தாவீது தேவனுடைய இருதயத்துக்கேற்றவன் என்று பெயர் பெற்றாரே, கொஞ்சம் பொறாமையாக இருக்கிறதல்லவா ?
நான் அப்படியே - தாவீதைப் போல - தேவனாகிய கர்த்தர் எப்ப்டி இதை பார்க்கிறார் என்று மாத்திரமே சிந்தித்து எழுதுகிறேன்.
மலிவான உலக ஆதாயங்களோ போலியான நட்புகளோ பொய்யான சகோதர விளிப்போ எனக்கு கொஞ்சமும் பிடிக்காது.
இயேசுவைப் பகைக்கிறவனுக்கு நான் எதிரியே.
திருச்சபை அமைப்பை குறைகூறுவோர் திருச்சபையின் தலைவராகிய இயேசுவையே அவமதிக்கிறார்கள்.
இன்னும் அதை பாபிலோன் வேசியின் சபை என்று வர்ணிப்போரை நான் எப்படி பொறுத்துக்கொள்ளமுடியும் /
எல்லா கல்ட் க்ரூப் ஆட்களுமே ஏற்கனவே இருப்பதை குறை கூறியே பிரிவினையை விதைக்கிறார்கள்.
எனவே “ப்ளாக் ஷீப்” விஜய் எடுத்துரைக்கும் ஒவ்வொன்றையும் நான் வன்மையாக எதிர்க்கிறேன்.
அவரும் ஒரு கல்ட் க்ரூப்பை சேர்ந்தவர் என்பதை விரைவில் எல்லோரும் அறிவார்கள். அதற்குள் அவரால் ஏற்படும் பாதிப்பை யாரும் ஈடுகட்டமுடியாது.
என்னுடைய பழைய பதிவுகளிலிருக்கும் வாதங்களை நீங்கள் கவனித்தால் அனைத்து விளங்கும்.
கிறிஸ்மஸ் கொண்டாட்டம் முதலாக அவரோடு எனக்கு மோதல் வெடித்தது.
அவருடைய அனைத்து உபதேசங்களின் பின்னணியிலும் போலியாக திரித்துவத்தை ஏற்றுக்கொண்டு அதன் பெலனை மறுதலிக்கும் கொள்கையின் விபரீதம் கொண்ட சாக் பூணன் போன்றோரின் பாதிப்பு இருக்கிறது.
சாக் பூணன் போன்றோர் ரசல் மற்றும் பிரன்ஹாம் ஆகியோரின் பாதிப்பை உடையவர்.
I தீமோத்தேயு 6:20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.
II தீமோத்தேயு 3:5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
இதுநாள் வரைக்கும் தமிழ் கிறிஸ்தவ உலகில் ஐயத்துடன் பார்க்கப்பட்ட விஜய்குமார் என்பாரின் எழுத்துக்கள் முழுவதும் சூழ்ச்சி நிறைந்த கள்ள உபதேசங்களே என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அதுபோல ஒரு சில காரியங்களினாலேயே இவற்றை அறிந்துகொண்டோம். இன்னும் நிதானமாக அவருடைய எழுத்துக்களை ஸ்கேன் பண்ணும்போது முழு பின்னணியையும் வெளிக்கொணருவோம் என்று நம்புகிறோம். ஏன் இவரோடு எல்லோருக்கும் உரசல் வருகிறது ? ஏன் இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் அருகில் வைத்திருக்கிறார் ? இவரோடு பலர் முரண்பட்டாலும் ஏன் ஏதோவொரு கட்டாயத்தின்பேரில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் யோசித்தாலே கூட பல உண்மைகள் புலப்படும். இப்படிப்பட்ட ஒருவரை நாம் ஏன் தொடரவேண்டும் ? இவர் மிகவும் பிரபலமானவராகவும் புகழ்பெற்றவராகவும் இருந்தால் இவரால் விதைக்கப்படும் தீமைகள் வளரும் இளைஞர்களை பாதித்துவிடக்கூடாதே என்பதற்காக இவரை தொடர்ந்து சென்று பரிசோதித்து இவருடைய சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தவேண்டும். அல்லது இவர் மிக மிக சாதாரணமான ஆள், இவரால் எந்த ஆபத்துமே இல்லை என்றாலும் கூட இவரை சாதாரணமாக விட்டு விடமுடியாது. ஒரு சிறு துளி விஷமானது முழு காரியத்தையும் கெடுத்துப்போடும் அல்லவா ? எனவே இவரை முழுவதுமாக புறக்கணித்து இவருடைய தவறான வியாக்கியானங்களையும் திருச்சபை விரோத முயற்சிகளையும் எதிர்க்க தீர்மானித்திருக்கிறோம். ஏற்கனவே ஃபேஸ்புக் தளத்தில் எழுதப்பட்டுள்ள காரியங்கள் இந்த பிரிவின் கீழ் தொகுக்கப்படும். நம்முடைய நியாயமான கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் அவர்கள் பதில் சொல்ல முன்வருவார்களானால் நிச்சயமாகவே அதனை பரிவுடன் பரிசீலிக்க ஆயத்தமாக இருக்கிறோம் என்பதையும் உறுதியுடன் சொல்லிக்கொள்ளுகிறோம். அவர் அண்மையில் நமக்கு எதிராக எழுதியிருக்கும் காரியங்களீன்படி நாம் அவரை உள்நோக்கத்துடன் பின் தொடரவோ இழிவுபடுத்தவோ கீழ்த்தரமான எழுத்துக்களால் துக்கப்படுத்தவோ விரும்பவில்லை, அது நமக்கு வழக்கமுமில்லை. உண்மையில் மிக மோசமான - கேவலமான குற்றசாட்டுகளினால் என்னை மனமடிவாக்கிய அந்த பாவிகள் இன்றைக்கும் அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் என்னை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மையாகும். பின்வரும் ஸ்கிரீன் ஷாட்டில் திரு.விஜய்குமார் எழுதியவையே நான் மீண்டும் களம்புக காரணமாக இருந்தது என்பதை எனது மதிப்பிற்குரிய வாசக நண்பர்களுக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
சிலருடைய உளறல்களுக்கு பதில் கொடுக்கக்கூடாது. சில நேரங்களில் பதில் தருவது அவசியமாகும். இதனால் யாருக்கும் பக்திவிருத்தி இல்லாவிட்டாலும் சிலருடைய வீழ்ச்சியை தவிர்க்கவேனும் இந்த முயற்சி உதவலாம் என்று நினைக்கிறேன்.
ராச்சாம காவாக்காரவங்களான இவர்களுடைய discernment- எனப்படும் சரியானதை நிதானிப்பதில் பேர் போனவர்கள் என்பது பிரசித்தமான விஷயமாகும். இதுகுறித்து முன்னரே எழுத நினைத்தாலும் ஒருசில அற்ப ஜந்துக்களுக்காக எனது பொன்னான நேரத்தை வீணாக்கணுமா என்று தவிர்த்து வந்தேன்.
இவர்களுடைய discernment திறமையை பல சூழல்களில் நான் ரசித்து வந்திருக்கிறேன். எப்படியெனில் ஒருவர் எழுதுவதை வைத்து அதில் என் சாயலைப் பார்த்துவிட்டால் எனது ஃபேக் ஐடி என்று முடிவு செய்துவிடுவார்கள். பிறகு அந்த ஆளை உளவுபார்ப்பார்கள். பெரும்பாலானோர் சலிப்படைந்து விலகிவிடுவார்கள். சிலரோ தங்களை இந்த மேதைகளிடம் நிரூபித்து தங்கள் பேரைக் காப்பாற்றிக்கொள்ளுவார்கள். இவர்களும் அவர்களைக் குறித்து தவறாக கணித்ததற்காக வருத்தம் தெரிவித்து அப்போதைக்கு மீசையை மழித்துக்கொள்ளுவார்கள்.
