட்டியும் அசாதாரனமானவைகளே. பிற மதஸ்தவர்களும் முகம் சுளிக்கும் அளவிற்கு கிறிஸ்த்துவின் நாமம் அவர் பிறந்த நாளிலே கன்வீனம் அடையும். ///
குமரி மாவட்டத்தாரை உழைப்பாளிகள் என்றும் சுயமரியாதை மிக்கவர்கள் என்றும் ரோஷக்காரர்கள் என்றும் நன்கு படித்த கல்வியாளர்கள் என்றுமே இதுவரை நினைத்திருந்தேன். அவர்கள் இத்தனை கேவலமாக சீஸன் பார்த்து பிச்சையெடுக்க வீடுவீடாக செல்லுவர்கள் என்று நீங்களே சாட்சி சொன்னது போலிருக்கிறது உங்கள் கருத்துக்கள். தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்க அவர் உடனே வருத்தம் தெரிவிக்கவேண்டும். அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. அவர் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமுதாயத்தையும் கேவலப்படுத்துவது போன்றதொரு கருத்தை பொது இடத்தில் பதிக்கக்கூடாது. யார் தவறு செய்தார்களோ அதை ஆதாரத்துடன் எடுத்து சொல்லட்டும்.
இதோ புறப்பட்டது பிச்சை கூட்டம்....யானையை கொண்டு பிச்சை எடுக்கும் கூட்டம் மதத்தின் போர்வையில் இன்றும் இருக்கிறது. நமது கிறிஸ்தவர்கள் ஒன்றும் இதற்க்கு சளைத்தவர்கள் இல்லை.பெந்தேகோஸ்தேயினரும் விதி விலக்கு இல்லை.. இதோ புறப்பட்டது பிச்சை கூட்டம்....
அண்மையில் இத்தனை மோசமாக யாரும் நம்முடைய மார்க்கத்தை தூஷித்ததில்லை. ஒரு புனிதமான விழாவை உயர்ந்த நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு நிகழ்ச்சியை இவ்வளவு கீழ்த்தரமாக எதிரிகள் கூட விமர்சித்ததில்லை. இதனை உடனே எல்லோரும் கண்டித்தும் இதுவரையிலும் மௌனம் சாதிக்கும் இவரைக் கண்டிக்காமல் இவருக்கு லைக் போட்டு உற்சாகப்படுத்தியவர்களைக் குறித்து மிகவும் வருந்துகிறோம்.முக்கியமாக இவர்களுடைய வீட்டுக்கு கேரல் வரும்போது என்ன எண்ணத்தோடு இவர்கள் நம்மை உபசரிப்பார்கள் என்பதும் எந்த எண்ணத்தோடு காணிக்கை தருவார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களில் பலர் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை எதிர்ப்போர் மற்றும் திரித்துவத்தை மறுத்து இயேசுவைத் தொழத்தக்க தெய்வமாக ஏற்காத வேதமாணாக்கர் இயக்கத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட (மேசியாவின்) எதிரிகளோடு சிஎஸ்ஐ சபையின் வட்டாரத்தில் சுவிசேஷகராகப் திருப்பணியாற்றும் திரு. ஜெயக்குமார் ஹோசன்னா இணைந்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கிறது.
அவர் எழுதியதை விரும்பி லைக் போட்டிருப்போரின் லிஸ்ட் கொடுக்கப்படுகிறது. தயவுசெய்து இவர்கள் வீட்டுக்கு கேரல் பாடுவோர் சென்றுவிடாமலிருக்க உதவியாக இதனைப் பதிக்கிறேன். இவர்கள் கேரல் பாட வருவோரை விரும்புகிறதில்லையாம். அவர்கள் பிச்சையெடுக்கவே உங்களிடம் வருகிறார்களாம். எச்சரிக்கை..!!!
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாளின் மாலையில் ஆட்ட நேரமுடிவில் களத்திலிருந்து செல்லும் வீரர்கள் இருவரில் ஒருவரை நைட் வாட்ச்மேன் என்பார்கள். அதேபோல இங்கு சுமார் 20 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கலவரமான பதிவைப் போட்டு கிறிஸ்தவ சமுதாயத்தை கேவலப்படுத்திய திரு. Jeyakumar Hosanna பல நண்பர்கள் இதனை எதிர்த்தபோதும் அவர்களையெல்லாம் மதிக்காமலும் இதுவரை தகுந்த விளக்கம் கொடுக்காமலும் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.
