ஒரு சிலரை தூரத்திலிருந்து பார்த்தால் அவரோடு நெருங்கிப் பழக ஆர்வம் கொள்ளுகிறோம். நெருங்கிப் பழகி அவர்களுடைய பெலவீனங்களை அறிந்த பிறகு அவர்கள் மீதான ஈர்ப்பு மங்கிப்போகிறது. அதன்பிறகு அந்த உறவே ஒரு சுமையாகவும் சலிப்பாகவும் மாறிப்போகிறது. அந்த உறவுக்காக பலரோடு மல்லுக்கட்ட வேண்டியதாகிறது. எது ஈர்த்ததோ அதுவே கசப்பாக மாறுகிறது. இனி என்ன, உன் சுயரூபம் அப்போதே தெரியாமற் போனதே என்று தன்னைத் தானே நொந்துகொண்டு அந்த உறவு நம்மைவிட்டு விலகுகிறது.
நான் நானாகவே இருக்கிறேன். நிறம் மாறும் உலகில் நிலைமாறா நண்பர் எனக்கு இயேசு மாத்திரமே.