புலனாய்வு இதழியல் (Investigative journalism) என்பது பத்திரிகைத் துறையில் மிகவும் விசேஷித்ததும் ஆபத்தானதுமான விஷயமாகும். அதன் நோக்கம் உண்மையை ஆராய்வது என்று இருந்தாலும் அதில் 99% பொய்களே ஆட்சிசெய்யும். 1% உண்மையிருப்பினும் அதினிமித்தம் பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கை முழுவதும் முடங்கிப்போகிறது. இதுபோன்றதொரு களத்தையே தன்னை பெந்தெகொஸ்தேகாரன் என்று சொல்லிக்கொள்ளும் கள்ளப் போதகன் இம்மானுவேல் ஆபிரகாமும் தேர்ந்தெடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறார். இதனால் இவர் கிறிஸ்தவ (இணைய) சமுதாயத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளும் இவரால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை மிகுந்த அனுபவங்களும் மிக அதிகம். இவருடைய பாதிப்பிலேயே திரு.விஜய் மற்றும் அவருடைய நண்பர்களும்செயல்படத் துவங்கினர். இதுகுறித்த நடுநிலையான - விரிவான அறிக்கை அல்லது தொடரை எனது மதிப்பிற்குரிய நண்பர்களுக்காக நான் விரைவில் வழங்க இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் என்ன சொல்லுகிறேன் என்பது இப்போதே புரிந்திருக்கும். இது நமக்கு தகுதியல்ல என்பதே ஓங்கி சொல்லவேண்டியது.