அப்படியானால் இந்த சமுதாயத்தில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தன் சமுதாயத்துக்கு விரோதமாக செய்துவிட்டு சென்று சுகமாக உறங்கமுடியும் என்பது இதிலிருந்து விளங்குகிறது. இதுபோன்ற இழிசெயலில் ஈடுபடுவோர் சாதாரண விசுவாசிகளல்ல, ஒரு வாரத்தில் குறைந்தது நூறு பேருக்காவது கடவுளுடைய அன்பை சொல்லும் திருப்பணியில் இருப்போர் என்பது இன்னும் ஆச்சரியமானதாகும்.
நானும் பிரச்சினைகளைக் குறித்து பேசுகிறேன். ஆனாலும் அதனை ஸ்பெஸிஃபிக் ஆக - குறிப்பாக, இன்னாரிடத்தில் இந்த பிரச்சினை, இது தவறு, இது இப்படியிருக்கவேண்டும் என்று வேத ஆதாரத்துடன் பதிவுசெய்கிறேன். மாத்திரமல்லாமல், அதனை இரவெல்லாம் விழித்திருந்து ஃபாலோ பண்ணி ஒவ்வொரு நண்பரின் கருத்தையும் உள்வாங்கிக்கொண்டு தகுந்த பதிலையும் தருகிறேன். அதுபோன்ற பொறுப்புணர்வில்லாதோர் எந்த பிரச்சினையையும் பேசாமல் அவரவர் பிழைப்பைப் பார்க்க போகலாமே ?!
ஆரம்பத்தில் நியாயமான காரணங்களுக்காக நான் போராடியபோது என்னைப் பகைத்து தூஷித்தோர் பிறிதொரு சூழலில் நெருங்கி வந்தபோது இன்முகத்துடன் அவர்களை ஏற்ற்க்கொண்டேன். அதன் பொருள் என்பது அவர்கள் செய்ததும் செய்துவருவதுமான எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொண்டேன் என்பதல்ல. அதனை இன்னும் மறந்துவிடவில்லை.ஆனாலும் மீண்டும் சர்ச்சைக்குரிய காரியங்களில் மீண்டும் நுழைந்து பிரிவினையுண்டாக்க வேண்டாம் எனும் நல்லெண்ணமே. ஆனால் புதுப்புது பிரச்சினைகளை மீண்டும் அவர்கள் எழுப்பினால் அதனை எதிர்க்கவும் தயங்கியதில்லை என்பதற்கு இந்த பதிவே உதாரணமாகும்.
குடில் என்ற பெயரில் பல லட்சம் செலவு செய்து குடி வைப்பார்கள் அந்த பணத்தில் எத்தனையோ ஏழை மக்களை வாழ வைக்கலாம், எத்தனையோ பேர் கடன்களினால் வாழ வழி இல்லமால் திணறுவார்கள் அவர்களுக்கு உதவி செய்யலாம். மின்சாராம் இல்லாத தமிழ்நாட்டில் மின்சாராம் ஆலய அலங்காரம் என்ற பெயரில் செலவு செய்வார்கள். இன்றைய வாழ்வில் நமக்கு என்ன தேவை??????????????????? ///
நீங்கள் வைத்திருக்கும் மொபைல் விலை என்ன ?
திருமண செலவு எவ்வளவு ?
வரதட்சணை எவ்வளவு வாங்கினீர்கள் ?
ஒரு நண்பரின் திருமணத்துக்கு என்ன பரிசு கொடுத்தீர்கள் ?
நீங்கள் கட்டப்போகும் வீட்டின் பட்ஜெட் எவ்வளவு ?
ஒரு குடில் அமைக்க பல இலட்சம் செலவாகுமாம். இதுபோன்ற செய்தியை இப்போது கேள்விப்படுகிறேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ யாருக்கு தெரியும்.. ?
