சத்தியத்தின்படி நாம் அவர்களை எதிர்த்தாலும் அவர்களில் பலரும் நல்ல நகைச்சுவையாளர்கள். பண்பாளர்கள் எனலாம். ஆனாலும் அவர்கள் தங்கள் தொடர்புகளை மறைத்து மாய்மாலம் பண்ணவேண்டாம் என்றே நாம் சொல்லுகிறோம். நீங்கள் இயேசுவை தொழத்தக்க தெய்வமாக ஏற்கவில்லையா, பிரச்சினையே இல்லை. அதை திரு.இக்னீஷியஸ்போல ஓங்கி சொல்லுங்கள். திரித்துவத்தை மறுத்து ஆவியானவரின் இடைபடுதலை ஸ்தாபனங்களின் மோசடியான போதனை என்கிறீர்களா சுற்றிவளைக்காமல் அதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுங்கள். பிறகு எங்களுக்கும் தேர்ந்தெடுக்கவும் உங்களை அனுமதிப்பதா அல்லது விட்டு விலகுவதா என்று தீர்மானிக்க ஏதுவாக இருக்கும்.
இதோ, ஒரு நல்ல ஜோக் மற்றும் அதை ரசித்த இன்னிசைப் புயல்வியாசர் லாரன்ஸ்... இவர் இதுவரை நமக்கு ஒழுங்கான பதில் சொல்லாமல் டிமிக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்மீது என்ன கோபமோ நாம் கொடுத்த இன்னிசை புயல் என்ற பட்டத்தையு வாங்க மறுத்து நம்மைப் பற்றி அவதூறு செய்வோரின் தோழராகியிருக்கிறார், பெரியவர் வியாசர் லாரன்ஸ் அவர்கள். அவருக்கு எழுதியிருக்கும் அண்மைய பதில்...
ஆளும் வளரணும்,அறிவும் வளரணும் என்பார்கள். ஆனாலும் சிலருக்கு ஏழு கழுதை வயசானாலும் வாய் சரியாக இல்லாததால் தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்து வருகிறார்கள். இன்று காலையில் சில மணி நேரம் முன்பு திரு.வியாசர் லாரன்ஸ் எனும் பெரியவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முகப்பு நிலைச் செய்தியில் எழுதியதன் பாதிப்பிலேயே இதனைப் பதிக்கிறேன். அவர் எழுதியது இன்னும் அங்கே இருக்கிறது. அதில் அவர் திருச்சபையின் ஒழுங்குகளுக்கு எதிராகவும் ஆவியானவருக்கும் எதிராகவும் எழுதியிருப்பவை விதண்டாவாதமாகும். இதனால் யாருக்கு பக்திவிருத்தியுண்டாகும் என்பதை அவரே சொல்லட்டும். இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை இங்குமங்கும் சிந்திவிட்டு பிறகு தன்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று புலம்புவதில் என்ன நியாயமுண்டு ? மேலும் திருச்சபையின் தலைவர்களுக்கு எதிரே கூழைக் கும்பிடு போடும் இந்த கனவான் அவர்களுக்குப் பின்னால் இப்படி எழுதி அவதூறுசெய்வது சரிதானா என்பதை எல்லோரும் யோசிக்கவேண்டும். இப்படிப்பட்டவரிடம் அனைவரும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். தொடருவது அவரால் எழுதப்பட்ட வரிகளின் ஸ்க்ரீன் ஷாட் ஆதாரம்...
இது ஒவ்வொரு மாதமும் முதலாம் தேதியன்று முதல் மணிநேரத்தை கர்த்தரோடு செலவிடும் இறைமக்களுக்கெதிரான அவதூறு ஆகும்... வாக்குத்தத்தம் ஒன்றை தியானித்து அதனை தனக்குள் கர்த்தர் நிறைவேற்றுவார் என்று விசுவாசிப்போரை இங்கே கிண்டலடிக்கிறார், இந்த அதிகப் பிரசங்கி.