இப்படி தமிழ் கிறிஸ்தவத்தையே கூறுபோட்டு ஒருவருக்கொருவர் விரோதமாக்கி அழகுபார்த்த இந்த மேட்டுக்குடி பொறுக்கிகள் இப்போதைக்கு (மேசியாவின்) எதிரிகளான யெகோவா சாட்சி கும்பலுடனும் வேதமாணாக்கர் இயக்கத்தவருடனும் ஈஷிக்கொண்டு அவர்கள் போடும் லைக்குகளுக்காகவும் அவர்களுடைய பாராட்டுகளுக்காகவும் பொதுவான கிறிஸ்தவ விசுவாசத்துக்கு துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இவர்களுடைய கொள்கைகளுக்கும் உபதேசங்களுக்கும் எதிராக செயல்படும் ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி தலைகாட்டுவதை தங்களுக்கு பெருமையாக நினைக்கிறார்கள். அதேபோல ஜாமக்காரன் ஆசிரியரிடமும் பல்வேறு குறைபாடுகள் இருந்தும் அவரை ஸ்டெப்னியாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். இன்றுவரை ஏஞ்சல் டிவியில் இவர்கள் செய்ததும் பெற்றதுமான அனுபவங்களை பகிரங்கமாக பகிர்ந்துகொண்டதில்லை. அப்படியானால் அவர்களுடன் ஏதோ கள்ள உறவு இருக்கும்போல. இப்படிப்பட்டவர்களுக்காகவே ஒபதியா எனும் ஒரே ஒரு அதிகாரம் கொண்ட புத்தகம் வேதத்தில் இடம்பெற்றிருக்கிறது என்றால் அது மிகையல்ல.
இது என்ன வகை ஊழியமோ ? யாமறியோம் பராபரமே..!!!
இந்நிலையில் அண்மையில் நாம் கவனித்த மேற்காணும் காமெண்ட் நம்மை அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது அந்த ப்ளாக் ஷீப் தனது விசேஷித்த திறமையினால் தன்னோடு வாதிட்டு, தனக்கு எதிர்கருத்து சொல்லுவது, ”நானே” என்று நினைத்திருக்கிறார். அதை மறைமுகமாக சுட்டிக்காட்டி இவ்வாறு எழுதியிருக்கிறார். இதோ அவரது ஆசையை - கட்டளையை நாம் நிறைவேற்றிவிட்டோம். என் பெயரால் பழிசுமந்த அந்த பரிதாப ஜீவனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
தனது கருத்துக்கு எதிர்கருத்தே இருக்ககூடாது என்பது எந்தவகை சமநிலையோ ? நீ ஓயாமல் சமநிலை பற்றி பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறாய், உன்னைத் தொடர்ந்து வந்து உன்னுடைய பொய் தோரணங்களை கசக்கியெறிய ரொம்ப நேரம் ஆகாது. அவ்வாறு நான் செய்தால் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். ஆட்டுக்குட்டி மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு நாவின் கீழே விஷத்தை வைத்திருக்கும் உன்னைப் போன்ற மாய்மாலக்காரர்களே திருச்சபையின் பிரதான எதிரிகள்.
உன்னோடு வெள்ளந்தியாய் பழகிய ஒரு மனுஷனைக் குறித்து அருவ்ருப்பான குற்றச்சாட்டுகளை சொல்லி இன்றுவரை அதை நிரூபிக்கவோ மன்னிப்பு கேட்டு ஒப்புரவாகவோ ஆயத்தமாக இல்லாத நீ சொல்லும் வேதத்தை சாத்தானும் சொல்லுவான். உன்னை உயர்த்திக்கொள்ள இன்னும் எத்தனை கொலையும் செய்ய துணிவாய் என்று எனக்கு தெரியும்.
நண்பர்களே, இந்த கும்பலோடு உறவாடிக்கொண்டிருக்கும் - நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர் இவர்கள் என்னைப் பற்றி கூறிய குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாமல் மறந்துவிடவேண்டும் என்று அவர்களுக்காக பரிந்துபேசினார். ஆனால் ஒரு நிமிடமாவது அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லியிருக்கலாம். ஆனால் அதுவும் ஆபத்து தான். தங்களுக்கு புத்திசொல்லும் யாரையும் இவர்கள் தங்கள் அருகில் வைத்துக்கொள்ளுவதில்லை. உலகத்திலேயே சிறந்த கிறிஸ்தவத்தை வானத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்த தவப்புதல்வர்கள் இவர்கள்... என்பதால் இவர்களிடம் ஒரு குறையும் இருக்காது. எல்லாம் சரியாகவே இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.