சகோதரி ஒருவர் தான் பங்கேற்கப்போகும் கூட்டத்துக்கு ஆயத்தப்பட தன் தோழருடன் அடிக்கடி போன்செய்து எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறார். உஷாரான தோழர் சொல்லுகிறார், இப்படியே சில பிரபலங்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் சாதாரணமானவர்களுடன் எதையாவது பேசி அதில் வெளிப்படும் கருத்துக்களை எடுத்து தங்கள் படைப்புக்கு மெருகேற்றிக்கொள்ளுவார்கள்,என்பதாக. சகோதரி சொன்னார், நீங்க முட்டாளா என்ன, நிறைகுடம் ததும்பாது என்பது உண்மையான வார்த்தை,என்பதாக. ஆம், ஒருவேளை இருக்கலாம்,ஆனாலும் திருப்பதியில் சீப்பு விற்பவன் முட்டாள் தானே ? அங்கே செல்லும் எல்லாரும் மொட்டைப் போட்டுவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருக்கிறார்கள்,அவர்களிடம் போய் அவர்களுக்கு இப்போதைக்கு தேவையில்லாத ஒன்றை விற்க முயற்சிப்பவனுடைய நிலைபோலவே ஞானம் கொள்ளப்படாத இடத்தில், அது பயன்படாத இடத்தில் அதைக் கொடுக்க முயற்சிப்பவனும் முட்டாளைப் போன்றவனே.