பல்லவி
நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே - திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே சரணங்கள்1. தம்பிரான் ஒருவனே, தஞ்சமே தருவனே - வருதவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே --- நான்2. நின்பாத தரிசனம் அன்பான தரிசனம் - நிதநிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே --- நான்3. நாதனே, கிருபைகூர், வேதனே, சிறுமைதீர் - அதிநலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே --- நான்4. பாவியில் பாவியே, கோவியில் கோவியே - கனபரிவுடன் அருள்புரி, அகல விடாதே, நம்பிவந்தேனே --- நான்5. ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உனதடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த நம்பிவந்தேனே --- நான்