Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யுத்தங்கள் தேவ சித்தமா ?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யுத்தங்கள் தேவ சித்தமா ?
Permalink  
 


Arputharaj Samuel

ரோம கத்தோலிக்க சபை முஸ்லீம்களின் பிடியில் இருந்த கிறிஸ்தவப் பகுதிகளை மீட்பதற்காக சிலுவைப் போர்களுக்கு அனுப்பின வீரர்களை, முஸ்லீம்கள் மத்தியில் மிஷனெரிகளாக அனுப்பி இருந்தால் வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.

20ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ தேசங்கள் அமைதியை நிலைநாட்ட அனுப்பின தங்கள் இராணுவத்திற்குப் பதிலாக, அரபு மற்றும் முஸ்லீம் நாடுகளிலும் ஊழியம் செய்ய மிஷனெரிகளை அனுப்பி இருந்தால், இப்போது நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும்.

- மேற்காணும் கருத்தை நமது நண்பர் சற்று முன் பதித்திருக்கிறார். இதை வாசித்ததும் தோன்றிய எண்ணங்களை இங்கே பதித்து வைக்கிறேன். முதலாவது சிலுவைப் போர்களைக் குறித்து நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நண்பர் அவற்றைக் குறித்து படித்துக்கொண்டிருக்கும் பாதிப்பில் இதை எழுதியிருக்கலாம். அவர் இதுபோல மேலோட்டமாக எழுதிவைக்காமல் தான் படித்த அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டால் இதேபோன்று படிக்கும் வாய்ப்பில்லாத பலருக்கும் உபயோகமாக இருக்கும் என்பது நம்முடைய தாழ்மையான அபிப்ராயமாகும்.

அடுத்து வரலாற்றில் நடந்த சிலுவைப் போர்கள் குறித்தும் நம்முடைய காலத்தில் நடந்துவரும் போர்கள் குறித்தும் யோசித்தால் இரண்டுமே அரசியல் எனலாம். சிலுவைப் போர்களுக்கு முன்னரே அந்த பகுதிகள் சுவிசேஷ மயமாகியிருந்ததையும் திருச்சபையின் நிர்விசாரமே எதிரியின் படையெடுப்புக்குக் காரணமாக இருந்ததையும் நாம் மறந்திடலாகாது. சுவிசேஷத்தையே கேள்விப்படாதிருந்தோரிடம் செல்லுவோரே மிஷினரிகள். அதைக் கேட்டும் மனந்திரும்பாதோரிடம் செல்லுவோர் தீர்க்கதரிசிகள். இறுதியில் அழிக்கும் சத்துரு எழும்புவான். இதுவே வேதத்தின் பாரம்பரியமாகும். 

நண்பர் குறிப்பிட்டுள்ள இரண்டு காலத்திலுமே மிஷினரிகள் சென்று கொண்டே இருக்கிறார்கள். உதாரணமாக வியட்நாம் போரினால் மனதால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு ராணுவ வீரர் நவீன கால சீனாவின் மிஷினரியாக அங்கு சென்று பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டிருக்கிறார். அவருடைய பெயர் டென்னிஸ் பால்கம். அவரைப் பற்றிய புத்தகத்தை அண்மையில் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். இப்படி எல்லா காலங்களிலும் மனிதனின் அரசியலும் தேவப் பணியும் இரண்டு வெவ்வேறு பாதையிலேயே சென்றிருக்கிறது. அப்படியில்லாதிருந்தால் வெள்ளைக்காரன் இந்தியரை மதம் மாற்றவே இங்கு புகுந்தான் என்பது உண்மையாகியிருக்கும். அவன் வியாபாரம் செய்து நம்மைக் கொள்ளையடிக்கவே இங்கு வந்தான், அவனோடு அல்லது அவனைப் பின்பற்றி அவன் காலத்தில் வந்த கர்த்தருடைய பிள்ளைகளோ இங்கு ஊழியம் செய்திருக்கிறார்கள். இப்படியே வரலாறு முழுவதும் நடந்திருக்கிறது. இது எனது பொதுவான பார்வையாகும்.

ஆனாலும் கர்த்தர் நீதியுள்ளவர். எந்தவொரு யுத்தமும் ஆக்கிரமிப்பும் அவருடைய சித்தமின்றி நடைபெறவில்லை என்பதையே நான் நம்புகிறேன். இனிவரும் காலங்களிலும் சரி அவர் வெளிப்படும்போது கடைசியாக ந்டைபெறப்போவதும் சரி யுத்தமே. நாம் ஆவிக்குரியவர்கள் என்றாலும் கர்த்தர் தம்முடைய இறுதிப் பணியை ஒரு மாபெரும் யுத்தத்தின் மூலமே நிறைவேற்றப்போகிறார் என்பதை நாம் அறிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு யுத்தமும் ஒவ்வொரு கலாச்சார மாற்றமும் ஒவ்வொரு அரசியல் மாற்றமும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகவே இருக்கிறது. இது கிருபையின் காலத்தின் பிள்ளைகளுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கலாம். ஆனாலும் அவருடைய கோபம் பற்றியெரியும் நாட்கள் விரைவில் வருகிறது.

  • சங்கீதம் 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

  • சகரியா 10:3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.


-- Edited by chillsam on Thursday 21st of November 2013 06:08:34 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard