/// சுயநல தேவைகளும், செழிப்பு உபதேசங்களும் பேசப்படுகிறது. சத்தியத்தை ஒழுங்காக பிரசங்கிக்க மறுத்ததாலே இன்று மாய்மால மோசடி பேர்வழிகளும், பொய்தீர்க்கதரிசிகளும் பெருத்ததற்கு காரணம். ///
சத்தியத்தை ஒழுங்காக பிரசங்கித்தோரைப் புறக்கணித்தவர்கள் யார் ? உன் தேவைகளை கர்த்தர் சந்திப்பார் என்று பிரசங்கிப்பது தவறல்ல, அது விசுவாசத்தை உருவாக்கும் முயற்சியாகும். ஆனால் உன் தேவைகளை சந்தித்துக்கொள்ள கர்த்தரிடம் வா என்று அழைப்பதுதான் மோசடியாகும். அவ்வாறே செழிப்பைக் குறித்து போதிப்பது மோசடியல்ல, அப்படியானால் செழிப்பைக் குறித்து எழுதப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளும் ஆயிரக்கணக்கான வசனங்களும் என்னவாகும் ?
அப்போஸ்தலர் 19:9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்.