Alfredreen Reen
/// தெருக்களில் பாடிக்கொண்டு வேறுமதத்தவருக்கு சுவிஷேசம் சொல்லும் கலாச்சாரம் இல்லை கிறிஷ்தவ வீடுகளுக்கு மட்டும் சென்று கமுக்கமாக வாழ்த்து சொல்லிவிட்டு வருமானத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுகிறார்கள் இது மெஜாரிட்டி குமரி கிறிஸ்தவ ஆலயங்கள் இப்படித்தான் ///
தெருக்களில் பாடிக்கொண்டு செல்லுவது மார்கழி பஜனை.... அதை ஏற்கனவே சில பண்டாரங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் எங்கள் ராஜா அத்தனை சாதாரணமானவர் அல்ல. அவர் நாகரீகமாக ஒவ்வொருவர் வீட்டுக்கும் விசேஷித்த விருந்தினராகவே செல்ல விரும்புகிறார். இப்படி தெருக்கள் தோறும் செல்லுவதும் கூட வருடம் முழுவதும் சாத்தியமல்ல. இன்றைக்கு இந்தியா சென்றுகொண்டிருக்கும் கடினமான சூழலில் இதுபோன்ற விழாக்காலங்களில் இயன்றமட்டும் அதிகமாகவே கர்த்தரை உயர்த்தவேண்டும். தெருக்களில் செல்லும் திறனுடையோர் தாராளமாக அதை செய்ய தடையேதும் இல்லை. அவ்வாறு தெருக்களில் தினமும் பாடிக்கொண்டு செல்லும் கிராம ஊழியங்களை விரைவில் பதிவேற்றுவேன் பாருங்கள்.
இது திருச்சபையின் கொண்டாட்ட காலமாகும். இக்காலத்தில் நம்முடைய மகிழ்ச்சியையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்தும் வண்ணமாக ஆங்காங்கு சிதறியிருக்கும் நாம் ஒன்றுகூடி நமக்கு அறிமுகமானோர் இல்லங்கள் தேடிச்சென்று கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியைப் பாடல் வழியாக அறிவித்து வருகிறோம். இதில் தன்னார்வமாக ஈடுபட்டிருப்போர் ஆசிரியப் பெருமக்கள் முதலாக கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் உண்டு. அவர்களில் யாருமே இதனை பிச்சையெடுப்பதாக நினைத்து செய்யவில்லை. ஆனாலும் வீட்டுக்கு யார் வந்தாலும் உபசரிக்கும் நம்முடைய கலாச்சாரத்தின்படி நம் வீடு தேடி வந்தோரை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நம்மால் இயன்ற வெகுமதிகளைக் கொடுத்தனுப்புகிறோம். இதற்கு பதிலாக வந்திருக்கும் குழுவினரும் காலண்டர் போன்ற ஏதேனும் ஒரு பரிசைக் கொடுத்துவிட்டே செல்லுகின்றனர். நம்மை சேர்த்துக்கொண்ட வீட்டினர் கடவுளை முன்னிட்டு கொடுத்த சொற்ப பணமாக இருந்தாலும் அவற்றையெல்லாம் சேர்த்து முதலாக பவனி செல்லும் வாகன செலவுக்கும் மற்றும் சிறுவர் விழா மற்றும் எளியோருக்கு இலவச ஆடைகள் மற்றும் உணவளிக்கவும் பயன்படுத்துகிறோம். இதனை மிகவும் கீழ்த்தரமான முறையில் வர்ணித்து ஃபேஸ்புக் தளத்தில் ஒரு பதிவு போடப்ப்பட்டிருக்கிறது. இது ஏற்கனவே திருச்சபை அமைப்புக்கு எதிராக நடைபெறும் பல்வேறு தூஷணங்களுக்கு துணைபோகும் செயலாகவே இருக்கிறது. இதனைக் கண்டிக்கும் வண்ணமாக அங்கே பதிவிட்டவற்றின் தொகுப்பை இங்கே பகிருகிறோம். ஒருவேளை அந்த பதிவு நீக்கப்பட்டாலும் கிறிஸ்தவர்கள் பெயரில் நம்மோடு இருக்கும் சிலருடைய உண்மையான நிலைமையை வெளிப்படுத்தும் ஆதாரமாக இது இங்கே இருக்கும்.
