இதனிடையே Tamil Christianமற்றும் எக்காள சத்தம் ஆகிய அனாமதேய கணக்குகளிலிருந்து யாரோ எவரோ நம்மை சீண்டிக்கொண்டிருக்கீறார்கள். அவர்களில் Tamil Christianஎன்பவர் தனிமடலில் நம்மை தூஷித்தவை இங்கே பதிக்கப்பட்டுஅவருக்கு தனி மரியாதை செய்யப்படும்.
நமது வதனநூல் நண்பர் திரு. Parthasarathi Boaz அவர்களின் அற்புதமான சாட்சியை வாசிக்க நேரிட்டது. அது மனதை தொடுவதாகவும் பல இளைஞர்களுக்கு சவாலாகவும் இருந்தது. ஆனாலும் நண்பருடன் ஒரு குறிப்பிட்ட காரியத்தில் சிறு உரசல் ஏற்பட்டதால் அதனை சரிசெய்துகொள்ளவேண்டி ஒரு ஐயத்தை எழுப்பியிருந்தேன்.ஆனால் விவாதத்தை விரும்பாத நண்பர் அதை தனிமடலில் கேட்கலாம் என்றார். நாம் ஏற்கனவே தனிமடலில் கேட்ட கேள்விகளுக்கு அவர் இதுவரை பதில் சொல்லவில்லை என்பதை அவருக்கு நினைவுபடுத்தியிருக்கிறேன். ஆனாலும் மற்ற நண்பர்கள் இதனை விவாதமாக்கவே முயற்சித்த நிலையில் அவருடைய பதிவின் நோக்கம் திசைமாற காரணமாக இருந்த அனைத்து கருத்துக்களையும் அவர் நீக்கிவிட்டார். ஆனாலும் அதன் முக்கிய கருத்துக்களை இங்கே சேமிக்கிறேன். இப்படிதான் பல நண்பர்களுடன் சிறுசிறு காரியங்களில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நாம் எத்தனை நிதானமாக அணுகினாலும் அவர்கள் ஒரு கட்டத்தில் நம்மை ப்ளாக் செய்து விலகிவிட்டு தூஷிப்போர் வரிசைக்கு சென்றுவிடுகிறார்கள். நாம் என்ன செய்யமுடியும் ?!
இனி...
From Parthasarathi to Parthasarathi Boaz.................
2008 - இப்படியான ஒரு நவம்பர் மாதத்தில் தானே என் மனைவியின் மூலமாய் நான் இயேசு என்றொருவரைத் தெரிந்துகொண்டேன்..இயேசுவும் ஒரு கடவுள் என்று ஏற்றுக்கொண்டேன்.
2009 – என்னுடைய வாழ்க்கையில் ஒரு அற்புதமான வியக்கத்தக்க காரியம் நடந்ததின் மூலம்..இயேசு உண்மையிலேயே ஒரு சக்தியுள்ளவர் என்று புரிந்துகொண்டேன்.
2010 – முதன்முதலாக வேதாகமத்தினை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். மா பாவியான என்னையும் தேவன் நேசிப்பதை அறிந்துகொண்டேன்.....நானும் என் மனைவியும் ஒருமனதோடு எங்களுக்குப் பிறந்த குழந்தையை கர்த்தருக்கென்றும் அவரது வேலைக்கென்றும் ஒப்புக்கொடுத்தோம்....
2011 – அதிகமான மனபாரத்துடனும், ஆர்வத்துடனும் வேதாகமத்தை படிக்கத் தொடங்கினேன்.....பல நாட்கள்.....அதிகாலை நேரத்தில் தூக்கமில்லாமல் புரண்டிருக்கின்றேன்.
இன்னும் அதிகமான ஈடுபாடும் ஆர்வத்துடனும் சபை காரிaயங்களில் பங்குகொண்டு என்னால் இயன்ற வரை கர்த்தருக்காக் ஓடினேன்.... ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ள சில புத்தகங்களை வாங்கினேன்.... பின்னர் கர்த்தரே எனக்கு புரிய வைக்கட்டும் என்கிற வைராக்கியம் கொண்டு அப்புத்தகங்களை சிறிது நாட்களிலேயே புறந்தள்ளினேன்...
வேதத்தின் சத்தியங்களைக் குறித்து என் தேவனே எனக்கு போதகராய் ஆலோசனைக் கர்த்தராய் விளக்கிகொடுத்தார்....நான் பிறந்த பயன்? என்ன செய்ய வேண்டும் ? எப்படி செய்ய வேண்டும்? எதை நாட வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்?......இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.....பல கேள்விகளுக்கு தேவனே வேதத்தின் மூலம் கற்று அறிந்துகொள்ளும்படி உதவி செய்தார்.
2012 – தேவன் வேதாகம சத்தியங்களை இன்னும் ஆழமாய் அறிய செய்தார்....அறிந்த சத்தியங்களை பிறரிடத்தில் பகிர்ந்துகொள்ளும்படியாகவும்.... என் மனைவிக்கும் என் மகளுக்கும் வேதத்தை சொல்லிக் கொடுக்கவும் இரக்கம் பாராட்டினார்....
2013 – இன்று எனது நிலை.......என் மனைவி இப்படியாக சொல்லுவாள்....’ ஒரு நேரமும் வாய் சும்மாவே இருக்காது....எப்பப்பாரு ஆண்டவர், தேவன், வசனம், ஊழியம்னு.....என மிகுந்த சந்தோஷம் பொங்க சொல்லுவாள்”......
மெய்யான பராபரனைக் கண்டு கொண்டேன்....
