என்னைவிட வயதில் மூத்தவரான இவர் தன் உள்ளத்தில் உறைந்திருக்கும் இனவெறியையும் தாழ்வு மனப்பான்மையையும் இவ்வாறு வெளிப்படுத்துவதாகவே நினைக்கிறேன். உதாரணமாக இவரையோ அல்லது இப்படி பக்கமாக என்னைக் குறிவைத்து தாக்குதல்நடத்தும் கள்ளப் போதகனாகிய இம்மானுவேல் ஆபிரகாமையோநான் கவிழ்க்கவோ அவர்கள் பிழைப்புக்கு பங்கமுண்டாககவோ முயற்சிக்கவில்லை. மாறாக அவர்களே என் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். ஆகையால் இவர்கள் என்னை இனத்தின் அடிப்படையிலேயே கொடுமைப்படுத்துவதாக இவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
நானோ இவர்களை சத்தியத்தின் அடிப்படையிலும் உபதேசத்தின் ஆதாரத்திலுமே எதிர்க்கிறேன். என்னுடைய எதிர்ப்பை இவர்களால் புறக்கணிக்கவும் முடியாமல் என்னை அகற்றவும் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நான் இவர்களைப் போல மறைந்திருந்து கல்லெறியவில்லை. நேருக்கு நேர் சென்று நின்று சந்தித்திருக்கிறேன். மேலும் இவர்களைக் குறித்து தமிழ் கிறிஸ்தவ உலகின் இணையத்தில் பகிரங்கப்படுத்தி அடையாளங் காட்டியிருக்கிறேன். இவர்களை நேருக்கு நேர் சந்தித்து நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் ஏறக்குறைய என்னை நெருக்கி நெட்டி வெளியே தள்ளினார்கள். அவை குறித்த ஆதாரங்களும் கேள்விகளும் ஏற்கனவே இங்கு இருக்கிறது. அவற்றுக்கு பதில் சொல்லாமல் என்னை ஒரு ஆள் விட்டு மிரட்டி அடக்கப்பார்த்தவரே இந்த பெரிய மனிதர். (?!) நான் ஏன் இவரை எதிர்க்கிறேன் ? இவர் மீது எனக்கு என்ன பகை ? நான் இவருக்கு சமமா ? இவரை அடக்கிவிட்டு இவருடைய புகழையும் இவருடைய இடத்தையும் நான் பிடிக்கப்போகிறேனா ? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
அவர்கள் என்னைக் கண்டு அஞ்சி நடுங்கவும் கூடாநட்பு கொள்ளவும் ஒரே காரணம் இவர்கள் இயேசுவின் தெய்வத்தன்மையை மறுப்பவர்கள் என்பதே. யெகோவா சாட்சி கூட்டத்தாரின் முன்னோடிகளான வேதமாணாக்கர் எனும் இயக்கத்தைச் சேர்ந்த இவர்கள் ஏற்கனவே திருச்சபைகளோடு ஒத்துப்போகாமல் திருச்சபை அமைப்பையும் அதன் உபதேசங்களையும் குறித்து பிரிவினையான எண்ணங்களை சமுதாயத்தில் விதைத்து குழப்பம் ஏற்படுத்துகிறவர்கள். இவர்களுடைய இலக்கு கிறிஸ்தவர்களே. அவ்வாறு திருச்சபைக்கும் இவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் பாலமாக செயல்படும் தூதர்களில் ஒருசிலரை மாத்திரமே நான் அடையாளங் காட்டியிருக்கிறேன். அவர்களில் பிரதானமான்வர்களே, வியாசர் லாரன்ஸ்மற்றும் ஜாண்சன் கென்னடி ஆகியோர். இவர்கள் புரண்டு புரண்டு விழுந்தாலும் புரட்டி புரட்டி பேசினாலும் இவர்களுக்கு வேதமாணாக்கர் இயக்கத்துடனிருக்கும் தொடர்பை மறுக்கவே முடியாது. இவர்கள் திருச்சபைக்குள் நல்லெண்ணத் தூதர்களாக நுழைந்திருக்கும் திருடர்கள் ஆவர். இவர்களுடைய நோக்கம் தங்கள் இயக்கத்தை வலுப்படுத்துவதே.
