கர்த்தர் என் மேய்ப்பர் அல்லோ நான் தாழ்ச்சியடையேனே அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து அமர் நீர் அருளுகின்றார் அவர் என் ஆத்துமாவைத் தேற்றி நீதியின் பாதைகளில் என்னை சுகத்தோடும் நல்ல பெலத்தோடும் அவர் நாமத்தினிமித்தம் நடத்துகிறார்
மரணத்தின் பள்ளத்தாக்கிலே நான் நடந்துசென்றாலும் தீங்கு பொல்லாப்புக்கு சற்றும் அஞ்சேனே தேவன் என்னோடிருப்பார் உமது கோலும் தடியும் என்னை தேற்றுமே தரணியில் நித்தம் பகைவருக்கெதிரே பந்தி ஏற்படுத்தி தலையை தைலம் கொண்டென்னை அபிஷேகிப்பார்
என் பாத்ரம் வழிந்தோடுதே என் ஆயுள் முழுவதுமே நன்மையும் கிருபையும் என்னையே தொடரும் நலமுடன் வாழ்ந்திடுவேன் கர்த்தரின் வீட்டினில் சிறப்புடனே நித்திய ஜீவனை நாடி பக்தியாய் துதிப்பேன் நித்தமும் பாடுவேன் வெகுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்.