Yauwana Janamஅன்பான நண்பருக்கு ஒரு வேண்டுகோள். ஒரு சந்தோஷத் தருணத்தை இங்கே பதிவிட்டிருக்கிறீர்கள். இதிலிருந்து அனைத்து தேவையற்ற காமெண்டுகளையும் நீக்கிவிடவும். உங்கள் பால்ய சிநேகிதர் Sreehari Subburathnam வந்திருக்கிறாரே, அவருடைய காமெண்ட் மட்டும் இருக்கட்டும். இன்னும் உங்கள் அறிமுக வரிகளில் பொருளையும் மாற்றிவிடுங்கள்.நன்றி.
Raj Kumarசந்தோஷ தருணத்தை பகிர இந்தப் பதிவு இல்லை பிரதர், அப்படி இருந்திருந்தால் திருமணம் நடந்தபோதே பதிவிட்டிருப்பேன், இது வேதனையின் பதிவு துக்கத்தின் பதிவு... வேதனை சில ஆவிக்குரிய நண்பர்களாலேயே....
Yauwana Janamஅப்படியே நண்பர் Prabhu Priya அவர்களின் பக்கத்தைக் கடித்துகுதறும் அநியாயத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள். அவன் ஊரிலும் நடக்கும் இதுபோன்ற அநியாயங்களைப் பார்த்து இன்றைக்கு ஒரு வாலிபன் பின்மாற்றத்தில் இருக்கிறேன் என்று மிரட்டுகிறான்.
John Selvarajஎனக்கும் இதே எண்ணம் வந்தது. ராஜ்குமார் திருமணத்தில் நண்பர்களாயிருந்தார்கள். யவ்வனஜனம் என்பவர் அந்தக்காலத்து கல்யாண்குமார் என்கிற நடிகர் போலிருப்பார் என்று கூட எழுதியிருந்தார் பால்பிரபாகர் ! அவருக்கு பால்பி என்கிற அழகான நாமத்தைக் கூட யவ்வனம் வழங்கி கௌரவித்தார். இத்தகைய நட்பு தீசல் ஆனது எப்படி என்று புரியவில்லை. யவ்வனம் என்கிறவர் நாற்பத்தைந்து வயதிலிருப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ முதிர்ந்த தோற்றத்தில் அறுபதை எட்டுகிற தோற்றத்தில் உள்ளார். பால்பி மிகவும் எளிமையான கோபங்களுக்கு அப்பாற்பட்ட தம்பி ! அவர் ஏன் அத்தனை உணர்ச்சி வசப்பட்டு போலீஸ் , இராணுவம் என்கிற உச்சக்கட்ட வெறுப்பிற்குப் போனார் என்று தெரியவில்லை. ஜான்சன் கென்னடியும் ஒரு அம்சமான மனிதர். நான் அவரிடம் சில ஃபான்ட்டுகள் கேட்டு அவற்றை அவர் தராததில் சின்னக் கோபம் அவர் மீது எனக்கிருந்தது. அதனால் அவருக்கெதிராய் கமெண்ட் பண்ணி கடுப்படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கணத்தில் அவருடன் ஒப்புரவாகி விட்டேன். இப்ப என்ன பிரச்சனை ! ஏன் யவ்வன அண்ணாவை பலரும் தாக்குகின்றனர் என்று தெரியைலை.ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரியும் .யவ்வனம் என்கிறவர் மிகவும் நல்ல மனிதர். அழகாகத் தமிழ் எழுதுவார். வேதத்தை சிறப்பாய் அறிந்திருக்கிறார். பால்பி ! நாம் ஏன் எரிச்சல் கோஷ்டியில் சேர வேண்டும். நாம் சர்க்கஸ் பஃபூன்கள். அனைவரையும் சிரிக்க வைத்தல் மாத்திரமே நமது தொழில்.
Dave WisdomThanks, Bro Raj Kumar for your efforts for reconciliation. i had been thinking about it for some time but was afraid that it might cause another debate or conflict. you are the right person for the job as you are personally close to all the children of God who are involved.
Samuel ChurchillImmanuel Abraham முள்ளிவாய்க்காலின் முதல்வன் ஒரு நாளும் தன்னை மறைத்து கொண்டதில்லை. அந்த மாவீரனோடு சில்சாம் தன்னை ஒப்பிடுவது ஏற்க தகுந்தது அல்ல.., ///
கல்பனா ப்ரியா சோமா ஸ்ரீ செல்வா ஆகிய வீரர்கள் எங்கே பாஸ்டர் ???
Samuel Churchillகேட்ட கேள்விக்கு ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் ...??? இதெல்லாம் ஒரு பிழைப்பா, என்ன ? என்னை சந்திக்கும் தைரியம் உனக்கு இருக்கா பார்ப்போம்.
Samuel Churchillபச்சோந்தியைப் போல நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் க்ரிமினல்.......... போலி பெந்தெகொஸ்தே பெருச்சாளி.............. கள்ளப் போதகன்.............. ஃபேக் ஐடி மன்னன்.......... நீரெல்லாம் நியாயம் பேசவே தகுதியில்லாத ஜந்து. சக மனிதனின் படத்தை திருடியெடுத்து போட்டு அவனை அலி என்று வர்ணித்த மகான் அல்லவா நீர் ? இதோ நண்பர் ராஜ்குமார் போட்டது போல ஏன் போடவில்லை. ஒரு படத்தை சிதைத்து கெடுத்து இஷ்டத்துக்கும் எழுதிவைப்பதே ஊழியம் என்றால் உன் அழிவு விரைவில்.
Paul Prabhakarநேற்று ஒரு நண்பர் எனக்கு போன் பண்ணி , வேதவசனத்திற்காகவும், உபதேசவசனத்திற்குமே அல்லாமல் வேறெதற்கும் சண்டை போடாதீர்கள் என்று செல்லமாக திட்டினார். சண்டை போடுவதால் உங்களிடம் உள்ள நகைச்சுவையுணர்வு உங்களை விட்டு போய்விடும். அப்புறம் நான் உங்களை பிளாக் பண்ணிடுவேன் என்று பயங்கரச் சிரிப்புடன் மிரட்டினார். எல்லாரும் சேர்ந்து உன்னைய பிளாக் பண்ணிட்டால், ஆளில்லாத கடையில டீ ஆத்தின மாதிரிதான்னு மிரட்ட ஆரம்பித்தார்.. என் மீது அன்பு கொண்ட உள்ளவங்களுக்காக தேவனுக்கு நன்றி.
Venkat Benjaminஎல்லாரும் இங்க சண்டை போடுவது தெருச் சண்டையைவிட மோசமாக இருக்கிறது. ரோமர் 2:24 ஐ நினைவு கூறவும். கடந்த இரு நாளா நிறைய எழுத வேண்டும் எனத் தோன்றியது, ஆனாலும் மனம் வரவில்லை. இந்தப் படத்தைப் பார்த்ததும் எழுதுகிறேன். கிறிஸ்து ஒரே ஒரு நாள் நமக்காக அடிபட்டு நிர்வாணமாக தொங்கினார், இங்கோ நித்தமும் கிழிபடுகிறார், நிர்வாணமாக்கப்படுகிறார். இங்கு ஊழியர்கள் தான் கண்ணியமும் கனியும் இல்லாமல் எழுதிக்கொள்கிறீர்கள். இன்னும் எழுதனும் என்று இருக்கிறது ஆனாலும் மனதில்லை. சரீரத்தில் ஒர் அவயம் பாடுபட்டால் மற்ற அவயம் எப்படி வேதனைப்படுமோ அந்த வேதனையில் இதைப் பதிக்கிறேன். மற்றபடி இந்தப் படத்தை வெளியிட்டது இன்னும் பிரச்சனையைப் பெரிதாக்குமோ எனப் பயப்படவேண்டியுள்ளது. உங்களுக்கெல்லாம் போன் நம்பர் இருக்கும்போது போன்ல பேசியே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாமே, ஏன் இதுல எழுதி மற்றவர்களும் கிறிஸ்துவை தூசிக்க இடங்கொடுக்கிறீர்களோனுதான் எனக்குப் புரியல? தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். முதலாவது யாருக்காவது நான் கோபமூட்டியிருந்தாலோ விரோதமாக பாவம் செய்திருந்தாலோ என்னை மன்னியுங்கள்.
Paul Prabhakar// உங்களுக்கெல்லாம் போன் நம்பர் இருக்கும்போது போன்ல பேசியே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாமே, ஏன் இதுல எழுதி மற்றவர்களும் கிறிஸ்துவை தூசிக்க இடங்கொடுக்கிறீர்களோனுதான் எனக்குப் புரியல? தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். முதலாவது யாருக்காவது நான் கோபமூட்டியிருந்தாலோ விரோதமாக பாவம் செய்திருந்தாலோ என்னை மன்னியுங்கள்.// அருமையான ஆலோசனை நன்றிVenkat Benjamin...
Samuel Churchillஇத்தனை பாரத்துடன் எழுதப்பட்ட வரிகளிலும் துணிகரமாக லைக் போட எப்படிதான் மனம் வருகிறதோ ? இதே அக்கிரமத்தை பாஸ்டர் என்று சொல்லிக்கொள்ளும் இம்மானுவேல் ஆபிரகாமும் செய்கிறார். அவர்களிடமெல்லாம் நேரடியாக சொல்லமுடியாதவர்களே இப்படி பொதுவாக எழுதிவைக்கிறார்கள்.ஆனாலும் மன்சாட்சி இருண்டுவிட்ட இவர்கள் திருந்தப்போவதில்லை. இன்று எனக்கு...நாளை யாருக்கோ ????
Samuel Churchillஆம், ஒரு குறிபிட்ட சூழ்நிலையில் நான் இவரை அன்ஃப்ரண்டு பண்ணியபிற்கே எல்லா பகையும் முளைத்தது. அப்போது கர்த்தர் அறிய நான் ஒரு வார்த்தை கூட இவரைப் பற்றி எழுதவில்லை. ஆனால் இவரோ என்னை பரியாசம் பண்ணி ஒரு ஸ்டேடஸ் போட்டு அதில் என்னை எல்லோரும் கண்டபடி தூஷிக்க இடமுண்டாக்கினார். அதில் இவருக்கு ஒரு திருப்தி. இவருடைய வட்டம் இதனால் கொஞ்சம் விரிவடைந்தது. நீதிமானான இவர் அன்றைக்கு ஏன் என்னை அன்ஃப்ரண்ட் பண்ணினாய் என்று கேட்டு போன்செய்திருக்கலாமே ? சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் சேர்ந்திருந்தவர்கள் பிரிய காரணம் என்ன ? இதோ எழுதப்போகிறேன். சத்தியத்தை சத்தியமாய்............ அதை நான் செய்யாமல் தடுக்கவே இவ்வளவு திசைதிருப்பும் முயற்சிகள், ஆனாலும் சோர்ந்துபோகமாட்டேன்.
Paul Prabhakar // உங்களுக்கெல்லாம் போன் நம்பர் இருக்கும்போது போன்ல பேசியே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாமே, ஏன் இதுல எழுதி மற்றவர்களும் கிறிஸ்துவை தூசிக்க இடங்கொடுக்கிறீர்களோனுதான் எனக்குப் புரியல? தேவன் கிறிஸ்துவுக்குள் நமக்கு மன்னித்தது போல ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். முதலாவது யாருக்காவது நான் கோபமூட்டியிருந்தாலோ விரோதமாக பாவம் செய்திருந்தாலோ என்னை மன்னியுங்கள்.// அருமையான ஆலோசனை நன்றி Venkat Benjamin...
Samuel Churchillஉதாரணமா கேட்கிறேன்............. ஒரு திருமணத்திலே நான் நிற்கும் இந்த படத்திலிருந்து என்னை மட்டும் க்ராப் பண்ணி அதைப் பதித்து இதோ காணாமற் போயிருந்தவனை கண்டுபிடித்துவிட்டோம்... பணம் சம்பாதிக்கவே இங்கே போயிருக்கிறான் என்று எவனாவது எழுதினா நான் ச்சும்மா இருக்கணுமா... இருந்தேன். நான்கு வருடமாக. ஆனால் எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இப்போ எல்லாரும் முன்னைவிட அதிகமாவே கஷ்டப்படப் போறாங்கே............
Samuel Churchillநீயும் உன் வெள்ளைக்கொடியும்...வெள்ளைக் கொடியின் மதிப்பை முள்ளிவாய்க்காலில் பார்த்தோம்.
/// Paul Prabhakar @Raj Kumar, என்னிடம் எப்போதுமே வெள்ளைக் கொடி உண்டு. நான் ஒதுங்கி போகலாம் என்று நினைக்கும் போது உடனே சீண்டும்படி அடுத்த பிரச்சினையை ஆரம்பிப்பார். உங்கள் வார்த்தைய மதித்து இனி சமாதனத்தோடு இருப்பேன் நன்றி ///.
இதே பக்கத்தில் வெள்ளைக் கொடி பற்றி கிண்டலாக ஒரு கருத்தை எழுதி போலியான வெற்று வார்த்தைகளால் வஞ்சிக்கப்பார்க்கிறார்...தொடருவது அங்கே பதிக்கப்பட்ட காமெண்டுகள்....
Paul Prabhakar@Raj Kumar, என்னிடம் எப்போதுமே வெள்ளைக் கொடி உண்டு. நான் ஒதுங்கி போகலாம் என்று நினைக்கும் போது உடனே சீண்டும்படி அடுத்த பிரச்சினையை ஆரம்பிப்பார். உங்கள் வார்த்தைய மதித்து இனி சமாதனத்தோடு இருப்பேன் நன்றி.
Johnson Kennedyநான் எனக்காக எனது பாஸ்டர்.Rev.மைகேல் அவர்களும் தன்னிலை விளக்கம் கொடுத்த பிறகும் என்னை கள்ள உபதேசக்காரன் , யேகோவாசாட்சி என்றெல்லாம் பேசி என்னை வேண்டுமென்றே அவமானப்படுத்த செயலில் இறங்கினவர் தான் இந்த சில்சாம்...........
Raj KumarJohnson Kennedy தாங்கள் wod of god team சேர்ந்தவர் என்பது முகநூல் வருவதற்கு முன்னமே அனைவரும் அறிவர். ஞானபிரகாசம் இக்னீசியஸ் இளங்கோ போன்றவர்களுடன் இனைந்து போட்டோ எடுத்துக் கொண்டதால் அவர் அப்படி சொல்லியிருக்கக் கூடும்.. கூடுமானால் ஒரே உபதேசத்தை உடைய நாம் சுயம் சாராமல் பிரிவினைகள் இல்லாமல் இருப்போம் பிரதர்..
Paul Prabhakar@Raj Kumar, என்னுடைய மதியீனம், தவறுகள், குற்றங்களை, பாவங்களை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனானவர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில மன்னிப்பாராக என்று முகநூலில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் முன்பாக பகிரங்கமாக அறிக்கை செய்கிறேன். நான் இன்று பதிவு செய்திருக்கிற வேதவசனத்தின்படி ஜீவனுள்ள கிறிஸ்துவின் ரத்தம் என் மனசாட்சியை சுத்திகரிப்பதாக. ஆமென்.
Johnson Durai Mavadiமுதலில்ஒருவன் கல் எறிந்ததின் நிமித்தம் பாதிக்கப்பட்டவன் திருப்பி கல் எறியும் சமயத்தில் சமாதானம் பேசும் நல்லவர்கள் அநேகர் பாதிக்கப்பட்டவனுக்கு நேர் எதிராய் அறிவுறைகள் கூறுகிறார்கள் ஆனால் முதலில் கல் எறிந்தவனோ ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறான் இப்படிப்பட்ட உலக நீதி ஆவிக்குரிய சகோதர்களிடம் காணப்படுவது வேதனைக்குரியது.தேவநீதியாய்ப் பார்த்தால் முதலில் கல் எறிந்தவனை அவனுடைய துன்மார்க்கத்தை கடுமையாக கண்டனம் செய்துவிட்டு பின்பு திருப்பி கல் எறிந்தவனைப் பார்த்து அறிவுறைகள் கூறி தவறை உணர்த்தினால் இது தேவநீதியாக இருக்கும் இதை ஆவிக்குரியவர்கள் உணர்ந்தால் நலமாக இருக்கும்
நம்முடைய தமிழ் கிறிஸ்தவ இணையப் பணியில் இணையாக இசைந்துவரும் நண்பர் ராஜ்குமார் அவர்கள் தனது திருமணத்தின்போது எடுத்துக்கொண்ட படத்தைப் பதித்து ஃபேஸ்புக் தளத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து தனது வருத்தங்களைத் தெரிவித்திருந்தார். அதையும் முதிர்ச்சியற்ற ஒருசிலர் விவாதமாகவே கொண்டு செல்லும் போக்கு உண்மையிலேயே ஏமாற்றமாக இருந்தது. எங்கே சமாதானம் வந்துவிடுமோ என்று சிலர் அஞ்சுவதாக தோன்றுகிறது.
முதலில் நண்பர் பதித்திருக்கும் படமும் அதனைத் தொடர்ந்து அவர் எழுதியதும் இடம் பெற்றிருக்கிறது.
எங்கள் திருமணத்துக்கு வந்த போது ஊழியர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தார்கள், மூன்றுமாதங்களுக்குள்ளாக நிலைமை தலைகீழ்... என்ன சொல்ல??? இவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது அதிக வேதனையாக இருக்கிறது, ஒருவேளை அவர்களின் பிரிவுக்கு எங்கள் திருமணத்தில் நடந்த சந்திப்பும் ஒரு காரணமோ என்று அச்சம் உண்டாகிறது சூழ்நிலைகள் மாறி சமாதாணம் உண்டானால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்...
இதில் என்னுடன் பகைமூண்டதற்கான காரணத்தை திரு.பால் பிரபாகர் வெளிப்படுத்தியிருக்கிறார்.