~|| போகிறேன்,என் வழியில் ||~
ஜாமக்காரர்களின் தூக்கத்தைக் கெடுத்தேனோ துக்கத்தைத் தந்தேனோ
வேதமாணாக்கரின் படிப்புக்கு இடையூறாக இருந்தேனோ பிழைப்பைக் கெடுத்தேனோ
இடைத்தரகர்களின் இடையில் புகுந்தேனோ வியாபாரம் படுத்ததோ
இடையர் கிடையில் -இடையில் திருடிய ஆடுகள் சிதறிபோனதோ பொழுதுபோனதோ
வகைதொகையில்லாமல் அணிசேர்கிறாய் நீர்த்துப்போகிறாய்
நீர்த்துப்போன எதுவுமே ஜீவனைத் தராது விழலுக்கு இரைத்த நீராகும் எதிரி நானல்ல, அம்பு நீயல்ல எய்தவன் இருக்க அம்பை நோகும் மனிதன் நானல்ல. ஆண்டாண்டு காலம் அழுதுபுரண்ட மாண்டோர் வருவர் ஆண்டவரின் நாளும் விரைவில் மலரும் பொழுது புலரும்அன்று நீ அறிவாய் அரியணைமுன் - என்னை அறிந்தவர் யாரென்று நீ என் முன்னால் நிற்க நான் அவரோடு நிற்கும் வேதனை வேண்டாமேநீ என்னோடு நிற்க நாம் அவரோடு நிற்கவே உன்னோடு போராடினேன். இரட்சகர் அவரென்று அறிந்த நீ இரட்சிப்பை இழந்தாயோ சிட்சிப்பை மறந்தாயோஒருபோதும் அறிந்திடாய் உன்னோடிருந்தோர் - அன்று நரக பாதாளங்களில். மனிதரை நரகத்தில் வாட்ட இறைவன் தன் இன்னுயிரை தரவில்லை என்பது மெய்யே.ஆனால் மனிதருக்கு ஆன்மா இல்லையென்று சொல்லும் நீ மிருகம் தானே ? போதும் இந்த விளையாட்டு போகிறேன், என் வழியில் வழியனுப்ப வந்துவிடு.
(இது வதனநூலில் படைக்கப்பட்டது.)