இனி...
இனி நாம் அங்கே பதித்த கருத்துக்கள்...
வீடுவீடாக சென்று கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுவோரை இப்படி வர்ணிக்கிறோம். ஆனால் வருடம் முழுவதும் வியர்வை சிந்தாமலே ஏஸி ஃப்ளோர் அரங்குகளில் அமர்ந்துகொண்டு பிச்சையெடுக்கும் மீடியா மிருகங்கள் பற்றி என்ன ?
வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது சிறியவர்கள் பேசுவது நல்ல மரபல்ல. இதன்படி திருமுழுக்கினர் யோவானும் கூட இவ்வாறு சொல்லுகிறார்...
யோவான் 3:30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
ஆனால் சில நண்பர்கள் தங்கள் கட்டுப்பாட்டை மீறி தேவகாரியங்களில் துணிகரமாக கருத்து கூறும்போது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.
நண்பர் ஜெய்ஹோ தானும் ஒரு சுவிசேஷகர் என்று அறிந்திருக்கிறோம். அவருடைய கூற்றின்படி இதுவரை அவர் தான் ஊழியத்துக்காக சென்ற இடங்களில்காணிக்கை பெறாதிருந்தாரா என்று சொல்லவேண்டும். அவ்வாறு அவர் காணிக்கை பெற்றிராவிட்டாலும் கூட மற்றவர்களைக் குறித்து அதிலும் சொந்த மார்க்கத்தாரைப் பற்றி இத்தனை தரக்குறைவாக விமர்சிப்பது சரியல்ல.
கேரல் எனப்படும் பாடல் பவனியாக வீடு வீடாக செல்லுவோர் அனைவருமே தன்னார்வமாக - இலவசமாக திருச்சபையின் ஐக்கியத்தை மையமாகக் கொண்டு அவ்வாறு செல்லுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கௌரவமான பணியிலிருக்கும் அதிகாரிகள் ஆவர். அவர்களில் ஆசிரியப் பணியிலிருப்போரும் சொந்த தொழில் செய்வோரும் கல்லூரி மாணவரும் உண்டு. இவர்கள் எல்லோரையும் இப்படி கேவலப்படுத்தும் பதிவு கொஞ்சம் அதிர்ச்சி ரகம் தான். மாத்திரமல்லாமல் மெய்யாகவே வருடம் முழுவதும் அறியப்படாதோர் மத்தியில் தேடுவோர் களத்தில் உழைக்கும் உண்மையான மிஷினரி ஸ்தாபனத்தாரும் கிறிஸ்மஸ் காலங்களில் வீடுகளை நோக்கி வருவார்கள். மற்ற மீடியா நாயகர்களோடு ஒப்பிடுகையில் இவர்கள் முயற்சி சிறிதளவே ஆகும். இதில் உள்நோக்கமோ சூழ்ச்சிகளோ ஏதுமில்லை. இப்படி எழுதிய இவர் வீட்டுக்கு பாடல் குழுவினர் செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். அவர் வீட்டில் பச்சை தண்ணீ கூட யாரும் குடிக்கவேண்டாம்... இந்த அவதூறு பதிவில் துணிச்சலுடன் தன் கருத்துக்களை வரைந்துள்ள தம்பி Jpm Jerry அவர்களைப் பாராட்டுகிறேன். இதோ அவருடைய கருத்து....
சில தனிநபர்கள் மீதான கசப்பை மொத்த சமுதாயத்தின் மீதான அவதூறாக வெளிப்படுத்துவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நானும் எனது சிறுவயதில் இப்படி விடிய விடிய கேரல் பாடிவிட்டு காலையில் பள்ளிக்கு சென்றிருக்கிறேன். அது ஒரு இனிமையான அனுபவமாகும். அது நிச்சயமாக கலெக்ஷனுக்காக அல்ல. அவ்வாறே இருந்தாலும் அது கிறிஸ்மஸ் கால சிறுவர் விழா போன்ற செலவுகளுக்கே ஆகும். இதை நண்பர் உடனே உணர்ந்து வருத்தம் தெரிவிக்கவேண்டும். நன்றி.
-- Edited by Yauwana Janam on Friday 29th of November 2013 10:24:19 PM