இந்த நிலைக்கு என்னை வழிநடத்திய தேவனுக்கு ஸ்தோத்திரம்.
Mano Manogaranrநீதிமொழிகள் 11:14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.24:6.ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். அப்.பவுல்(19. பின்பு அவன் போஜனம்பண்ணி பெலப்பட்டான். (சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து),
20. தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.மத்தேயு 18:19 அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 18:20 ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.மாற்கு 6:11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை (இரண்டு இரண்டு) பேராக அனுப்பினார்.)
காலத்தைப் பார்த்தால் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. எழுப்புதல் குறித்து பேசி பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு விரோதமான கருத்துக்களைக் கொண்டிருப்போர் ஏதொவொரு வகையில் துருபதேசவாதிகளுடன் தொடர்புடையவர்களாகவே இருக்கிறார்கள். அண்மையில் என்னோடு விவாதித்த பல நண்பர்கள் ”ஒன்லி ஜீசஸ்” இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களோடு மோதல் வேண்டாமென்று இதுவரை விவாதத்தை இதமாக மறுத்து வந்தேன்.மறுபுறம் ”யெகோவா சாட்சிகள்” பல்வேறு போர்வையில் கலந்திருக்கிறார்கள். இவ்விரு அமைப்பைத் தவிர கிறிஸ்மஸ் போன்ற பொதுவான திருச்சபையின் பண்டிகைகளை எதிர்க்கும் சிறுசிறு அமைப்புகளும் உண்டு. அவற்றில் சில, டிபிஎம் எனப்படும் பெந்தெகொஸ்தே இயக்கத்தினர் / கிறிஸ்துவின் சபையார் / ஏழாம் நாள்காரர்கள் / மார்மன்ஸ் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
//கிறிஸ்மஸ் போன்ற பொதுவான திருச்சபையின் பண்டிகைகளை எதிர்க்கும் சிறுசிறு அமைப்புகளும் உண்டு// இவைகள் திருச்சபையின் பண்டிகைகளா? புதிய விவாதத்துக்கு அடிபோடுகிறீர்கள்.
Mr.Yauwana janam bro..why cant u come on a private chat...i can clear all your doubts from top to bottom...moreover i dont want to continue a chat .... in this post...wht do u say
வேத மாணாக்கரும் அவ்வாறே சொந்தமாக பைபிள் படிப்பதாக சொல்லுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் ஒரு முன்னோடி இருக்கிறார். ஓகே, சங்கடப்படவேண்டாம். உங்கள் சாட்சி அநேகருக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக இருப்பினும் சில விகப்பர்மான கொள்கைகளே நெருடுகிறது.
/// Mr.Yauwana janam bro..why cant u come on a private chat...i can clear all your doubts from top to bottom...moreover i dont want to continue a chat .... in this post...wht do u say ///
வருந்துகிறேன், மிகவும் வருந்துகிறேன். நான் தானே உங்களுக்காக நெடுநாளாகக் காத்திருக்கிறேன்.
ஐந்து வருடத்தில் உலகத்தார் மாஸ்டர்ஸ் முடிப்பார்கள்; ஆனால் இங்கே நீங்களோ, விண்ணுலக காரியங்களில் முயன்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். ஆனாலும் செல்லும் தூரம் வெகுதூரமாகும்.
சாட் வேண்டாம் என்றீர்களே ? தனி மடலில் கேட்டவற்றுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை. என் விசுவாசத்துக்கு உரமாக இருந்த ஒரு முன்னோடியை நான் காட்ட முடியாவில்லையெனில் அது நிச்சயம் ஆபத்து தான்.
Anbudan Alphonse @youwana janam... Apostle Paul said he got God's word from Jesus alone thro prayer only.. Then y not Boaz can get without help of teacher? ///
அருமையான கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். ஆனால் இதில் விவாதம் செய்வதை எனது நண்பர் விரும்பவில்லையே ?! ஆனாலும் தேவைப்பட்டால் இதுகுறித்து அவருடைய அனுமதியுடன் எழுதுவேன்.
நண்பரின் இந்த அருமையான சாட்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எழுந்த ஐயமும் அதற்கான காரணமும் ஒருபுறமிருக்க ஒரு புதிய ஆத்துமாவுக்கு வழிகாட்ட ஒரு முன்னோடி ஒரு வழிகாட்டி ஒரு குறிப்பிட்ட அமைப்பு இல்லாமல், ஒருவர் பைபிளை மாத்திரமே வாசித்து தன்னை உருவாக்கிக்கொள்ளமுடியுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. முடியும் என்பது போலவே நண்பர்களின் கருத்து அமைந்திருந்தது. இது ஒரு நண்பரைக் காப்பாற்றவோ தாக்கவோ சிலர் செய்யும் முயற்சியாக இல்லாமல் சரியான சத்தியத்தை ஓங்கி சொல்லும் முயற்சியாக இருந்தால் நல்லது. எல்லாவற்றிலும் விதண்டாவாதம் செய்வதில் நமக்கு நம்பிக்கையில்லை.
yauwana janam bro, i will give one example.. ...GOD said " First you teach to your wife,child ....make your family strengthen & to grow in christ..be an example to others...then you step in to further
No. நான் கேட்டது அதுவல்ல. வேத சத்தியங்களின் ஆழங்களை நீங்கள் சுய ஞானத்தினால் அறியவில்லை அல்லவா ? அதற்கு உதவியவர் யார் ? எந்த தலைவர் அல்லது உபதேசம் உங்களை பாதித்தது. அதை சொல்லுங்கள்.