Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரபல நடிகை அனாதை ஆஸ்பத்திரியில்...
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
RE: பிரபல நடிகை அனாதை ஆஸ்பத்திரியில்...
Permalink  
 


கனகா புற்றுநோயால் மரணமடைந்ததாக தமிழகத்தின் டாப் செய்தித் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட அதனைப் பின்பற்றி மற்ற பத்திரிகைகளும் அதனை எதிரொலிக்க திடீரென கனகா தோன்றி எதையும் நம்பாதீர்கள் எனக்கு ஒன்றுமில்லை என்று கூறினாரே பார்க்கலாம்!

img1130731005_2_1.jpg

விவரத்துக்கு........

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1307/31/1130731005_1.htm



__________________
HMV


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 133
Date:
Permalink  
 

 

அனாதை ஆஸ்பத்திரியில் நடிகை கனகா: கவனிக்க ஆளில்லாமல் தவிக்கிறார்

கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மாஜி ஹீரோயின் தேவிகாவின் மகள். தமிழ், மலையாளத்தில் உள்ள அத்தனை டாப் ஹீரோக்களுக்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் 75 படங்கள் வரை ஹீரோயினாக நடித்தார். 2004ம் ஆண்டு குஸ்ருதி என்ற மலையாளப்படத்தில் கடைசியாக நடித்தார். தமிழில் கடைசியாக நடித்தது சிம்மராசி.

NT_130728113607000000.jpg

அம்மா தேவிகாவின் மரணத்திற்கு பிறகு கனகாவின் வாழ்க்கையே திசை மாறியது. மகளை வெளி உலகம் தெரியால் தேவிகாக பொத்தி பொத்தி வளர்த்தார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு கனகாவால் வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள முடியவில்லை. அம்மா தேவிகாவால் புறக்கணிக்கப்பட்ட அவரது தந்தையும் அவருக்கு ஆறுதலாக இல்லை.

முத்துக்குமார் என்ற வெளிநாட்டு என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கையும் கனவாவுக்கு இனிக்கவில்லை. யாரைப் பார்த்தாலும் வெறுப்பு, பயம் அவருக்கு. அதனால் ஒரு மனநோயாளி போன்றே நடந்து கொள்ள ஆரம்பித்தார். தந்தை தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும், சொத்துக்களை பறிக்க முயற்சிப்பதாகவும் வழக்கு போட்டார். தன் கணவரை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று போலீசில் புகார் செய்தார். ஆவி அமுதா என் கணவரை பிடித்து வைத்துக் கொண்டு தர மறுக்கிறார் என்று புகார் செய்தார். ஆவி அமுதா கனகா மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டை காலிசெய்து விட்டு சென்று விட்டார் கனகா. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே தெரியாமலே இருந்தது. இப்போது அவரைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓராண்டுகள் வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். புற்றுநோய் குணப்படுத்த முடியாத அளவுக்கு முற்றிவிட்டதால் கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளை அவர்களின் மரணகாலம் வரை வைத்து பராமரிக்கும் மருத்துவனைக்கு மாற்றப்பட்டு விட்டார். இப்போது அந்த மருத்துவமனையில் கனகா மரணத்தை எதிர்பார்த்து புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.

கனகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளகூட யாரும் இல்லை. அவர் யாரையும் அனுமதிக்க வில்லை என்று அந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்போது அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை நிர்வாகத்திடம் தன்னை சந்திக்க யாருக்கும் அனுமதி தரக்கூடாது என்ற கனகா கூறியிருக்கிறார். இதனால் மருத்துவமனை நிர்வாகம் யாரும் கனகாவை சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறுகிறார்கள்.

கருப்பு வெள்ளை காலத்து கனவு கன்னியின் மகள், வண்ண சினிமா காலத்தில் மின்னிய நாயகி இப்போது யாருமற்றவராக மரணப் படுக்கையில்...!!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard