பெலவீனங்கள் தடுமாற்றங்கள் சோர்வுகள் படுதோல்விகள் புரியாது போன வாழ்க்கையில் மனதில் விரிசல்களே கலக்கங்கள் மனக்கசப்புகள் தவிப்புகள் பல திகைப்புகள் உதிர்ந்துபோன கனவுகள் உயிரில் உயிரில்லையே
உலகம் வெறுக்கின்றதே உணர்வில் சுகமில்லையே உண்மை வ்ழி காட்டிட யாரும் இங்கில்லையே
வழுக்கிடும் பல பாதைகள் வாலிபத்தின் பல கவர்ச்சிகள் ஏக்கம் நிறைந்த என் வாழ்க்கையே கசங்கியே போனதே தனிமையின் அந்த உணர்வுகள் மயக்கிடும் பல நினைவுகள் இருளில் வழிதேடும் ஆசைகள் வாழ்வில் சுவையில்லையே
உலகை எதிர்கொள்ளுவேன் உணர்வில் ஜெயங் கொள்ளுவேன் உண்மை வழி நடத்திட போதும் நீர் மட்டுமே...(4) இயேசுவே
(இந்த அருமையான பாடலை இதுவரை 7 பேர் மாத்திரமே கவனித்திருக்கிறார்கள். இது ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் இசையில் வெளிவந்த இளஞ்சிறகுகள் எனும் ஆல்பத்தில் உள்ளது.)