இந்த பதிவில் ஆவியானவரையே பரியாசம் பண்ணுகிறார். இவரே சொல்லுவது போல இவருக்குள் ஆவியானவர் இருந்திருந்தால் இதுபோல பேசியிருக்கமாட்டார். இது ஒவ்வொரு மேடையிலும் அவருக்கேயுரிய ஸ்பெஷல் கிண்டல் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவரது கூட்டங்களில் பங்கேற்றோரே சாட்சியாக இருக்கிறார்கள். ஆனாலும் இவர் யார் என்றும் சிலர் கேட்குமளவுக்கே இவருடைய இலட்சணம் இருக்கிறது. இவர் ஒரு தீவிரமான பைபிள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பைபிள் மாணவர் என்பது நல்ல வார்த்தை தானே என்று சிலர் நினைக்கலாம். பைபிள் ஸ்டூடண்ட் எனப்படுவது கிறிஸ்துவின் தன்மையையும் திரித்துவத்தையும் மறுத்து வேதப் புரட்டு செய்யும் ஒரு இயக்கம் என்பது நாம் அறிந்திருக்கவேண்டியது ஆகும். இவர்கள் க்ரூப்பில் இருக்கும் மற்றொரு பிரபலமான ஜாண்சன் கென்னடி என்பவர் இவர்களோடு தனக்கு தொடர்பில்லை என்று அண்மைக்காலங்களில் மறுத்து வந்தாலும் அவர்கள் இயேசுவையே மறுதலிக்கும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதுகுறித்து நமக்கு வியப்பேதும் இல்லை.
வயசு 60 ஆனாலும் மனுஷன் கண்ணுக்கு வயசே ஆகாது போல. பிரபல சுவிசேஷகரான வியாசர் லாரன்ஸ் அவர்களுடைய பக்கத்தில் அவ்வப்போது இதுபோன்ற அதிர்ச்சிகள் இருக்கும். இதற்காகவே தன்னை புதியவன் என்று சொல்லிக்கொள்ளுகிறாரோ என்னவோ ?! கதை நன்றாக இருந்தாலும் படம் அருவருப்பாக இருக்கிறது. இதை சொல்லவேண்டுமானால் இதைப் பகிரவேண்டும். இதைப் பகிரவும் பிடிக்கவில்லை.ஆனாலும் சிலருடைய ரசனைகளைக் கண்டிக்கவேனும் இதைப் பகிருகிறேன். மேலும் இந்த ஆள், திருச்சபை வட்டாரங்களில் ஒரு பாடகர் போர்வையில் சுற்றிக்கொண்டிருந்தாலும் கிறிஸ்தவ மேடைகளில் இசை வியாபாரம் செய்திருந்தாலும் இதுவரை திருச்சபையின் நலனுக்காக எதையும் செய்ததில்லை. ஒரு திருச்சபையைக் கூட ஸ்தாபிக்கவோ ஒரு ஆத்துமாவுக்கேனும் உதவிசெய்யவோ முன்வந்ததில்லை. ஆனால் (மேசியாவின்) எதிரிகளுடன் கள்ள உறவு பாராட்டி இயேசுவின் தெய்வத்தன்மையை மறுதலித்து பாவம் மரணம் நரகம் பாதாளம் நியாய்த்தீர்ப்பு ஆகியவற்றையும் திரித்துவ தேவனின் மாட்சிமையையும் ஆவியானவரின் செயல்பாடுகளையும் மேடைகள் தோறும் அவதூறு செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மொபைலில் sex எனும் வார்த்தையைத் தேடியிருக்கிறார். அதில் வந்த இதைப் பகிர்ந்து அங்கே தேவையில்லாமல் ஆண்டவருடைய நாமத்தை வீணிலே வழங்கும் பாவத்தையும் செய்திருக்கிறார்.
||மாரநாதா அற்புதர் இயேசு வருகிறார்!||
இதில் சொல்லப்படும் கதையில் விபச்சாரியான ஒரு பெண்ணை எல்லாம் அறிந்தும் திருமணம் செய்த ஒரு பாஸ்டருக்கு அவள் மூலம் ஆண் குழந்தை பிறந்ததாம். இதில் என்ன அதிசயம், அவளுக்கு கர்ப்பப் பை அகற்றப்பட்டிருந்ததாம். இது எப்படி சாத்தியம் என்று கேட்டால் அதுவே அற்புதம் அதிசயம் தேவனுடைய அளவற்ற கிருபை என்கிறார்கள். கதையை யார் பொறுமையாக படித்திருப்பார்கள், படத்தையே உற்றுப்பார்த்து கண்ணை இன்னும் பெரியதாக்கியிருப்பார்கள்..! :)