பைபிள் லவ்வர்ஸ் அசெம்பிளிஎன்ற பெயரில் ஆங்காங்கு கூடி கருத்தரங்குகளை நடத்தி தங்களை சபை சார்பற்றவர்கள் என்றும் காணிக்கை வாங்காதவர்கள் என்றும் சுயமாக உழைத்து தியாகமாக ஊழியம் செய்பவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு பல்வேறு வேதப் புரட்டுகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கும் இவர்கள் திரித்துவம், ஆவி, ஆத்துமா, சரீரம், பாவம், மரணம், பாதாள்ம், நரகம், நியாயத்தீர்ப்பு உள்ளிட்ட அனைத்து முக்கியமான அடிப்ப்டை சத்தியங்களிலும் மாறுபடுப (மாறுபாடுள்ள) வர்கள். தாங்கள் நம்பி ஏற்றுக்கொண்டதை நிரூபிக்க வேதத்தின் மொழிபெயர்ப்பையும் மூலப் பிரதிகளையும் திருச்சபையின் முற்பிதாக்களையும் மறுத்து திரித்து புரட்டி வளைத்து நெளித்து குறைகூறுபவர்கள். நாம் ஏதேனும் கேள்விகள் கேட்டால் அவர்கள் நடத்தும் தொடர் வேதபாட வகுப்புகளில் பங்கேற்றால் நிச்சயம் பதில் கிடைக்குமென்று சொல்லுவார்கள். முக்கியமாக இயேசுவானவர் நித்தியமானவர் அல்ல, அவர் பிதாவினால் ஆதாமின் பாவத்துக்கான ஈடுபலியாக சிருஷ்டிக்கப்பட்டவர். அவருடைய பலியினால் பாவம் முடிவுக்கு வ்ந்துவிட்டதால் இனி பாவிகள் என்று யாரும் இல்லை. மரணமே பாவத்துக்கான தண்டனை, எல்லோருக்கும் நித்திய ஜீவனில் - ப்ரலோக இராஜ்யத்தில் பங்கு உண்டு என்று சொல்லுவார்கள். இவர்களைக் குறித்து நாம் ஏன் அறிந்திருக்கவேண்டும் ? ஏன் இவர்களைக் குறித்து எச்சரிக்கவேண்டும் ? இதனால் என்ன பலனுண்டாகும் என்று கேட்போருக்கு என்னுடைய பதில், இவர்கள் (மேசியாவின்) எதிரிகள் என்பதே.இவர்களைக் குறித்து அறிவித்து எச்சரிக்காவிட்டால் குற்றம் நம்மீதே சுமரும் என்று வேதம் சொல்லுகிறது. இவர்கள் அப்போஸ்தலர் காலத்திலும் வாழ்ந்தார்கள், இப்போதும் நம்முடன் வாழுகிறார்கள்.