அதன் காரணமாகவே வியாசர் லாரன்ஸ் செல்லும் இடங்களிலெல்லாம் ஆவியானவரைக் குறித்து பரியாசம் பண்ணி பேசிவருகிறார். தந்தை பெர்க்மான்ஸ் போன்றவர்களின் பாடல்களை இவர் கிண்டலடித்ததை எல்லோரும் அறிந்திருக்கிறோம். இவர் ஜனரஞ்சகமாக பேசி மயக்குவதால் இவருடைய உப்தேசப் பின்னணியை யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இவர்களுடைய அனைத்துதொடர்புகளுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. இப்படி நான் இவர்களைக் களத்திலேயே சென்று ச்ந்தித்து பிரச்சினை பண்ணியதால் என் மீது எரிச்சல் கொண்டார்கள்.
நான் ஏன் இவர்களை இப்படி துன்புறுத்தவேண்டும் ? அதனால் நான் ஏன் துன்பப்படவேண்டும் ? காரணம் இவர்களுடைய அணுகுமுறை நேரடியாக அல்லாமல் சூழ்ச்சி நிறைந்ததாகவும் தந்திரமானதாகவும் இருப்பதே. இவர்களோடு முதலில் பழுகுவோருக்கு இதெல்லாம் தெரியாது. கடினமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுவோராகவும் பண ஆசையே இல்லாதவர்கள் போலவும் எல்லோரும் இரட்சிப்படைய ஒடுப்வர்கள் போலவும் உண்மையானவர்கள் போலவும் அன்பு நிறைந்தவர்கள் போலவும் நடிப்பதால் எளிதில் இவர்கள் மக்களைக் கவர்ந்துவிடுவார்கள். திருச்சபைகளில் நிறைந்திருக்கும் பிரச்சினைகளால் சோர்ந்துபோயிருப்பவர்களை இப்படி இவர்கள் திசைதிருப்பி இழுத்துச்செல்லுகிறார்கள். முடிவிலோ இயேசு சிருஷ்டிகரல்ல, சிருஷ்டிக்கப்பட்டவரே பிதாவையே நாம் ஆராதிக்கவேண்டும் என்று சொல்லி ஆவியானவரையும் மறுதலித்து திரித்துவம் ஸ்தாபனங்களின் கள்ள உபதேசம் என்ற பெரிய குண்டை போடுவார்கள். இதற்குள் சபையின் ஐக்கியத்தைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்ட அப்பாவி திரும்பிச்செல்லும் வாய்ப்பையே இழந்து இரட்சிப்பின் அனுபவத்தையெல்லாம் தொலைத்துவிட்டு சிறைபிடிக்கப்படுகிறான்.
இதைத்தவிர இவருக்கும் நமக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பகையோ விரோதமோ இல்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஒருவரை டேஃபேம் பண்ணி காரெக்டர் அஸாசினேஷன் எனும் கொடுமையை அரங்கேற்றிக் கொண்டிருப்பவன் இம்மானுவேல் ஆபிரகாம் எனும் கிரிமினல். அவனைக் கண்டிக்க தைரியமில்லாத வியாசர் லாரன்ஸ் போன்றவர்கள் இவரே என்னை தெள்ளுப்பூச்சி என்று வர்ணிக்கிறாரே அப்படிப்பட்டவன் எழும்பி இவரை அழித்துவிடமுடியும் என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது. நானும் கேள்விபட்டிருக்கிறேன், ஒருவர் ஒரு நியாயத்தைக் கேட்டால் அவர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக பொய் கேஸ் கொடுப்பார்களாம். இதற்காக வன்கொடுமை தடைசட்டம் என்று ஒரு தனி சட்டப் பிரிவே இருக்கிறது. இப்படியே அடங்காப்பிடாரியான ஒரு பெண் நல்ல கணவனைக் கூட பழிவாங்க வரதட்சணை கேஸ்கொடுப்பார்களாம். ஆனால் நியாயத்துக்காகவும் நேர்மைக்காகவும் சத்தியத்துக்காகவும் போராடும் நான் இனவெறிய்ன்என்றும் சாதி வெறியன் என்று சித்தரித்து தன்னைத் தானே கேவலப்படுத்திக்கொள்ளுகிறார் இந்த பெரிய மனிதன். ஆனாலும் நான் உபதேசரீதியில் கேட்ட ஒரு கேள்விக்கும் நியாயமான பதிலை இவர் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கிறிஸ்தவ உலகில், சினிமா மற்றும் அரசியல் போலவே சாதிரீதியிலான ஒடுக்குமுறைகள் நடக்கிறது என்பதை பெரியவர் வியாசர் லாரன்ஸ் அவர்க்ள் வாய்மொழியிலிருந்து எளிதாக அறிகிறேன். ஆவியானவரையே பரியாசம் செய்யும் இவரிடம் என்ன ஆவி இருக்கிறதோ... தெரியவில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)